(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 08 - சகி

Nenchil thunivirunthaal

மைதியான காலைப் பொழுது அது!! இறைவன் சூரிய நாராயணன் தனது மென்மையான கதிர்களை புவியவளின் மேல் பரப்பி நிலமகளுக்கு உயிரூட்டிக் கொண்டிருந்தான். இயற்கையின் அழகுக்கு ஈடு இணை என்பதே கிடையாது. எவருக்கேனும் தான் தான் எழில் ஓவியம் என்ற மமதை இருப்பின் அன்னவரை இயற்கையை உற்று நோக்க கூறலாம். உடனடியாக, அவரின் ஆணவம் நிச்சயம் சிரம் தாழும்!! ஆதி கதிரவன் மெல்ல எழும் சமயம் ஆழ்ந்த தியானத்தில், தென்றலின் வருடலோடு தன்னை முழுதுமாக மறந்திருந்தான் ஆதித்யா. அவனது அன்றாட வாழ்வில் ஜெபம், தவம் என்பது இன்றியமையாததாகும்!!மனிதன் என்றும் உலகை கட்டுக்குள் வைக்க நினைத்தால் அவன் முதலில் தன்னையும், தன் எண்ணங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பான் அவன். இதமான வேளை, மனதை ஈர்த்து ஆட்கொண்டிருக்க, குறித்தப் பொழுது கடந்ததும் நேத்திரம் திறந்தான் அவன். முதல் தரிசனமே சூரிய தரிசனம் தான்! கதிரவனை தனதிரு விழிகளுக்குள் அடக்கிக் கொண்டான் அவன். ஆதவனின் பிம்பத்தை உள்வாங்கியவன் நீண்ட நேரமாக ஆதவனையே அவனையே தரிசித்துக் கொண்டிருந்தான்,அதில் அவனுக்கு ஒரு இன்பம்!!

“ஆ….ஆதி…?” பரிசய்யமான குரல் ஒன்று பின்னாலிருந்து ஒலிக்க, புன்முறுவலோடு திரும்பினான் அவன்.

“சொல்லும்மா!” வந்திருந்த மாயாவை புன்முறுவலோடு எதிர்கொண்டப்படி எழுந்தான் ஆதித்யா.

“அம்மா! உங்களுக்கு டீ கொடுத்து அனுப்பினாங்க!” என்று கோப்பைத் தட்டை அவன் முன் நீட்டினாள். அவனிடத்தில் ஓர் புன்னகை!!

“தேங்க்யூ!” அதிலிருந்த கோப்பையை எடுத்து அருந்தலானான். இருவருக்கும் இடையே எவ்வித உரையாடலும் இல்லை, மௌனமாகவே இருந்தனர். மனமோ, ஆயிரம் உரையாடலை நிகழ்த்தத்  திட்டம் வகுத்துக் கொண்டிருந்தது.  

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“நீ உன்னுடைய பெயிண்ட்டிங்க்ஸ் எல்லாம் பப்ளிஷ் பண்ணி இருக்கியா மாயா?” வினாத் தொடுத்தான் அவன்.

“இல்லை…நான் பண்ணதில்லை! அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது! தெரிந்தால் அவ்வளவுதான்!” என்றவளை மிக விசித்ரமாக பார்த்தான் அவன்.

“ஏன்? இவ்வளவு திறமை இருந்தும் அமைதியாக இருக்க காரணம் என்ன? உன் அடையாளத்தை நீ ஏன் மறைக்கணும்!” சில கணக்குகள் அவனுக்கு விளங்கவில்லை.

“திறமையால என்ன பண்ணப் போறோம்!யார் அம்மாக்கிட்ட திட்டு வாங்குறது?” அவளது வெகுளித் தனத்தை கண்டு நகைப்பதா, வருந்துவதா என்பதே விளங்கவில்லை அவனுக்கு!!!

“நீ இதுவரைக்கும் வரைந்தது எல்லாம் நான் பார்க்கலாமா மாயா?” அதுநாள்வரை எவரும் மதியாத தன் சுயத்தைக் குறித்து ஒருவன் விசாரிப்பது உண்மையில் அவளுக்குள் புத்துணர்வை தோற்றுவித்தது.

“தாராளமா! வாங்க காட்றேன்!” தனது அறைக்கு அவனை அழைத்துச் சென்றாள். என்றுமே இல்லாத உற்சாகம் அந்த அன்னநடையில் உள்ளதனை அவன் கவனிக்க தவறவில்லை. உத்வேகத்துடன் உள் நுழைந்தவள், தனது ஓவியப் புத்தகத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

“எனக்குப் பெயிண்டிங் பற்றி எல்லாம் தெரியாது!அதனால, நீயே, நீ வரைந்தது என்னன்னு சொல்லு!” என்று சோபாவில் அமர்ந்துவிட்டான். அவளிடத்தில் ஏதோ ஓர் புதுவித பரிணாமம். புத்துணர்வுடன் ஒவ்வொன்றாக விளக்க ஆரம்பித்தாள்.

“இந்தப் பெயிண்ட்டிங் ஒரு நாவலை பேஸ் பண்ணி வரைந்தேன். இது கிரேக்க புராணத்தை பேஸ் பண்ணது. ஆர்பியஸ், யுரிடைஸ் கதை!” ஒவ்வொன்றாக விளக்க ஆரம்பித்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதி நிலாவின் "தாரிகை..." - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“இது! என்னுடைய கற்பனை தான்! ஒரு அப்பா அவருடைய மகனை தன் தோளில் சுமந்து விளையாடுகிற மாதிரி கற்பனை செய்து வரைந்தேன்.” ஆதித்யாவின் கண்கள் முழுதுமாக அதிலே இலயித்துப் போனது. அவ்வளவு ஒரு நேர்த்தி! தத்ரூபம்! கண்களைப் பறித்தது அந்த ஓவியம். அதே காண்கையில் இனம்புரியா வலியை அடிநெஞ்சில் உணர்ந்தான் அவன். அவ்வோவியத்தை கையில் எடுத்து நீண்ட நேரமாக உற்று நோக்கினான்.

“அப்பா இங்கே பார்த்தீங்களா? எனக்கும் உங்களை மாதிரி பெரிய மீசை முளைத்திருக்கு!” தாயாரின் கண் மையில் மீசை வரைந்து தந்தையிடத்தில் காண்பித்த பொழுதுகள் நினைவு வந்தன.

“என்னுடைய உலகமே நீதான் ஆதி! நீ என் கூட இல்லைன்னா என்னுடைய உலகம் சுழல்வதை நிறுத்திவிடும்!” எவருக்கும் அதுபோன்ற தந்தையன்பு நிச்சயம் கிட்டியிராது! அவர் போல் வேறு ஒருவர் நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், இத்தனை வருட விலகல்! எல்லாம் அறியாமல் ஆற்றிய பிழைக்காக, உண்மையை மறைத்ததற்காக, ஒரு பெண்ணின் பவித்ரமான கண்ணீருக்காக! பெருமூச்சுவிட்டான் அவன். கண்கள் பனிக்க ஆரம்பித்தது, உடனடியாக சென்றாக வேண்டும், இந்தக் கண்ணீரை யாரும் கவனிக்கக் கூடாது!!!

“இதை நான் வைத்துக் கொள்ளலாமா?நான் பத்திரமா வைத்துப்பேன்!” அனுமதி வேண்டியவனை புரியாமல் பார்த்தான் மாயா.

“தாராளமா!” அவன் முகரேகையில் உண்டான மாற்றங்களை அவள் கவனிக்க தவறவில்லை..அந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டவன் ஏதும் கூறாமல் அமைதியாக புறப்பட்டான். நடையில் ஒரு தளர்வு தெரிந்தது, அந்தத் தளர்வு எதிரில் வரும் தாயையும், தம்பியையுமே கவனிக்விடாமல் அவனை அவனது அறை நோக்கி இழுத்துச் சென்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.