(Reading time: 5 - 10 minutes)

தொடர்கதை - தாரிகை - 31 - மதி நிலா

series1/thaarigai

ன்றைய தினம் கதிரவன் பூமியை ஆரத்தழுவிய நொடி முதல் நிஷாவின் மனதிற்குள் இனம்புரியா படபடப்புகள்..!! பள்ளிக்குள் வழக்கமாய் என்றென்றும் எதிர்கொள்ளும் அத்தனை கேலிப் பேச்சுகளும் பார்வைகளும்..!! மரத்துப்போயிருந்த மனமானது அனைத்தையும் ஒதுக்கித்தள்ளி முன்னேறத் தவித்திட.. என்னவோ அன்று எதுவோ புதிதாய்..!! என்னவென்று புரிந்திடவேயில்லை அவளுக்கு..!! ஆனால் தவறாய் அன்று என்னவோ நடக்கவிருக்கிறது என்ற உணர்வு மட்டும் மனதிற்குள் ரீங்காரமாய்..!!

கணித ஆசிரியரும் வேதியல் ஆசிரியரும் தத்தமது பாடங்களை எடுத்துவிட்டுச் செல்ல இதோ அதோ என்று மதிய இடைவேளை..!!

கீதாஞ்சலியின் கைப்பைக்குவத்திலான அடையும் அவியலும் நிஷாவின் வயிற்றை நிறப்பி காலை முதல் மனதில் ஓடிக்கொண்டிருந்த சங்கடங்களை கொஞ்சம் புறம்தள்ளிட.. மணி அடிக்கும் சில நொடிகளுக்கு முன் கழிவறையை நோக்கி பெண்ணின் பயணம்..!!

திருநங்கை என தன்னை அனைவரும் கண்டுகொண்டபின் நடக்கும் நிகழ்வுதான் அது..!! தன்னைக் கண்டு யாரும் முகம் சுளித்திடக்கூடாதென்ற நினைப்பில் அவள் எடுத்த முடிவு அது..!! கழிவறைப் பகுதி இருக்குமிடம் காலியாகும் சமயம் அங்கு செல்வது..!! இன்றும் அப்படியே..!!

ஆண்களுக்கான கழிப்பறைக்குள் நுழைந்தவள் தனது டிபன் பாக்ஸை சுத்தம் செய்துகொண்டிருக்க.. அவள் பின்னால் சின்ன சின்ன சலசலப்புகள்..!!

ஒரே தர்மசங்கட நிலை அவளுக்குள்..!!

“ச்சே.. யாரோ இருக்காங்க போலவே..”, மானசீகமாக தன்னைக் கடிந்துகொண்டவள்.. சிறு சங்கடத்துடன், “சாரி.. ஒரு நிமிஷம்.. நான் இப்ப கிளம்பிடுவேன்..”, என்றபடி திரும்பிட..!! அவளையே ஆராய்வதுபோல் அவளது வகுப்பு மாணவர்களுடன் வேறு சிலர்..!!

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மனதில் மணி அடித்திட.. இவள் அவசரமாய் விலகிச்செல்ல முயன்றிட.. ஒருவன் பெண்ணின்  கையைப் பிடித்திருந்தான்..!!

“என்ன பண்ற நீ..??”, கோபமாய் இவள் தனது கையை விடுதலை செய்ய முயற்சிக்க அவனது பிடி இறுகுவதாய்..!!

“ப்ச்.. விடுன்னு சொல்றேன்ல..”, தன்னை இவள் விடுவித்துக்கொண்ட நொடி.. அக்கும்பல் சூழ்ந்துகொண்டது அவளை..!!

“எ..ன்ன..ங்க..டா..?? எ..ன்ன..??”, அவர்களிடமிருந்து தப்பிச்செல்ல பெண்ணிவளின் கண்கள் அலைப்பாய்ந்திட..!!

“எங்களுக்கு ஒரு சந்தேகம்..”, என்றிருந்தான் கூட்டத்தில் ஒருவன்..!!

“என்ன சந்தேகம்..??”, உள்ளுக்குள் சென்றிருந்தது குரல்..!!

“அதெல்லாம் உன்க்கிட்ட விலாவரியா விளக்க முடியாது.. நீ உன் வேலையைப் பாரு.. நாங்க பார்த்துத் தெரிஞ்சுக்கறோம்..”, படு நக்கலாய் வேறொருவன் சொல்ல.. புரிந்துகொள்ள முடியாமல் கண்கள் சுருங்கிப்போனது நிஷாவிற்கு..!!

கண்டமேனிக்கு என்னவோ உளறுகிறார்கள்.. வழக்கம்போல் தன்னை மட்டம் தட்டுகிறார்கள் என்ற நினைப்பில் அலட்சியமாய் அவள் முன்னேற..!!

“எங்க போற..??”, என்றபடி வழி மீண்டும் மறைக்கப்பட்டது..!!

“பெல் அடிச்சாச்சு.. மிஸ் திட்டுவாங்க..”, விடுதலை பெறவே முயன்றுகொண்டிருந்தாள் அவள் அப்பொழுதும்..!!

“அது அடிச்சா அடிச்சிட்டுப் போவது.. நீ உன் வேலையை இன்னும் முடிக்கல..”, சட்டமாய் பின்னிருந்து ஒரு குரல் கட்டையாய் ஒலித்திட என்னவோ தன்னுள் பிடித்துவைத்திருந்த தைரியமெல்லாம் வடிவதுபோல்..!!

“எ..ன்ன வே..லை..?? எ..ல்லா..ம்.. மு..டி..ச்சு..ட்டே..னே..”, வேர்த்து விறுவிறுத்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்க முயன்றாள் அவள்..!!

“பாத்ரூம் போல நீ..”, படு கேவலமாய் சிரிப்பு சத்தம்..!!

உடல் நடுங்கத்துவங்கிய பொழுதும் அவர்களைப் பார்த்து இவள் முறைத்து நிற்க..!! அந்த இடத்தை நிரப்பத் துவங்கியது கேலிப் பேச்சுகளும் சிரிப்பொலிகளும்..!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அழுதுறாதே நிஷா..”, தன்னுள் இவள் உருப்போட்டுக் கொண்டிருக்க.. சுற்றத்தின் பேச்சுக்கள் நாரகாசமாய்..!!

செவிகளுக்குள் விழக்கூடாத அத்தனை அத்தனை வார்த்தைகள்..!! உண்மையில் இவர்கள் படிக்கும் பிள்ளைகளா இல்லை பொறுக்கிகளா என்று தெரியாத நிலை..!!

“இதுவரைக்கும் இவளை மாதிரி ஒரு இது எப்படி ******* *************** ************* பார்த்ததேயில்லை.. ஒரு டெமோ காட்ட சொல்லு மச்சி..”, வக்கிரங்கள் சூழ்ந்த உலகம்போல்..!! பதின் பருவ வயதென்றல்ல.. எந்த வயதிலும் மனிதனாகப்பட்டவன் உதிர்த்திடக் கூடாத வார்த்தைகள்.. எவரின் செவிகளிலும் எட்டிடக்கூடாத வார்த்தைகள்..!!

வெடித்தெழுந்திருந்தாள் நிஷா..!!

“நீ எப்படிப் போவியோ அப்படித்தான்..”, காரமாய் இவள் உதிர்த்திட..!! நெற்றியைப் பதம்பார்த்திருந்தது சிறு கண்ணாடித்துண்டொன்று..!! சட்டென்று கண்கள் இருட்டிப்போனது அவளுக்கு..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.