(Reading time: 18 - 35 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 51 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

னந்தி அருளை பெண் கேட்டு அவர்கள் வீட்டிற்கு போக இருக்க, நானும் வருகிறேன் என்று அமுதனும் அன்னையுடன் தயாரானான்.

“நீ செஞ்சு வச்சிருக்க காரியத்துக்கு, நான் உன்னோட அம்மான்னு தெரிஞ்சா என்னை வீட்டுக்குள் கூப்பிடுவாங்களான்னு தெரியல.. இதுல நீ வேற வரேன்னு சொல்ற..

உன்னைப் பார்த்தா அவங்க மனநிலை எப்படி இருக்குமோன்னு சொல்ல முடியாது.. அதனால் இப்போ நீ வர வேண்டாம்.. நான் போய் பேசிட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டு போயிருந்தார்.

அவர் அப்படி கதிரோடு செல்வதாக சொல்லி கிளம்ப, அவனும் அலுவலகம் கிளம்பினான். ஆனால் அருள் என்ன பதில் சொல்வாளோ, என்று யோசித்து யோசித்து கவனத்தை வேலையில் வைக்க முடியாததால் திரும்ப வீடு வந்துவிட்டான். ஆனால் ஆனந்தி இன்னும் வீடு வந்திருக்கவில்லை,

“இத்தனை நேரமாக அங்கே என்ன செய்கிறார்கள்? ஒருவேளை அங்கே யாரும் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையா? அப்படியானால் அதை அன்னையால் தாங்கிக் கொள்ள முடியுமா?

அன்னை என்ன, முதலில் அருள் அவனை வேண்டாமென்று மறுத்தால், அதை அவனால் தாங்கிக் கொள்ள முடியுமா? எத்தனை எளிதாக அவள் குடும்பத்தில் உள்ளவர்கள் அவளை அப்படியே அவன் கையில் தர நினைத்தனர்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஆனால் அந்த நேரம் கொஞ்சம் கூட யோசிக்காமல், என்னென்னவோ காரணங்களை சொல்லி அவளை வேண்டாமென்று கூறியவன், இப்போது அவள் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்று தவிக்கிறான்.

அன்று அவர்கள் கேட்டபோது, கொஞ்சம் அவகாசம் கேட்டு பிறகு சொல்வதாக சொல்லியிருந்தாலும், அவனது மனம் அவனுக்கு புரிந்திருக்கும், ஆனால் எங்கே அப்படி யோசித்து பார்த்து சொல்ல வேண்டும் என்று கூட அவன் அப்போது நினைக்காமல் அப்போது அந்த பேச்சை மறுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டான்.

பின் லண்டன் திரும்பிய போது அவன் நினைவுகள் முழுமையும் ஆக்கிரமித்திருந்தது அருள்மொழி மட்டுமே,

முதன்முதலாய் அந்த அலுவலகத்தில் அவள் பயிற்சிக்கு வந்த போதே, அவனுள் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் தான் என்று சொல்ல வேண்டும், ஆனால் அதன்பின் அவளிடம் அவன் கண்ட சில குணநலன்கள், இவள் நமக்கு ஏற்றவளாக இருக்க முடியாது என்பதை அவனே அவனுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டான். அதனாலேயே அவள் பக்கமாக அவன் மனம் சாய ஆரம்பித்ததை அவன் உணராமலேயே இருந்துவிட்டான்.

ஆனால் கடைசியாக அவள் அவனை இனி தன்னை பார்க்கவே கூடாது என்று சொல்லி அனுப்பி வைத்த போது தான் அவன் மனம் அவளையே சுற்றி வந்துக்  கொண்டிருந்தது. உடனேயே அவளை பார்க்க அவன் மனம் துடித்தது. ஆனால் அடுத்து அவன் மனம் அவளை சிந்திக்காதபடி ஆனந்திக்கு உடல்நலம் சரியில்லாமல் போக, அன்னையை பற்றிய கவலையே அவனுக்கு பெரிதாக தெரிந்தது.

ஆரம்பத்தில் நோயின் தாக்கம் குறைவாக இருக்கும்போதே வந்திருந்தால் மருந்துகளை வைத்து குணப்படுத்தியிருக்கலாம் என்று மருத்துவர்கள் சொன்ன போது அவனுக்கு அவன் மீதே தான் கோபம் வந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

நோயின் தாக்கத்தில் வந்த உபாதைகளை ஆனந்தி கண்டும் காணாமல் இருந்ததினால் தான் இவ்வளவு தீவிரத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறது. அவனுமே அன்னை மீது அதிக அக்கறை கொள்ளாமல் விட்டுவிட்டானே,

அடுத்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்று சொன்னதும் ஆனந்தி இந்தியா செல்ல அடம்பிடித்ததும், என்னவோ அவனுக்குமே தற்சமயம் அங்கு செல்ல வேண்டும் என்று தோன்றியதால் தான் அவனும் உடனே ஒத்துக் கொண்டான்.

இங்கு வந்து  அருள்மொழியை திரும்ப பார்த்ததும் தான் இனி எப்போதும் அவளை விட்டு இருக்க முடியாது என்பதை நன்றாகவே உணர்ந்துக் கொண்டான். ஆனால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளிடம் திரும்ப பேசுவான், அந்த சமயம் தான் கதிர் மூலம் ஆனந்திக்கு விஷயம் தெரிந்து  அவரே இந்த விஷயத்தில் முன்னின்று இந்த திருமணத்தை பற்றி பேசப்போவதாக சொல்லவும் அவனும் அதையே ஏற்றுக் கொண்டான். ஆனால் அருள்மொழி அதற்கு ஒத்துக் கொள்வாளா? என்ற கவலையோடு அவன் தவித்துக் கொண்டிருந்த போது ஆனந்தி வந்துவிட்டார்.

ஆனந்தியின் உடல்நிலை காரணமாக கதிரவனே அவரை வீட்டில் கொண்டு விட வந்தார். அவர் அங்கிருந்து செல்லும் வரை அவன் அமைதியாக இருக்க, “என்ன அவனோட விருப்பத்தோட தானே இந்த கல்யாண வேலையில் இறங்குற.. திரும்ப ஏதாச்சும் சொதப்ப போறான் பார்த்துக்க..” என்று சொல்லிவிட்டு சென்றார்.

“ஆமாம் இவர் எல்லாத்துலேயும் ஒழுங்கா இருக்காரா.. என்ன சொல்ல வந்துட்டாரு..” என்று அவர் சென்றதும் அமுதன் வாய்விட்டு கூற, ஆனந்தி அவனை முறைத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.