(Reading time: 18 - 35 minutes)

நிச்சயதார்த்திற்கான நாளும் வந்தது. மனதில் இருந்த குழப்பங்களை ஒதுக்கிவிட்டு மகி மகிழ்ச்சியோடு இருந்தான். எத்தனை நாள் கழித்து வீட்டில் உள்ளவர்களை பார்க்கப் போகிறோம் என்று நினைக்கும் போதே உற்சாகமானான்.

இதற்கும் அவர்களை விட்டு வந்து நீண்ட நாட்கள் ஒன்றும் ஆகவில்லை, இந்த நாட்களை விட அதிக நாட்கள் வீட்டிலுள்ளவர்களை பிரிந்து இருந்திருக்கிறான். ஆனால் அது வேறு பிரிவல்லவா?

இப்போது அவர்களை நெடுநாட்கள் கழித்து பார்ப்பது போல் ஒரு பிரம்மை, எப்போதும் விஷேஷம் என்றால் வீடே விழாக்காலம் போல் காட்சி அளிக்கும், நேற்றே மலர்கொடி, மணிமொழி அவரவர் கணவன்மாரோடு வந்திருப்பர். இன்னேரம் சித்தப்பா, சித்தி, இலக்கியா அனைவரும் வந்திருப்பர். வீடே கூச்சலும் கும்மாளமுமாக இருக்கும்.

போனமுறை அவனுக்கும் அருளுக்கும் நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்திருந்ததால் அவனால் அதில் மகிழ்ச்சியோடு கலந்துக் கொள்ள முடியவில்லை. இன்று மனதில் மகிழ்ச்சி இருந்தாலும் அங்கு இருக்கும் சூழ்நிலை அமையவில்லை.

வீட்டில் விசேஷம் என்றால் இவனுக்கும் அறிவுக்கும் அங்கு நிறைய வேலைகள் காத்திருக்கும், அதை வாங்க இதை எடுக்க என்று பூங்கொடி இருவரையும் வேலை வாங்கிக் கொண்டே இருப்பார். அதனாலேயே அறிவு நேற்று காலையிலிருந்து அங்கு தான் இருக்கிறான்.

இவனால் அங்கு செல்ல முடியவில்லை, மாலை தான் விசேஷம் என்பதால் ரெஸ்ட்டாரண்ட்க்கு சென்றவன், விரைவில் வந்து சுடரொளியை அழைத்துக் கொண்டு நிச்சயதார்த்தம் நடக்கும் மண்டபத்திற்கு நேராக செல்லலாம் என்று சொல்லியிருந்தான்.

அதற்கேற்றார் போல் கொஞ்சம் விரைவாகவே ரெஸ்ட்டாரண்டில் இருந்து கிளம்பியவன், புது ஆடைகள் எதுவும் வீட்டில் இல்லை என்பதால் அவனுக்கு தேவையான உடையை எடுக்க ஷாப்பிங் சென்றவன், அப்படியே சுடரொளிக்கும் ஒரு நல்ல புடவையாய் தேர்ந்தெடுத்து வாங்கியவன், இருவருக்குமான புது ஆடைகளோடு வீட்டிற்குச் சென்றான்.

அதற்கு முன்பே இருப்பதிலேயே ஒரு நல்ல சல்வாரை எடுத்து உடுத்திக் கொண்டு சுடரொளி தயாராக இருந்தாள். வரவில்லை என்று சொன்னவளை தக்க காரணம் சொல்லி சம்மதிக்க வைத்திருந்தான்.

அந்த மகிழ்ச்சியில் அவன் வருவதற்கு முன்பே தயாராகி இருந்தவள், “நான் ரெடியாகிட்டேன்.. நீ சீக்கிரம் கிளம்பு மகிழ் போகலாம்..” என்று அவசரப்படுத்தினாள்.

“இப்படியேவா வரப் போற..” என்று அவன் கேட்டதும், தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்டவள்,

“ஏன் இந்த ட்ர்ஸ்ல நான் நல்லா இல்லையா?” என்றுக் கேட்டாள்.

“நல்லாத்தான் இருக்க.. ஆனா நான் அன்னைக்கே என்ன சொன்னேன்.. நீ இப்போ சார்லியோட ப்ரண்டோ, இல்ல கதிர் மாமாவோட பொண்ணோ இல்லை. நீ என்னோட மனைவி..

நம்ம வீட்ல ஏதாவது விசேஷம்னா கல்யாணம் ஆனவங்க புடவை தான் கட்டுவாங்க.. நீ மட்டும் சல்வார் போட்டா நல்லா இருக்குமா? இங்கப்பாரு உனக்காக புடவை வாங்கியிருக்கேன்.. இதை கட்டிக்கோ..” என்று அவளுக்காக வாங்கி வந்ததை காட்ட, அவளோ திருதிருவென விழித்தாள்.

“என்ன ஆச்சு..”

“எனக்கு புடவை கட்டத் தெரியாது மகிழ்.. சல்வாரே நான் இங்க வந்து தான் போட்றேன்.. அப்புறம் புடவை எப்படி கட்டத் தெரியும்..” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள்.

“அடக்கடவுளே கல்யாணமே ஆகிடுச்சு.. ஆனா இன்னும் உனக்கு புடவை கட்டத் தெரியாதா?” என்றுக் கேட்டு சிரித்தவன்,

“கவலைப்படாத எனக்கு புடவை கட்டத் தெரியும், அதனால நானே உனக்கு புடவை கட்டி விட்றேன்..” என்றதற்கு இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள்.

“மகிழ் வீட்ல எல்லோரும் ஊருக்கு போயிட்டா சமைக்கத் தெரியும்னு சொன்ன ஓகே.. ஆனா புடவை கட்டத் தெரியும்னு சொல்றது ஓவர்..”

“நிஜமா தான் சொல்றேன் சுடர்.. எனக்கு புடவை கட்டத் தெரியும்..” என்று அவன் சொன்னதும், அவள் அவனை குழப்பமாக பார்க்க,

“முழுசா சொன்னாத்தான் புரியும்.. நான் +2 படிக்கும் போது ஸ்கூல் ட்ராமால லேடி கெட்டப் போட்டேன்.. அப்போ எனக்கு மீசை ஒழுங்கா இருக்காதுன்னு ஷேவ் செஞ்சுட்டு தான் போவேன்..  அதனால லேடி கெட்டப் எனக்கு பொருந்தும்னு டீச்சர் எனக்கு அந்த வேஷம் கொடுத்துட்டாங்க..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

டெய்லி நடிச்சப்போ எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை.. ஆனால் ரிகர்ஸலோட கடைசி நாள் எல்லோரும் ஒருமுறை காஸ்ட்யூமோட ரிகர்ஸல் செய்யணும்னு சொல்லிட்டு எனக்கு டீச்சரே புடவை கட்டினாங்களா.. எனக்கு ஒருமாதிரி கூச்சமா இருந்துச்சு..

அதனால வீட்டுக்கு வந்ததும் அம்மாக்கிட்ட சொல்லி முதலில் புடவை கட்ட கத்துக்கிட்டேன்.. அப்புறம் மறுநாள் நாடகத்துல எனக்கு நானே புடவை கட்டிக்கிட்டேன்.. அதைப்பார்த்து டீச்சர் என்னை பாராட்டி, கூட இதுபோல லேடி கெட்டப் போட்ட பசங்களுக்கும் என்னையே புடவை கட்டி விட சொன்னாங்க தெரியுமா?” என்று காலரை தூக்கி அவனுக்கு எப்படி புடவை கட்டத் தெரியும் என்ற செய்தியை பெருமையாக கூறினான்.

கேட்டுக் கொண்டிருந்தவள் உடனே சிரித்தாள்.

எத்தனை நாட்கள் கழித்து அவள் சிரிப்பை காண்கிறான். அவளை ரசித்து பார்த்துக் கொண்டிருக்க, அவளோ..

“மகிழ் அப்போ அவனா நீ..” என்று சொல்லிவிட்டு திரும்ப சிரிக்க,

அவள் சொல்வது புரிந்தவனாக, “அடப்பாவி உனக்கு அந்த காமெடி புரியலன்னு சொன்னதும் அதுக்கு விளக்கம் கொடுத்ததே நான் தான், என்னையே நீ அப்படி சொல்றீயா.. உன்னை..” என்றவன்,

சிரித்து கொண்டிருந்தவளை அவள் எதிர்பார்க்காத நேரம் தன் அணைப்பில் கொண்டு வந்தவன்,

“நான் அவனா இல்லையான்னு நிருபிச்சுக் காட்டட்டுமா?” என்று கண்ணடித்துக் கேட்க,

அதன் அர்த்தம் புரிந்தவளின் வெண்மேனி சிவந்துப் போனது. மகிழின் தாபமான பார்வையில் அவள் உருகிக் கொண்டிருக்க, ஆனாலும் சுதாரித்துக் கொண்டவள்,

“அதுக்கு முதலில் நீ என்னை முறைப்படி கல்யாணம் செய்துக்கோ..” என்று சொல்லியப்படியே அவனது அணைப்பிலிருந்து விலகினாள்.

“அப்பா இதைக் கேட்டு கேட்டு என் காதுல இரத்தமே வந்துடுச்சு..” என்று சொல்லியப்படியே அவன் காதை துடைப்பது போல் பாசாங்கு காட்டினான்.

“வரும் வரும் இன்னும் கூட ரத்தம் வர அளவுக்கு சொல்வேன்..” என்று சொல்லி அவனுக்கு ஒழுங்கு காட்டினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "சுஷ்ருதா..." - வித்தியாசமான காதல் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“சரி டைம் ஆகுது பாரு.. வா நான் உனக்கு புடவை கட்டி விட்றேன்..” என்று சொல்லி அவன் அழைக்க,

“ம்ம் வேண்டவே வேண்டாம்.. நீ சரியில்லை, அதனால உன்னை நம்ப முடியாது.. நான் ஹவுஸ் ஓனர் ஆன்ட்டிக்கிட்ட போய் கட்டிக்கிறேன்..” என்றவள் புடவையை எடுத்து தன் மேல் வைத்துப் பார்த்து,

“சூப்பர் செலக்‌ஷன் மகிழ்.. ஆமாம் ப்ளவுஸ் எனக்கு சரியா இருக்குமா?” என்றுக் கேட்க,

“இது தேவையான அளவுக்கு ஆல்டர் செஞ்சுக்கலாம்.. ஹவுஸ் ஓனர் ஆன்ட்டிக்கிட்ட மெஷின் இருக்கு.. அவங்களே சரி செஞ்சு கொடுத்திடுவாங்க..” என்றான்.

“சோ ஸ்வீட் மகிழ்..” என்று அவன் எதிர்பார்க்காத சமயம் அவன் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டுக் கொண்டவள், அவன் வியப்பாக பார்க்கவும் கண்ணடித்துவிட்டு சென்றவளின் மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருக்க, இன்னும் சிறிது நேரத்தில் நிச்சயதார்த்த விழாவில் அது காணாமல் போகப் போவது தெரியாமல், அவள் உற்சாகத்தோடு சேலை கட்டிக் கொள்ள சென்றாள்.

உறவு வளரும்...

Episode # 50

Episode # 52

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.