(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - சிவகங்காவதி - 05 - ஸ்ரீ

sivaGangavathy

சிறுவெண்காக்கைப் பத்து

நெய்தல் நிலக் கருப்பொருள்களில் ஒன்று சிறுவெண் காக்கை. இக்காக்கை இடம் பெறவும் அதன்வழி உட்பொருள் விளங்கவும் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி சிறுவெண்காக்கைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை 

கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப் 

பயந்துநுதல் அழியச் சாஆய் 

நயந்த நெஞ்சம் நோய்ப்பால் அஃதே!- (161)

(கருங்கோடு = கரிய கிளை; புன்னை = புன்னை மரம் ; பயந்து = பசந்து; நுதல் அழிய = நெற்றி ஒளி மங்க; சாய் = மெலிந்து; நயந்த = விரும்பிய; நோய்ப்பாலஃது = நோய்வாய்ப்பட்டது)

என்ற பாடலில் தலைவன் ஒருவழித்தணந்த வழி, தலைவி ஆற்றாமை மிக்கு உரைக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் சிறுவெண் காக்கை வழி உள்ளுறை ஒன்றும் வெளிப்பட்டுள்ளது. (ஒருவழித் தணத்தல் - அலர் அடங்குவதற்காகத் தலைவன் சில நாட்களுக்குத் தலைவியைக் காண வாராதிருத்தல்)

யிற்று ஆறு மாத கால பயணத்தை முடித்து இஷானின் இடத்திற்கு வந்து இருதினங்கள் கடந்திருந்தது.இறுதியாய் கண்ட தாய் தந்தையின் முகமே மனதை முழுதாய் ஆக்கிரமித்திருந்தது.அனைத்துப் பாளையக்காரர்களின் உதவியும் திரட்டி நஸீமிற்கு எதிராய் போர் தொடுத்து எத்தனை விரைவில் முடியுமோ அத்தனை விரைவில் அவளை மீட்க வருவதாய் வாக்களித்தார் சேதிராயன்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இங்கு அழைத்து வரப்பட்டவள் கடும் தண்டனை பெற்ற கைதிகளுக்காக அமைக்கப் பட்டிருந்த பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டாள்.அவனின் சிற்றரசே அத்துனை பிரம்மாண்டமாய் இருந்தது.அதுவே சிவகங்காவதியின் மன வலிமையை சற்று அசைத்துப் பார்ப்பதாய் இருந்தது.

சற்றும் சூரிய ஒளிப்புகாத பாதாளச் சிறை.தீப்பந்தங்களின் உதவியோடு சற்றே ஒளிப் பரப்பிக் கொண்டிருந்தது.மிகப் பெரிய ஒற்றை அறையில் சிறைக் கம்பிகளுக்கு மறுபுறம் உடலும் மனமும் சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள் சிவகங்காவதி.

நஸீம் தான் வந்த செய்தியை தெரிவிப்பதற்காக பேரரசரைச் சந்திக்கச் சென்றிருந்தான்.நடந்தவற்றை அவரிடம் விளக்கியவன் நாட்டைக் கைப்பற்ற முடியாததை வருத்தத்துடன் தெரிவித்தான்.

“நஸீம் கலங்காதே இதுவே நமக்கு முதல் வெற்றிதான் நிச்சயமாய்.அவர்கள் குலப் பெண்ணை காப்பதற்காகவாவது நமக்கு அவர்கள் அடிபணிந்து ஆகத்தான் வேண்டும்.வேண்டுமென்றால் பார்,இன்னும் சில திங்களில் நமைக் நோக்கி நல்ல செய்தி கண்டிப்பாக வரும்.”

“ஷாகின் ஷா எனக்கென்னவோ அந்த நம்பிக்கை குறைவாகத் தான் இருக்கிறது.அதிலும் அந்தப் பெண் இருக்கிறாளே அத்துனை மனதிடத்தை இதுவரை எந்தப் பெண்ணிடமும் நான் கண்டதில்லை.இத்துனை ஆடவர் முன்னிலையில் சிறிதும் அச்சமின்றி அந்த விழிகளில் துளியும் பயமின்றி நிற்கிறாள்.”

“ம்ம் பின் எதற்காக அவளை உயிரோடு வைத்திருக்கிறாய் பேசாமல் அவள் கதையை முடித்துவிடு.”

“இல்லை ஷாகின் ஷா அந்த திமிரை சிறிதேனும் அடக்க வேண்டும் அவள் கண்ணில் பயத்தைக் காண வேண்டும்.இந்த நஸீமை பார்த்தால் ஆண்களே ஒரு அடி பின்னால் எடுத்து வைப்பார்கள்.அப்படியிருக்க சாதாரண ஒரு பெண்ணாய் இருந்து கொண்டு எனை அவமதித்து விட்டாள்.

அவளை என்னிடம் கெஞ்சி நிற்கச் செய்யாமல் என் ஆத்திரம் தீராது.வாழும் போதேயான நரகத்தை அவள் உணர வேண்டும்.”,என்று கண்கள் சிவந்து போய் கூறுபவனை சமாதனப்படுத்த தோன்றாது மௌனமாய் அவன் பேச்சை ஆமோதித்து அனுப்பினார்.

தன் நாட்டிற்கு வந்தவன் அவளைக் காண சிறைக்குச் சென்றான்.கண்கள் மூடி தியானத்தில் இருந்தவளின் முகத்தில் தெரிந்த தீட்சணியம் அவனை மேலும் மேலும் அவள் மேல் வெறி கொள்ளச் செய்தது.அனைத்தையும் மனதிற்குள் அடக்கியவனாய்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூர்ணிமா செண்பகமூர்த்தியின் "இதோ ஒரு காதல் கதை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“என்ன இளரசியாரே தங்களின் வசதிக்கு ஏதேனும் குறையிருக்கிறதா?”

அவன் ஏளனப் பேச்சில் கண் விழித்தவள் சற்றும் அசையாது அவனையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.அதைக் கண்டு மேலும் கோபமடைந்தவனாய் சிறைக் கம்பிகளுக்கு அருகில் சென்றவன் ஆத்திரமாய் அதை அழுந்தப்பிடித்து நின்றான்.

“குறித்து வைத்துக் கொள்,இந்த திமிரும் ஆணவமுமே உன்னை பல இன்னல்களுக்கு தள்ளப் போகிறது.”

எவ்வித ஆர்பாட்டமுமின்றி மென்மையாய் சிரித்தவள்,”என் பார்வையும் முகமும் பிரதிபலிக்கும் உணர்வுக்குப் பெயர் தன்மானம் துணிவு.அதற்கு தாங்கள் வைக்கும் பெயர் ஆணவம் என்றால் இதில் என் பிழை ஒன்றும் இல்லையே!”

“ம்ம் தன்மானம் துணிவு… யா அல்லாஹ் உன் மேல் இருக்கும் அத்தனை வன்மத்தையும் மீறி உன்னிடம் ஒன்று கூறிய ஆக வேண்டும் உன்னைப் போன்ற பெண் ஒருத்தியை என் வாழ்வின் இத்தனை வருடத்தில் நிச்சயம் கண்டதில்லை.இதற்காகவே உன்னை மிக கொடிய வழியில் சிறப்பாய் கவனிக்கிறேன் சி..கங்கா. ஹா உன் பெயரை முதலில் மாற்ற வேண்டும்.கங்கா..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.