Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 15 - மீனு ஜீவா - 5.0 out of 5 based on 2 votes
Change font size:

"என்ன பொன்னி ஏதோ பேசனும்னு சொன்ன ஆனா ஒன்னும் பேசம என் முகத்தப் பாக்குறதும் அப்புறம் தரையப் பாக்குறதும்மா இருக்க. ஒன்னும் பேச  மாட்டிங்குற"

"அது வந்து வெண்ணிலாம்மா"

"ஹூம் நீ வந்து போயின்னு இழுக்குறதுக்குள்ள வீடே வந்துருச்சு பாரு" என்றாள் வெண்ணிலா கௌவுதமின் பங்களாவைக் காட்டி.

"ஆமாம்மா.  சரி நீ போ நான் நாளைக்குச் சொல்லுறேன்"

"இல்ல ஏதோ போசனும்னு வந்துட்டு பேசாமப் போனா எப்படி இரு நானும் உன்கூட குடியிருப்பு வரைக்கும் வரேன்" என்று கூறிவிட்டு பங்களாவின் வாச்மேனிடம் சென்று கௌவுதம் வந்துவிட்டானா என்று கேட்டாள் அவர் ஆம் என்றதும் "சரி அவர் என்ன பத்தி கேட்டா குடியிருப்பு வரைக்கும் போயிருக்கேன்னு சொல்லிடுங்க.  கேட்டாச் சொல்லுங்க போன் பண்ணி சொல்ல வேண்டாம் புரியுதா" என்றுவிட்டு தன் கையில் இருந்த போனையும் ப்பைலையும் அவரிடம் குடுத்துவிட்டு பொன்னியோடு தொழிலாளர் குடியிருப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

"இந்த விசயத்துல எப்படி முடிவெடுக்குறதுன்னு தெரியல.  என் மாமா முடிவெடுக்குற உரிமைய என்கிட்டையே விட்டுடுச்சு நான் என்ன நினைக்குறேனோ அதுதான் அது முடிவுன்னு சொல்லிடுச்சு.  ஆனா எனக்குதான் இது சரியா வருமா வராதான்னு ஒரேக் குழப்பமா இருந்தது.  யார்கிட்டயாவது கேட்கலாம்னு யோசிக்குறப்பத்தான் உன் ஞாபகம் வந்துச்சு நீ மத்தவங்க மாதிரி எனக்கென்னன்னு இல்லாம அக்கறையாக் கேட்ப படிச்ச பொண்ணு வேர அதுநாலத்தான் உன்கிட்டக் கேக்குறேன்"

"ஐயோ நீ இன்னும் விசயம் என்னன்னு சொல்லவே இல்ல பொன்னி.  மொதல அதச் சொல்லு" என்றாள் போலியாய் பல்லைக் கடித்துக்கொண்டு.

"இஇஇஇ.... சொல்றேன் சொல்றேன்.  அதுவந்து உனக்கேத் தெரியும் எனக்கும் மாமாவுக்கும் கல்யாணமாகி பத்து வருசமாச்சுன்னு.  இன்னும் எங்களுக்கு குழந்தைங்க இல்ல.  உனக்கு என் தங்கச்சி வள்ளியத் தெரியுமா"

"ம்ம்...தெரியும்.  திருப்பூர்ல கல்யாணம் பண்ணிக் குடுத்துருக்கீங்கள்ல"

"ம்ம்...  அவளேதான் அவளுக்கு தலப்பிறசவத்துல ரெட்டக் குழந்தைங்க ஒரு பொண்ணு ஒரு பையன் அடுத்த வருசம் ஒரு பையன் பொறந்தான்.   இப்பா அந்த ரெட்டக் குழந்தைங்களுக்கு 7 வயசாகுது கடைசிப் பையனுக்கு 6 வயசு.  அவளும் அவ புருஷனும் பனியன் கம்பேனிலதான் வேல பாக்குறாங்க.  அவ நேத்து போன் பண்ணி 'நான் மூனு கொழந்தைங்கள வச்சுக்கிட்டு கஸ்டப்படுறேன் நீவேனா கடைசிப் பையன தத்து எடுத்துக்கோ' ன்னு சொன்னா. எனக்கு இது சரியா வருமா வராதான்னு ஒரேக் குழப்பமா இருக்கு.  அதுதான் உன்கிட்டக் கேட்டேன்" என்று ஒருவழியாக பொன்னி கூறி முடித்தாள்.  அதற்குள் அவர்கள் குடியிருப்பிற்குள் வந்துவிட்டிருந்தனர்.  குடியிருப்புக்கு நடுவில் குழந்தைகள் விளையாடுவதற்காக சிறிய அளவில் ஒரு பார்க் அமைத்திருந்தனர்.

பொன்னி சொல்வதை பொருமையாக் கேட்ட வெண்ணிலா  "ம்ம்.. வா பொன்னி அந்த பெஞ்சுல உட்காந்து பேசலாம்" என்று பார்க்கில் போடப்பட்டிருந்த பெஞ்சை நோக்கி நடந்தாள்.  இருவரும் சென்று அந்த பெஞ்சில் அமர்ந்தனர்.

"நான் சொல்றதுதான் சரின்னு நான் சொல்ல வர்ல பொன்னி.  இந்த விசயத்துல எனக்கு தோன்றத நான் சொல்றேன்.  நான் சொல்றதத்தான் நீ கேக்கனும்னு இல்ல நீ யோசிச்சு முடிவெடு புரியுதா"

"அட நீ சும்மா சொல்லு வெண்ணிலாம்மா.  நான்தான உன்கிட்ட வந்து கேட்டேன்.  ஓம்மனசுக்குப் பட்டதச் சொல்லுமா"

"ம்ம்.. சரி.  நீ உன் தங்கச்சி பையனுக்கு 6 வயசாகுதுன்னு சொல்ற.  அது ஓரளவுக்கு விவரம் தெரிஞ்ச வயசுதான்.  6 வயசு வரைக்கும் இவங்கதான் தன்னோட அப்பா அம்மா அக்கா அண்ணன்னு வளர்ந்த பையன திடீர்னு தனியாப் பிரிச்சு கூட்டிட்டு வந்து இனிமேல் நான்தான் உன்னோட அப்பா அம்மான்னு சொன்னா அந்தப் பையன் அத எப்படி எடுத்துக்குவான்னு நமக்குத் தெரியாது இல்லையாப் பொன்னி"

"ம்ம்... ஆமாம்மா"

"அந்தப் பையனோட அம்மா அவன் மனசமாத்தி உங்ககூட அவன அனுப்பி வச்சு நீங்க என்னதான் அவன அவன் அப்பா அம்மாவுக்கு மேல நல்லாப் பாத்துக்கிட்டாலும் அது சில சமயங்கள்ல அவனுக்குப் புரியாமப் போகலாம்.  அப்போ இவங்க தன்னோட குடும்பத்துக்கிட்ட இருந்து தன்னப் பிரிச்சுட்டு வந்தவங்கங்கிற எண்ணம் அவன் மனசுல வந்துருச்சுனா அவனால உங்கள என்னைக்கும் அவனோட சொந்த அப்பா அம்மாவாப் பாக்க முடியாது இல்லையா"

"ம்ம்..."

"அதுமட்டுமில்ல இன்னைக்கு உன் தங்கச்சி கஸ்டப்படலாம்.  ஆனா காலம் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்குறது இல்ல.  ஒரு பழைய பழமொழி சொல்லுவாங்க 'இருபது வருசம் தாழ்ந்தவனும் இல்ல இருபது வருசம் உயர்ந்தவனும் இல்ல'ன்னு அதனால நாளைக்கு உன் தங்கச்சி நல்ல நிலைமைக்கு வரலாம்.  நான் ஒன்னும் அவங்க வர வேண்டாம்னு சொல்லல நல்லா வரட்டும்.  ஆனா அந்த சமயத்துல அவங்க வந்து என் குழந்தைய திருப்பிக்கொடுன்னு கேட்டா என்ன பண்றது.  நீ என்னதான் அந்தப் பையன சட்டப்படி தத்து எடுத்திருந்தாலும் உன் தங்கச்சி உன்கிட்ட வந்து 'நான் பெத்த மகன எனக்கு திருப்பிக்கொடு'ன்னு  அழுதா அத உன்னால தாங்க முடியுமா.  அப்படி ஒரு நெலம வந்தா அது அந்தப் பையனையும் சேர்த்து உங்க எல்லாருக்குமே கஸ்டம்தான்"

About the Author

Meenu Jeeva

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 15 - மீனு ஜீவாBahubali 2018-12-04 15:21
Meens.. Super ah kondu pora dr story ah😘😘.. Restaurant la ena pesinaanga??! :Q: Eagerly waiting for the next chap..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 15 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-12-05 15:26
Thank u thank u so much frd. Keep reading and share ur comments :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 15 - மீனு ஜீவாSindhu ramesh 2018-12-04 15:12
Ipo enna vanthuchama intha Gowtham payalukku... :Q: eppadiyo valakkam Pola vennila samalichupa... Ana ippadi morachi pakkara vela yellam vendanu sollunga :no: keep rocking waiting for next update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 15 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-12-05 15:27
Ha...ha....ha. . :grin: thank u frd
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 15 - மீனு ஜீவாsaaru 2018-12-04 14:17
Nice update
Ha ha anga Enna nadandugowtham oooorrr :o :o :Q:
Vennila ponni ku soona advise super
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 15 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-12-05 15:28
Thank u frd. Keep reading :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 15 - மீனு ஜீவாAdharvJo 2018-12-04 11:08
Achacho Gowtham yen oorunu vararu :eek: Mithra reject panita feelings oh :Q: anyway adhu thaan namaku thevai :D Venila ethanai disturbed aga irundhalum ponni-k avanga kodutha clarity is superb (y) :clap: Fair one!! As always interesting and cool update ma'am :clap: :clap: but wrong place la freeze panitingale ma :sad: look forward for next update. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 15 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-12-04 12:02
:grin: thank u frd. Keep reading :thnkx:
Reply | Reply with quote | Quote
# MNN by Meenu JeevaSahithyaraj 2018-12-04 09:30
What Vennila said is 100% correct. Goutham Ku ennachu. Oru Vela Mithuva parthutu vanrha effect ah. Missing Ben's and Karthika aunt. soooooo sweet epi :cool:
Reply | Reply with quote | Quote
# RE: MNN by Meenu JeevaMeenu Jeeva 2018-12-04 12:03
Thank u frd (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 15 - மீனு ஜீவாSrivi 2018-12-04 06:36
Nalla oru edharthanama episode sis...good..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 15 - மீனு ஜீவாMeenu Jeeva 2018-12-04 12:03
Thank u frd.keep reading and share ur comments
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top