(Reading time: 21 - 42 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 20 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

ங்கு நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் லைவாக தனது அறையில் ஓடிகொண்டிருந்த டிவியில் பார்த்துகொண்டிருந்தான் மிதுனன். அவனின் மனம் இப்பொழுது சந்தியாவின் புறம் சாய்ந்தாலும் தீரனுடன் யாழிசையின் இந்த நெருக்கத்தை ( அங்கு நடந்த கல்யாண நிகழ்ச்சிகளை டிவியில் பார்த்தவனுக்கு எதிர்ப்பே தெரிவிக்காமல் யாழிசை விரும்பியே அவனை திருமணம் முடிப்பதுபோல் இருந்தது.) அவன் விரும்பவில்லை ஏனெனில் அங்கு நிலவும் சூழலும் அந்த இடம் ஆயுதம் தாங்கிய வேற்று நாட்டின் மனிதர்கள் சூழ்ந்த, ஒரு பயங்கரவாதிகள் இடம்போலவும் அதன் தலைவன் போன்று இருந்த தீரனுடன் மென்மையான பூபோன்ற யாழிசையின் திருமணம் நல்லதல்ல என்று தோன்றியது. தீரனின்  உண்மையான முகம் அறியாமல் யாழிசை அவனுடன் இணக்கமாக இருக்கிறாள் என்று நினைத்தான்.

எப்படியாவது வெளியில் அந்த கல்யாணம் நடக்கும் ஹாலுக்கு சென்று அவளை இதில் இருந்து காக்கவேண்டும் என்று வெளியில் செல்ல கதவை திறக்க முயன்றான் ஆனால் அது பூட்டப்பட்டிருந்தது. எனவே கதவை தட்டி திறக்கச்சொல்லி  கத்த நினைத்து அதை செயல் படுத்த  ஒருமுறை தட்டிவிட்டு அடுத்தஒலி எழுப்புவதற்குள் கிளிக் என்ற சத்தத்துடன்  கதவு திறந்தது. கையில் துப்பாக்கி ஏந்திய ஒருவன் அதிரடியாக உள்ளே நுழைந்து அவனின் துப்பாக்கியை மிதுனனின் நெற்றிபோட்டில் வைத்து  இனி ஒருதரம் இதுபோன்று ரகளை செய்ய முயன்றால் சுட்டுதள்ளிவிடுவேன் என்று மிரட்டி சென்றான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவனின் மிரட்டலை மீறுவது புத்திசாலித்தனமில்லை என்று அவனுக்கு புரிந்தது . இங்குள்ளவர்களிடம் ஹீரோயிசம் காண்பித்து தான் நினைத்ததை சாதிக்க நினைப்பது தற்கொலைக்கு சமமானதாக தோன்றியதால் படுக்கையில் அமர்ந்துவிட்டான்.

அதன்பின்னும் டிவியில் லைவ் ரிலே ஆகிகொண்டிருந்த வெளியில் நடக்கும் நிகழ்ச்சியையும் அங்கு அமர்ந்திருந்தவர்களையும் டிவியில் பார்த்துகொண்டிருந்த மிதுனனுக்கு அவனின் பெரியப்பாவும் ஆசானுமாகிய சத்திய மூர்த்தி அமர்ந்திருப்பதை பார்த்தவன் பரபரப்படைந்தான். இவர் எப்படி இங்கே என்ற கேள்வி மற்றும் குழப்பத்தில் ஆழ்ந்தபடி அமர்ந்துகொண்டிருந்தான்.

வெளியில் நடந்துக்கொண்டிருக்கும் கல்யாண பார்டியில் ஹீரோவும் ஹீரோயினியுமான தீரனும் யாழிசையும் வெவ்வேறு  மனநிலையில் இருந்தனர்.

அதனை தொடர்ந்து அவர்களின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட சொல்லி சத்திய மூர்த்தியை அணுகிய தீரன் தன்னை அவரிடம் வானவராயரின் மகன் என்று அறிமுகப்படுத்திகொண்டான்.

அவன் அவ்வாறு கூறவும் குழப்பத்துடன் அவனை பார்த்த சத்தியமூர்த்தியிடம்   எல்லாம் உங்கள் விருப்பபடியே நடக்கும் என்று பூடகமான வார்த்தையை உபயோகித்து அவரை கையெழுத்திட  சம்மதிக்க வைத்தான். அவரின் குழப்பத்திலேயே கையெழுத்தை பெற்றவனை அவர் எதுவோ கேக்க நினைக்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க உள்ளே போனதும் பேசலாம் என்றான்.

அதன் பின் மாதவனின் ஏற்பாட்டின் படி கல்யாணத்தை ரெஜிஸ்டர் செய்யும் நடவடிக்கையும் மளமளவென நடைபெற்றது. தீரன் கையெழுத்து போட்டபின் யாழிசை கையெழுத்திட பேனாவை வாங்கியவளின் கரம் நடுக்கத்தையும் கண்களில் கண்ணீரையும் வடிக்க தொடங்கியச்து.

அதனை சமாளிக்க தீரன் பேபி அதுதான் நல்லபடியாக மேரேஜ் முடிஞ்சுருச்சே பிறகு ஏன் எமோசனலாகிற என்று அவள் கல்யாணம் நல்லபடி முடிந்த ஆனந்தத்தில் எமோஷனல் ஆனதுபோல் மற்றவர்கள் நினைக்குமாறு வார்த்தைகளை கூறியபடி அவளை அனைத்துபிடித்து அவளின் கரம் பற்றி எடுத்துக்கொண்டுபோய் கையெழுத்திட வைத்தான்.

அவன்  முத்தமிட்டதில் கோபத்திலிருந்தவளுக்கு மேலும் அவனின் மேல் கோபம் அதிகரித்தது. ஆனால் அனைவரின் முன் தான் கோபத்தை வெளிப்படுத்தி காட்சி பொருளாக விரும்பாமல் தனியாக தீரன் மாட்டும் போது அவன் அக்ரீமன்ட் கல்யாணம் என்பதை மறந்து அத்துமீறி தன்னிடம் நடந்துகொள்வதற்கு உண்டன தண்டனையை வழங்க வேண்டும் என்று அப்பொழுது அமைதியாக இருப்பதுபோல் நடித்துகொண்டிருந்தாள்.

தீரனோ மிகவும் சந்தோசமான மனநிலையில் இருந்தாலும் அதன் பின் செய்ய வேண்டிய காரியங்களையும் அசைபோட்டபடி இருந்தான்.

அதன் பின் அனைவருக்கும் பருக குளிர்பானம் மற்றும் வொயின் டிரே ஏந்திய பணியாளர்கள் வர ஆரம்பித்ததும் இமாமி பார்ட்டியை கலகலப்பாகும் முயற்ச்சியை எடுத்துகொள்ள ஆரம்பித்தான். மாதவன் தனது குடும்பம் மற்றும் வந்திருந்த கவர்மென்ட் ஆபீசர்களை விருந்து ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு கூப்பிட்டு கொண்டு போனான் .

தீரனோ அங்கு இருந்தவர்களுடன் பிரண்ட்ஸ் என்ஜாய் தெ பார்டி என்று கூறிவிட்டு யாழிசையின் கரம் பிடித்து சத்திய மூர்த்தியிடம் வந்தவன் அவரையும் அழைத்துகொண்டு மிதுனன் இருந்த அறைக்குள் நுழைந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.