(Reading time: 21 - 42 minutes)

சத்திய மூர்த்தியிடம் நான் வானவராயரின் மகன் என்று தீரன் தன்னை அறிமுகப்படுத்தியதுமே அவனின் தோற்றம் வானவராயரிடம் பெருமளவு ஒத்துபோவதை அவர் ஆராய்ந்தார். ஏனெனில் அவனை பார்த்ததுமே மிகவும் அறிந்த தோற்றமுடன் அவன் இருப்பதாக அவருக்கு தோன்றியது. யாரடா.... இது என்று யோசனையுடன் இருந்தவரால் அவனின் உடை மற்றும் ஆங்கில மொழியில் அவன் உரையாடியவிதமும் தன்னிடம் தமிழை ஆங்கிலம்போல் உச்சரித்து பேசிய விதத்தையும் கண்டவரால் வெள்ளை வேஷ்டி சட்டையும் தெளிவான ஆங்கிலகலப்பில்லாமல் அழகாக கம்பீரமாக பேசும் வானவராயரின் உருவத்துடன் அவனை ஒப்பிட்டு பார்க்க மறந்துவிட்டவர், தீரன் தன்னை வானவராயர் ,மகன் என்று கூறிய பின்பே இருவருக்கும் உள்ள உருவ ஒற்றுமை அவரதது கண்களுக்கு பளிச்சென தெரிந்தது. சிறுவயதில் இருந்தது தனது உற்ற தோழனான வானவராயரின் வாழ்கையில் நடந்த அனைத்தையும் உடன் இருந்து பார்த்தவர் அவர்.

அப்படி பட்டவரிடமே தீரன் தன்னை வானவராயரின் மகன் என்று கூறியதும் ஒருநிமிடம் குழம்பி போனவர் அப்படியும் இருக்குமோ என்ற எண்ணம் தோன்றவும் அதை அவனிடம் கேட்டு தெளிவு படுத்துவதில் ஆர்வமானதால் தீரன் அவனுடன் அவரை வாங்க என்று கூப்பிட்டதும் வேகமாக எழுந்து அவனுடன் வந்தவர் கதவை திறந்து அந்த அறைக்குள் தீரன் நுழைந்ததும் அவரின் பின்னல் நுழைந்தவர் அறையில் உள்ளே தனது பாசமிகு மிதுனன் இருப்பதை கூட கவனிக்காமல் உன் அம்மா பேர் என்னப்பா என்ற கேள்வியைத்தான் அவனிடம் வைத்தார்.

தீரனின் பின் தனது பெரியப்பா சத்திய மூர்த்தி நுழைவதை பார்த்து அப்பா என்று மிதுனன் கூறுவதை கூட கருத்தில் கொள்ளாமல் அவர் தீரனிடம் உன் அம்மா பெயர் என்ன? என்று கேட்டதை பார்த்ததும் யோசனையுடன் மிதுனன் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரின் பின்னால் வந்த யாழிசையும் மிதுனனை அங்கு தலையில் கட்டுடன் கண்ட அதிர்ச்சியுடனும் , சத்திய மூர்த்தியை சிலநேரங்களில் தனது வானவராயர் அய்யா வீட்டில் பாத்திருந்த காரணத்தால் அவரின் முன் நடந்த தன்னுடைய இந்த கல்யாணத்தை பார்த்தவர் தன்னை அடையளம் தெரிந்துகொண்திருந்தால் ஏற்கனவே தான் வீட்டை விட்டு ஒருவனுடன் வந்துவிட்டேன் என்று அவர் செய்தியை கேள்விபடிருந்தால் பெற்றவரை தவிக்கவிட்டுவந்த பாதகி என்று முடிவெடுத்துவிடுவாரோ! என்று பலவாறு யோசித்துக்கொண்டே வந்தவள் அவர் தீரனிடம் உன் அம்மாவின் பெயர் என்று கேக்கவும் தன்னிலை மறந்து தனக்கு ஏற்கனவே தீரனின் மேல் இருந்த அவனுக்கும் பிறப்பின் ரகசியம் அறிய ஆர்வமுடன் அவனின் பதிலையும் அதற்கு சத்திய மூர்த்தியின் ரியாக்சனையும் காணும் ஆர்வமடைந்தாள்.

தீரன் சத்தியமூர்த்தி தன தாயின் பெயரை கேட்டதும் இவர் எதுக்கு என் அம்மாவின் பெயரை கேட்கிறார் அப்போ இவருக்கு என் மாமை தெரியுமோ....! அவ்வாறு தெரிந்தால் இவரிடம் எனக்கும் என் டாட்க்கும் இடையில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையை இவரின் மூலம் செய்வது எளிதாகிவிடும் என்ற எண்ணத்தில் அவரிடம் பத்மினி என்று கூறினான்.

அவன் அவ்வாறு கூறியதும் இப்போ கூட உன் அம்மாவிற்கு வந்து உன் அப்பாவை சந்திக்கணும் என்று தோன்றாமல் உன்னை மட்டும் அனுப்பியிருகிரார்களே! தனது மனைவி எப்படியும் தன்னை தேடி வந்துவிடுவாள் என்று நம்பிக்கையுடன் இருந்த மனிதரின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி, செய்யாத தவறுக்கு குற்ற உணர்ச்சியில் இத்தனை வருடம் தவிக்க விட்டுவிட்டாரே உன் அம்மா. அதுவும் வானவராயரின் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு போனதை கூட தெரியாமல். தனது மனைவிக்காகவே புழுவாக துடித்த மனிதர் இப்போ மகனான உன்னையும் பத்மினி மறைத்ததையும் தெரிந்தால் என்னமா துடிப்பாரோ... என்று கவலையுடன் பேசினார்.

அவர் கூறியதை கேட்ட தீரன் தன் அம்மாவும் அப்பாவும் பிரிந்ததுக்குபின் எதுவோ கதை ஒன்று இருக்குது போல என்று நினைத்தவன் அதை ஏதும் அறிந்திராததால் என் அம்மாவால் இனி எப்போதும் என் டாட்டை பார்க்கமுடியாது அங்கிள் என்றான்.

அவன் கூறியதும்  ஏன்...? என்ற கேள்வியை தாங்கிய அவரின் முகத்தை பார்த்தவன். ஷி இஸ் நாட் அலைவ் என்று சொல்லும் போது அவனது குரலில் அத்தனை வலி தெரிந்தது. மறுநிமிடமே அது பொய்யோ என யோசிக்கும் அளவு  உணர்ச்சிகளை மறைத்துவிட்டன் தீரன். மேலும் அவன் அவரிடம் “ஆனால் நான் இங்கு வந்ததுக்கு முக்கிய காரணம் என் மாம்தான்”. அவங்க என் டாட் வானவராயரை சந்தித்து சில பொருட்களை அவரிடம் ஹேன்ட்டோவர் செய்யச்சொல்லி என்னிடம் கொடுத்தார்கள் மேலும் அவர் என்னை மகன் என்று அவராக ஏற்காமல் நானாக அவரிடம் அந்த உறவை ஏற்படுத்தி கொள்ள முயலக்கூடாது என்று கூறினார்கள்.

ஆனால் சூழ்நிலையோ... நான் அவரை தேடிபோய் பார்க்ககூட முடியாதவகையில் என்னை நிறுத்திவிட்டது. எனவே என் மாம் ஒப்படைகச்சொன்ன பொருட்களை இப்போ உங்களின் மூலம் அவரிடம் கொடுக்க ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கு என்றான்.

அது என்னப்பா சூழ்நிலை பெத்த தந்தையைகூட காணமுடியாதவாறு என்று கூறியபடியே மிதுனனின் அருகில் வந்தவர் அவனின்  காயத்தை தடவிபார்த்தபடி கேட்டார்.

அவர் அவ்வாறு கூறியதும் தீரன் ,நான் அவரை வந்து பார்த்தால் என்னை இங்கு அனுப்பிய கார்பரேட் கிரிமினல்களின் கொலைபார்வை அவர்மீதும் இப்பொழுது இருக்கும் அவரின் குடும்பத்தின் மீதும் விழ வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் தனது உயிர்நண்பன் வானவராயரின் மகன் என்று அவ்வளவு நேரம் அவனின் மீது உண்டாகி இருந்த ஒரு பாசம் சட்டென்று மாயமாக சத்தியமூர்த்திக்கு மறைந்து. அந்த இடத்தில் அவன் தன மண்ணுக்கு ஊறுவிளைவிக்கும் எதிரி என்ற வெறுப்பு உண்டானது. அதன் காரணமாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.