(Reading time: 21 - 42 minutes)

தமிழ்நாட்டில் எங்கே ஸ்தோத்திரியம் கிடைக்கும் என்பதை தெளிவாக அறியாத கார்பரேட் கம்பெனிகள் தமிழ்நாடு முழுக்க தேடுதல் வேட்டைய நடத்த முடிவெடுத்தார்கள். வெளிப்படையாக செய்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த அவர்கள் மறைமுகமாக தங்களுடைய தேடுதல் வேட்டைய தொட்ர்கிறார்கள். என்னுடைய  நடிப்பினை முதலில் அவர்கள் நம்பவில்லை என்னிடம் இருந்து விஷயத்தை கறக்க அவர்கள் என் பைத்தியத்தை தெளியவைக்க டிரீட்மென்ட் கொடுக்கிறேன் என்ற பேரில் என்னை ரணகளமாக்கினர்.

என் நாட்டிற்காக என் தமிழ்க்குடியின் நலத்துக்காக நான் அதை பொறுத்துக்கொள்ள முயன்று மூர்ச்சையானேன். அதில் என் கைவிரல்கள் நான்கு துண்டிக்கப்பட்டது என்று அவரின் விரலில்லா இடதுகையை காண்பித்தார்.

அதை பார்த்தவர்களுக்கு கண்ணீர் பெருகியது அவர்களின் ரணசித்ரவதையை தாங்காத என் உடல் மூர்ச்சையடைந்தது நான் இறந்துவிட்டதாக நினைத்தவர்கள் என்னை குப்பை குடோனில் எரிப்பதர்கான குப்பைகளோடு குப்பையாக போட்டுச் சென்றுவிட்டனர் அவர்களின் பின்னாலேயே வந்த என் அசிஸ்டென்ட் மிஸ் நீரஜா அவர்கள் சென்றதும் தனியாக என்னை இழுத்துக்கொண்டு அவளின் காரில் ஏற்றிக்கொண்டுபோய் வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்தனர். ஆனால் அங்கே நான் இறக்காமல் உயிருடன் இருக்கும் விஷயத்தை எப்படியோ தெரிந்துகொண்டு என்னை கொல்லவந்தபோது தன்னுயிரைக் கொடுத்து என்னை நீரஜா காப்பாற்றி தப்பிக்க வைத்தாள்.

எனவே என்னை அறிந்தவர்கள் எனக்கு உதவி செய்பவர்கள் எல்லோரும் கண்காணிக்கப்படுகிறார்கள் என்ற என் யூகத்தால் யாரிடமும் என்னால் உதவிகேக்க முடியவில்லை. என் அடையாளங்களை மறைத்து கிழிந்த அழுக்கான உடையில் உண்மையான பத்தியமாக மாறி கோவில் பஸ்டாண்டுகளில் பிச்சைகாரர்களுடன் பைத்தியகாரனாக சுற்ற ஆரம்பித்தேன்  என்றார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மீதத்தை நான் சொல்கிறேன் என்று தீரன் ஆரம்பித்தான். நான் இங்கு வருவதற்கு மூன்றுமாதத்திற்கு முன் என் அம்மா இறந்தார்கள் அவர்கள் இறக்கும் நாளில் சி.என்.ஜி நிறுவனத்தின் இந்த ப்ராஜெட்டுக்காக பொருளாதார அடியாளாக என்னை இந்தியா போகும்படி கேட்டுகொண்டிருந்தான். நான் இதுவரை நேரடியாக எந்த நாட்டிற்கும் இது போன்று அடியாளாக சென்றதில்லை. நான் பிராங்குடன் தேர்ந்தெடுக்கும் அடியாட்களை அங்கு அனுப்பவும், அங்கு அவர்கள் என்னென்ன செய்யவேண்டும் என்ற திட்டம் போட்டு கைடன்ஸ் பண்ணும் வேலையை மட்டும்தான் செய்வேன். நான் பிறந்து வளர்ந்த அமெரிக்காவின் வளத்தை மேம்படுத்தவே இதை செய்கிறேன் என் நாட்டிற்கு நான் செய்யும் சேவகமாக கடந்த இரு இதுபோன்ற ப்ராஜெட்டுக்கு நான் பிளான் போட்டுப் பொது  பொருளாதார அடியாளாகிய தனது அடியாள்பணிக்கு அந்நாட்டிற்கு சென்றபோது எடுத்து அனுப்பப்பட்டட இயற்கைகாட்ச்சிகளின்  அந்நாடு இருந்த அழகையும் செழிப்பையும்  நிலைமையையும் வர்ணித்து கூறியிருந்தது. பணி நிறைவுற்று அதன் பின் சில வருடங்கள் கழித்து அங்கு வந்தபோது அவர் போட்டுவைத்த புள்ளியில் அரங்கேறியிருந்த கோர தாண்டவத்தால் சிதைக்கப்பட்ட அவலட்ச்சனமான அந்நாட்டின்  வர்ணத்தை வீடியோ மற்றும் போட்டோ பதிவுகள் பார்த்து அதிர்ச்சியானேன்.  . தன்னைபோன்ற பொருளாதார அடியாட்களின் ஏகாதிபத்தியத்திற்கு கீழ் கொண்டுவரப்படும் அத்தனை நாடுகளின் கதியும் இதுதான் என்பது தெரிந்த எனக்கு நான் செய்துகொண்டிருக்கும் பணியின்மேல் அதை செய்த உதவிய என் மேல் எனக்கு அருவருப்பாக வந்தது.

ஆனால் நான் பிடித்திருப்பது சிங்கத்தின் வால் என்பது எனக்கு அப்போது புரிந்தது. நான் அந்த பணம் விழுங்கிகளின் செயலுக்கு மூளையாக இருக்கும் வரைதான் அவர்கள் என்னை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவார்கள் அவர்களிடம் வேளைக்கு செல்பவர்களால் அவர்களின் வாழ்கையில் கடைசிவரை அதை உதறிக்கொண்டு வெளியேவர முடியாது. அவ்வாறு முயன்றால் அவர்களின் உயிர் அதன் பின் அரை நாள் கூட அவர்களின் உடலில் தங்காது என்ற நிதர்சனம் எனக்கு புரிந்தது. எனவே அவர்களிடம் நான் நட்பாகவே இருப்பதுபோல் நடித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு ப்ராஜெட்டுக்கும் இடையே குறைந்தது மூன்று ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகள் கூட இடைவெளி இருக்கும். இந்த நிலையில் தான் நான் நடிக்க ஆரம்பித்து எனகென்று தொழில் ஆரம்பித்து இதில் இருந்து எப்படி விலகுவது என்று யோசித்து கொண்டு அவர்களை எதிர்பதற்கு பணத்தையும் என்னை போன்றே கருத்துள்ளவர்களையும் கார்பரேட்டர்களின் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்டவர்களில் திறமையுள்ள அவர்களுக்கு எதிராக சிந்தனை கொண்டவர்களை இணைய தளத்தின் மூலம் தேடி என்னோடு ஒரு குழுவை உருவாக்க ஆரம்பித்துகொண்டிருந்தேன்.

அவ்வாறு நான் செய்துகொண்டிருப்பது யாருக்கும் தெரியாமல் மிக ரகசியமாக செயல் படுத்திகொண்டிருந்தேன். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு புது ப்ராஜெக்ட் செய்யணும் அதுவும் இந்தியாவில் செய்யனும் அதுவும் நானே பொருளாதார அடியாளாக அந்த நாட்டிற்கே போகணும் என்று பிராங்கால் கட்டாயப்படுத்தப்பட்டேன்.

இந்த ப்ராஜெக்ட் பற்றி கேட்டதும் இது மிகப்பெரிய அளவில் இதுவரை நான் செய்திருப்பதை விட யாருமே எதிர்பார்க்கமுடியாத உலகையே மிரளச்செய்யும் அளவு பணம் கார்பரேட்டர்களின் வசமாக இந்த ப்ராஜெக்ட் இருக்கும் என்று அவன் கூறியதில் இருந்தே தெரிந்துகொண்டேன்.

அப்போ இதற்கு ஸ்பான்சர் மிக அதிகளவில் கிடைக்கணுமே என்ற எண்ணம் எனக்கு தோன்றியது அந்த தொகையை கைப்பற்றினால் மட்டுமே நானும் நான் திரட்டி வைத்திருக்கும் கூட்டமும் கார்பரேட்டர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஆயுதத்தை கையில் எடுக்க பொருளாதார வளம் கிடைக்கும் என்று புரிந்தது. மேலும் இந்தியா வருவதன் மூலம் அவர்களின் கண்பார்ப்வையையிலும் கண்கானிப்பிலிருந்தும் என்னை சற்று மறைத்துக் கொள்ளலாம்.  கொஞ்சம் விலகி இருக்கும் சந்தர்ப்பம் எப்னகு கிடைக்கும் என்று பிளான் செய்த்து திட்டம் போட்டு காய் நகர்த்தினேன்.

தொடரும்

Episode # 19

Episode # 21

{kunena_discuss:1212}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.