(Reading time: 18 - 35 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 19 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

தீரன் இமாமியிடன் அங்கு ஏற்பாடாகிகொண்டிருந்த மேல்நாட்டு பாணி கல்யாண ஏற்பாட்டை மேற்பார்வை பார்க்கும்படி கூறிவிட்டு தான் ரெடியாகி வருவதாக சொல்லி அவனின் அறைக்குள் சென்றான்.

அங்கு வந்ததும் அவனின் கபோர்டில் இருந்த புதிய பார்டிவியர் ஆடையை எடுக்கமுயன்றவன் அதன் மேல் இருந்த பட்டுவேஷ்டி சட்டையை கையில் எடுத்துப்பார்த்தான்.

நேற்று கல்யானத்துகுரிய ஏற்பாட்டை மாதவனிடம் செய்யச்சொன்னதும் அதனைதொடர்ந்து இரவு வந்தவன் இந்துமுறைப்படி செய்ய அய்யரை பார்த்துவிட்டு மறுநாள் காலை 9.30க்கு முகூர்த்த நேரம் குறித்துக்கொண்டு அதனை தொடர்ந்து பட்டுவேஷ்டி சகிதம் வாங்கிகொண்டு சட்டைகான அளவை கேட்டுக்கொண்டு அதற்கான ஏற்பாட்டை வீட்டில் செய்வதற்குண்டான அனைத்து வேலைகளுக்குன்டான முன்னேற்பாட்டுடன் தீரனின் முன்வந்து நின்றான்.

ஹேய் மாதவ் என்ன சொன்ன முகூர்த்த நேரம், அய்யர், பட்டுவேஷ்டி என்று என்னதென்னதோ சொல்ற. இதெல்லாம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மேலும் அய்யர் வைத்து மந்திரம் சொல்லி வீட்டில் விசேசம் செய்யும் போது பயர் வைப்பாங்களே அதுபேர் கூட ஓமஹுண்டம் அதில் இருந்து வரும்  சுமோகிங் எனக்கு அலர்ஜி யூ.எஸ் இல் விசாலி ஆண்டி வீட்டில் செய்வதை பார்த்திருக்கிறேன்.

ம்...கூம் அப்படியெல்லாம் இப்போ வேண்டாம்.நீ என்ன செய்ற சப் ரேஜிஜ்டாரை இங்கேயே வரவை அப்படியே இந்த ,மேரேஜை ரிஜிஸ்டர் பண்ண என்ன பார்மாளிட்டி  என்று கேட்டு அரேஞ் செய் ஏனென்றால் என்னுடைய குடியுருமை அமேரிக்கா, நான் கல்யாணம் செய்வது இந்திய பெண் அதற்கான பார்மாலிட்டியை பக்காவாக ஏற்பாடுசெய்து  ரெஜிஸ்டர் பண்ண எந்த இடைஞ்சல் வராமல் பார்த்துக்கோ .

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தென் மை மாம் சொல்லியிருக்காங்க அமெரிக்காவில் மோதிரம் மாத்துவதுபோல் இங்கு குரூம் அதான் மாப்பிள்ளை பிரைட் கழுத்தில் மாங்கல்யம் போடனுமாமே.

என் மாமோட மாங்கல்யம் என்னிடம் இருக்கு அதை நான் அவளுக்கு போடுகிறேன்.தென் மை விஷ்காக அவளும் நானும் மாற்றிக்கொள்ள ரிங் வாங்கியிருக்கிறேன்.

தென் மேரேஜ் முடிந்ததும் பார்டிக்கு அரேஞ் செய்திருக்கிறேன் .என் மேரேஜுக்கு உன் பாமிலியை அழைத்துவா மாதவ் என்று சொல்லியவன் அவன் கையில் வைத்திருந்த வேஷ்டியை வாங்கியவன் இதை தா முதலில் இதை எப்படி வியர் பண்றது என்று நான் லேர்ன் செய்துகொள்கிறேன் பியூச்சரில் எதற்கும் யூஸ் ஆகும் என்று கூறியதை நினைத்துபார்த்தான்.

அதை கபோர்டிலேயே வைத்தவன் அன்றைய நிகழ்ச்சிக்காக தயாராகியவனுக்கு யாழிசை பற்றிய நினைவில் இன்று அவள் மற்றவர்களின் பார்வையில் என்னுடைய மனைவி ஆகிவிடுவாள்.

ஆனால் எனக்கும் அவளுக்கும் உள்ள டீளிங்கின் படி அவள் எனக்கு அக்ரீமன்ட் மனைவி என்று தனக்குத்தானே கூறியபடி ரெடியாகிவெலியில் வந்தவன் அவன் ரூமின் அருகில் இருந்த யாழிசையின் ரூமினுள் நுழைந்தான்.

அங்கு தன்னவளை பார்த்தவனின் கண்கள் அவளைவிட்டு நகர மறுத்தது.சற்று முன் அவள் அக்ரீமன்ட் மனைவி என்று நினைத்தது அவனுக்கு மறந்தே போனது மை பேப் என்று அவனுக்கு அவனே சொல்லிகொண்டவன் ஐ வில் நாட் லூஸ் ஹெர்.ஐ வில் மேக் ஹெர் கம்ப்லீட்லி மைன். என்று தனக்குத்தானே கூறிகொண்டான்.

ஆனால் சஞ்சலத்தில் இருந்த யாழிசையோ அவனின் தீவிரமான பார்வையில் மேலும் அரண்டு போனாள்.

அதை கருத்தில் கொல்லாது அவளின் அருகில் வந்தவன். ஆர் யூ ரெடி பேபி என்று கேட்டதும் ரெடியில்லன்னு சொல்லிரலாமா. அக்ரீமன்ட் கல்யாணம் வேண்டாமென்று அவனிடம் கூறிவிடுவோமா.அப்படி கூறிவிட்டால் அவனுக்கு கோபம் வந்து அவன் கூறியதுபோல் அப்பாவை ஏதேனும் சிக்கலில் மாடிவிட்டுடுவானோ என்று பல யோசனையுடன் அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் நின்றாள்.

அவள் அசையாமல் யோசனையுடன் நிற்பதை பார்த்த தீரன் இவள் யோசிப்பதை பார்த்தாள் காரியத்தையே கெடுத்திடுவாள் போல. மேரேஜ் ரெஜிஸ்டர் செய்யும் வரை இவளை யோசிக்கவிடக்கூடாது என்று முடிவெடுத்தவன் .

ஹேய் கமான் பேபி எல்லோரும் நமக்காக காத்திருகிறார்கள் என்று ஆங்கிலேயர் பாணியில் அவளது கரத்துடன் தன கரத்தை பிணைத்து தன்னுடன் பார்டி ஹாலுக்கு கூட்டிக்கொண்டு வந்தான்.

அங்கு தீரனின் குரூப்பில் இருந்து இருவர் பியானோ இசைக்க வெல்வெட் விரிப்பில் தன்னவளோடு நடந்து அங்கிருந்த சிறு திட்டுபோன்ர உயரமான இடத்தில் வந்து நின்றான் .

அவனுடன் கைகோர்த்து நடக்க ஆரம்பித்தவளின் டென்சன் எக்கசக்கமாக எகிறியிருந்தது தனது பயத்தை போக்க தன்னை இக்கட்டில் நிறுத்திய தீரனிடமே ஒன்றியபடி நடந்தாள்.

தன்னை அறியாமல் அவள் அவனுடன் ஒன்றி நடந்துவந்தது இருவரும் அன்னியோன்யமாய் வருவதுபோன்ற தோற்றத்தை கொடுத்தது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.