எனவே காலையில் தன்னுடைய அல்லகை நான்குபேருடன் அங்கு மினிஸ்டர் என்ற பந்தாவுடன் வந்த ரங்கராஜன் உள்ளே தீரமிகுந்தன் இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்திருகிறது தான் அவரை பார்த்து முக்கியமான விஷயம் பேசணும் என்று சலம்பல் செய்துகொண்டிருந்தார்.
அப்பொழுது பலபலவென்ற கருப்புநிற வால்வோ கார் வந்து நின்றது அதன் கதவின் கண்ணாடி இறங்கி தலையை வெளியில் நீட்டி என்ன பிரச்சனை இங்கே என்று கேட்டார் மகேஷ் மல்கோத்ரா.
அப்பொழுது கேர் அவரின் அருகே வந்து மரியாதையாக சல்யூட் செய்து மிஸ்டர் தீரமிகுந்தனை பார்க்கணும் என்று உள்ளே நுழைய பிரச்சனை செய்துகிட்டு இருக்கிறார் என்றான்.
அவரை பார்த்ததுமே அது மினிஸ்டர் ரங்கராஜன் என்பதனை உணர்ந்துகொண்டார் இருந்தாலும் அது தெரியாததுபோல் பாவனை செய்து காரில் இருந்து இறங்கிய மல்கோத்ராவை பார்த்ததுமே அவரின் காரினையும் தோரனயினையும் பார்த்த ரங்கராஜன் பெரிய ஆளா இருப்பான் போலே யார் அது என்று பார்த்தபடி நின்றார்.
யார் நீங்க என் வீட்டின் முன் நின்று என்ன பிரச்சனை செய்துகொண்டிருகிறீர்கள் என்று கேட்டார் மல்கோத்ரா .
அதற்கு மினிஸ்டரின் அல்லக்கைகள், யாரைப்பார்த்து என்ன கேள்வி கேக்குற ஆழும் கட்சியின் மினிஸ்டர் ரங்கராஜனை பார்த்து யாருனா கேக்குறே என்று உதார்விட்டனர் .
அவர்களை பேசவிட்டு பின் அடக்குவதுபோல் பாவலா காண்பிப்பதற்காக தம்பிகளா நீங்க இருங்க நானே பதில் சொல்லிகிடுறேன் என்று சத்தம் போட்டுவிட்டு இங்க பாருங்க ஸார் உங்களை பார்த்தாலும் பெரிய இடமாத்தான் தெரியுது இருந்தாலும் மினிஸ்டர் என்ற மரியாதை கொடுத்து பேசுங்க இல்லாட்டி என் தொண்டர்கள் பொங்கிடுவாங்க. நம்ம தீரமிகுந்தன் தம்பி இங்கதான் தங்கி இருப்பதாக தகவல் வந்துச்சு ஒரு முக்கியமான விசயமா பார்க்க வந்தா மினிஸ்டர் என்னையே உள்ள விட மாட்டேன் என்று தடுப்பதெல்லாம் நல்லாயில்ல என்று கூறினார் ரங்கராஜன்.
அவர் அவ்வாறு கூறியதும் சாரி மிஸ்டர் ரங்கராஜன் நீங்க யாரென்று எனக்குத்தெரியாது. நான் டெக் நியூ கம்பெனி எம்.டீ மகேஷ் மல்கோத்ரா இது என்னுடைய பில்டிங் நீங்க பார்க்க நினைக்கும் நபர் இங்கே இருப்தற்கான வாய்ப்பு இல்லை எனக்கு தெரியாமல் என் அனுமதியில்லாமல் யாரும் இங்கே உள்ளே செல்ல முடியாது என்றார்.
அவர் பெயரை கேட்டதுமே எவ்வளவு பெரிய ஆள் இவர், இருந்தாலும் நாம மடங்கிபோனால் நம்ம தொண்டர்களுக்கு முன் நல்லா இருக்காதே இப்ப என்ன செய்ய என்று தனக்குள்ளேயே கேட்டுகொன்டவர் மல்கொத்ராவிடம் அப்போ இது சி.என்.ஜி தீரமிகுந்தன் தங்கியிருக்கும் இடமில்லையா? இது உங்களின் தனிப்பட்ட பங்களாவா எனக்கு வந்த நியூஸ் வேறமாதிரி இருந்ததே என்று கூறிகொண்டே தன்னுடைய மொபைலை எடுத்து தீரனுக்கு டயல் செய்தார் ரங்கராஜன். ஒருரிங்கிலேயே அதை அட்டன் செய்த தீரன் சொல்லுங்க மிஸ்டர் ரங்கராஜன் என்ற தீரனின் குரலில் தம்பி நீங்க ஊட்டியில் இருக்கிற இடத்தின் முன் இருக்கிற கேட்டின் அருகில் நான் நிக்கிறேன். ஆனால் இது நியூ டெக் எம்.டி வீடு இதில் நீங்க இல்லை என்று சொல்கிறார்களே என்றார்.
அவர் கூறியதை கேட்ட தீரன், ரங்கராஜன் நான் இப்போ கோயம்புத்தூரில் இருக்கிறேன் இன்று அல்லது நாளை காலை உங்களை நான் ஹோட்டல் ரெசிடன்சியல் புளுவில் சந்திக்கிறேன் என்னை பார்க்கவேண்டுமானால் இப்பொழுது நீங்கள் கோயம்புத்தூரில் அல்லவா இருக்கவேண்டும் நீங்க ஊட்டியில் இருக்கிறதா சொல்றீங்க என்று பதில் கொடுத்தான்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
அவனின் வாய்வார்த்தையில் குழம்பிய ரங்கராஜன் அப்போ நமக்கு கிடைத்த தகவல்தான் தவறோ என்று குழம்பியபடி அப்போ நாங்க வருறோம் மல்கோத்ரா சார் என்றவர். ஏய் வன்டியை எடுடா அட்ரஸ் மாரிவந்துட்டோம் என்று கூறி காரிள் ஏறி திரும்பச்சென்றதை பார்த்துவிட்டே மல்கோத்ரா தனது காரில் ஏறி உள்ளே நுழைந்தார்.
மற்றவர்களைப்போல் எந்த தடங்கலும் இல்லாமல் நேராக பார்டி நடக்கும் ஹாலுக்கு வந்த மல்கொத்ராவை கண்டதும் அவரை நோக்கி சென்ற தீரனை பார்த்து கட்டை விரலை உயர்த்தி டன் என்று கூறியபடிவந்த மல்கொத்ராவை ஐ நோ யூ.தாங்க்ஸ் பார் கமிங் என்றபடி அனைத்து வரவேற்று அழைத்துச்சென்று முன்னால் போடபட்டிருந்த இருக்கையில் அமர வைத்தான் தீரன்.
அதன் பின் யாழிசையின் அருகில் தீரன் வந்து நின்று, பிரன்ட்ஸ் நான் சொன்ன முக்கியமான நபர் என்னுடைய நலம் விரும்பி அண்ட் மை பிஸ்னெஸ் பார்ட்னர் மிஸ்டர் மகேஷ் மல்கோத்ரா இங்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன் இப்பொழுது நான் என் யாழிசையை உங்களின் முன்னிலையில் என்னுடைய மனைவியாக ஏற்கிறேன் என்று கூறியவன் தனது பாக்கெட்டினுள் இருந்த தாளிக்கொடியை எடுத்தான்.
அதை பார்த்த யாழிசை கெட்டிமேலமில்லை, அய்யர் மந்திரம் சொல்லவில்லை, அர்ச்சனை பூக்கள் இல்லை தாளிகயிறு இல்லை இருந்தாலும் தங்கத்தில் கோர்த்திருப்பது தாளிதானே இதை இத்தனைபேர் முன்னிலையில் என்னை மனைவியாக ஏற்கிறேன் என்று இவன் கூறி கொண்டிருகிரானே இதை எப்படி நான் எடுத்துகொள்வது என்று மருகியபடி நின்றாள்.
தாளிக்கொடியை கையில் எடுத்த தீரன் பேபி இது என் அம்மாவின் மாங்கல்யம் என் மாமின் செயினை உனக்கு போட்டுவிட்டால் உன்னை என் மாம் இடத்தில் நான் வைத்ததுபோல் ஆகிவிடும் எனவே உன்னை நான் மிஸஸ் தீரமிகுந்தனாக நான் நெருங்க தயக்கம் ஏற்படும். சோ செயினை மாற்றிவிட்டேன். ஆனால் மாங்கல்யம் மட்டும் என் அம்மாவினுடையது அதை இதில் போட்டுள்ளேன் என்று குழப்பத்துடன் நின்றுகொன்டிருந்த அவளின் கண்களை பார்த்து கூறியபடி அவளின் கழுத்தினில் போட்டுவிட கைதூக்கவும் மந்திரத்துக்கு கட்டுபட்டவள் போல் யாழிசை தனது தலையை குனிந்து அதை வாங்கி கொண்டாள்
அவளின் அந்த இணக்கத்தில் பூரித்துபோனவன் அவளின் விரல்பிடித்து மோதிரத்தை போட்டுவிட்டவன் அவள் கையிலும் ஒரு மோதிரத்தை கொடுத்து தனக்கு போடுவிதமாக தனது விரலை அவளின் முன் நீட்டினான். அவளும் அவன் கண் நோக்கி பேசியதில் மெய்மறந்து அவன் சொல்வதை செய்யும் தலையாட்டிபொம்மையாக மாறி அதை அவனுக்கு அணிவித்தாள்.
அதனை தொடர்ந்து தீரன் அனைவரின் முன்பும் அவளை அனைத்து ஆங்கிலேயர் பாணியில் முத்தமிட்டான்.
அதை எதிர்பார்க்காத யாழிசைக்கு அதுவும் சபை நிறைய மனிதர்களின் முன் அவனின் செயல் அவளுக்கு மிகுந்த கூச்சத்தையும் தலைநிமிர்ந்து பார்க்கமுடியாத நிலையையும் அதனால் அவனின் மேல் கோபத்தையும் உண்டாகியது.
தொடரும்
{kunena_discuss:1212}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.