(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 18 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

தீரன் சொன்னதை கேட்ட மிதுனன் மிஸ்டர் தீரமிகுந்தன் நீங்க செய்றதெல்லாம் வில்லங்கமானதாகவே இருக்கு ஆனால் இதெற்கெல்லாம் காரணம் இந்த பூமியை கப்பாத்துவதுன்னு சொல்றீங்க நீங்க சொன்னதை வைத்து எப்படி நான் உங்களை நல்லவர் என்று முடிவெடுக்கமுடியும் .

என்னையே நீங்க கடத்திதான் வச்சுருக்கீங்க. இதைவிட மோசம் என்னன்னா ஒரு பெண்ணை அவள் விருப்பம் இல்லாமல் உங்க கஸ்டடியில் எடுத்துருக்கீங்க. நல்ல ஒரு ஆண் மகன் செய்வது போலவா உங்க செயல் இருக்கு? என்றான் மிதுனன்.

அவன் கூறுவதை கேட்ட தீரமிகுந்தன் நான் எப்போ என்னை நல்லவன் என்று உன்னிடம் சொன்னேன். எனக்கு நான் நினைத்தது நடக்கணும் அதற்குரிய சாமர்த்தியம் எனக்கிருக்குது என்பதை உன்னிடம் நான் இப்போ புரூப் செய்து காண்பிக்கட்டா? என்று கேட்டான்.

அவனின் வார்த்தையில் எப்பா... என்ன திமிர் என்று மலைத்துபோய் அவனை மிதுணன் புருவச்சுளிப்புடன் பார்த்தான்.

ஹேய் மேன்! யாழிசையை அவள் விருப்பம் இல்லாமல்தான் தூக்கிட்டுவந்திருகிறேன். ஆனால் என் விருப்பத்துக்கு அவள் மறுப்பு சொல்லாமல் உன் கண் முன்னாலேயே அவளை இன்றே கல்யாணம் செய்து காட்டட்டா என்றான் தீரன்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

வேணாம் தீரன் உனக்கு யாழிசை பற்றி என்ன தெரியும்? அவள் பூப்போன்றவள் நீயோ பூகம்பம் போன்றவன் . அவளை விட்டுவிடு என்றான்.

தீரனால் மிதுனனின் பேச்சை ரசிக்கமுடியவில்லை. மிதுனன் சி.என்.ஜி க்கு எதிராக மாணவர்களை திரட்டும் போராட்டகாரன் என்றும் அவன் காணாமல் போனதினை அறிந்த மிதுனனின் பெரியப்பா சத்தியமூர்த்தி வானவராயர், மற்றும் அவர்களின் நண்பர்கள் அவனை காணாமல் தேடி தவித்துகொண்டும்  அவர்கள் போட்ட திட்டத்தின் படி பெரும் போராட்டத்திற்கு இளைஞர்களை திரட்ட மிதுனனின் பெரும் பங்கு இல்லாமல் அவதிபட்டுக்கொண்டிருப்பத்தையும் அறிந்துதான் இருந்தான் தீரன்.

இந்த நிலையில்தான் அதற்கு மறைமுகமாக உதவுவதாகவும் அதற்குரிய நிதி ஆதாரங்க்களை ஏற்படுத்திகொடுக்கலாம் என்று நினைத்து கொண்டு பேசினால் அதனை கருத்தில் கொள்ளாமல் மிதுனன் யாழிசையை பற்றி பேசுவதை அவன் விரும்பவில்லை. அதிலும் அவள் அவனுக்கு பொருத்தமில்லாதவள் என்று அவன் கூறியதை அவனால் சகித்துக்கொள்ள இயலவில்லை

ஏற்கனவே ஒருதடவை நண்பன் என்று நினைத்தவனால் சூடுவாங்கிய பூனையின் நிலையில் இருந்த தீரன், மிதுனன் தன் மனசு நிறைந்த  யாழிசையின் மேல் அவன் பரிவாக பேசுவதைகூட ஏற்க முடியவில்லை.

எனவே அவன் கண்முன்னே அவளை அவனின் மனைவியாக ஆக்கவேண்டும். தனக்குரியவள் அவள் என்று அவனுக்கு உணர்த்திவிட வேண்டும் என்றும், தன்னைத் தாண்டி யாராலும் அவளை இனி அணுகமுடியாது என்று கூறவேண்டும் என்ற ஆத்திரம் எழுந்தது.

அவனுகிருந்த இந்த மனநிலையில் யாழிசையின் மனநிலையை அவன் யோசிக்க மறந்தான். தனது அதிரடி செயலால் அவள் காயமடைந்ததை இன்னும் காயப்படப்போவதை  காலம் கடந்து அவன் உணர்ந்துகொண்டு அவளின் காயத்தை ஆற்றுவதற்கு தடுமாறப்போவத்தையும் அவன் அறியவில்லை.

அப்பொழுது அவர்கள் பேசிகொண்டிருந்த அறையின் கதவு திறந்தது உள்ளே வந்த இமாமியை பார்த்த தீரனின் முகம் உற்சாகத்தில் மலர்ந்தது.

வெல்கம் மை பாய் ஹொவ் இஸ் யுவர் ஜெர்னி என்றபடி அவனிடம் சென்று அணைத்து விடுவித்தான்.

ஐம் ஆம் பைன் பாஸ். வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர் என்றான் இம்மாமி.

அவனுடன் பேசியபடி அந்த அறையை விட்டு வெளியேற போன தீரன். மீட் மிஸ்டர் மிதுனன். திஸ் கைய் மூலமாகத்தான் அடுத்த நம்ம பிளானை இம்ப்ளிமெண்ட் செய்யபோகிறோம் என்றான் தீரன்.

அவன் கூறியதும் ஹாய் என்றபடி அவனிடம் கைகுலுக்க தனது கரத்தை நீட்டினான் இமாமி உயரமும் அதற்கேற்ற பருமனுடன் ஆப்பிரிகர்களுக்கே உரிய நிறத்துடன் சுருட்டைமுடியுடன் குத்துச்சண்டை வீரனை போன்ற தோற்றத்தில் இருந்த அந்த ஆப்ரிக்க நாட்டுக்காரன் தீரனுடன் மிகவும் மரியாதையாக பேசியதை பார்த்த மிதுணன் திறந்திருந்த கதவுக்கு காவல் காப்பதுபோல் நின்றிருந்த அமெரிக்க நாட்டுக்காரன் நான் என்ற தோற்றத்தில் இருந்தவனை பார்த்த மிதுனனுக்கு என்னடா நடக்குது இங்க என்ற மலைப்புடன் நின்ற மிதுனனின் முன் நீன்ற இமாமியின் கரத்தை தயக்கத்துடன் பற்றி குலுக்கினான் மிதுனன்.

சீயூ லேட்டார் என்று கூறிய இமாமி தீரனுடன் அடுத்து அவசரமாக ஏதோ வேலைக்கு செல்வதுபோல் வெளியேறினான்.

வெளியில் வந்த தீரனிடம் பாஸ் ,ஆர் யூ ஸ்யூர் டூ திஸ் என்று கேட்டான் இம்மாமி.

இமாமி வரும் போது ஹாலில் அரேஞ் செய்திருந்த பார்டிகான ஏற்பாட்டையும் தீரமிகுந்தன் வெட்ஸ் யாழிசை என்ற வாசகத்தையும் பார்த்துதான் அவ்வாறு கேட்கிறான் என்பதனை புரிந்துகொண்ட தீரன் எஸ், ஐ வான்ட் ஹெர் டூ பி மையின். என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.