Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 12 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 12 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

லகத்தில் விசித்திரமான விஷயம் ஒன்று உள்ளது என்றால் அது நம்முடைய மனம்தான். எப்போது எப்படி சிந்திக்கும் என்று அரிதியிட்டு கூற முடியாது. சிலசமயம் கோபம் வர வேண்டிய விஷயத்திற்கு கூலாக ரியாக்ட் செய்யும். அதே மனம் மிக சாதாரணமான கடந்து போக வேண்டிய விஷயத்திற்கு எரிமலையாக குமுறும். இடம், பொருள் ஏவல் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்!

விஷயம் என்னவென்றால் இந்த புவன் சதாவின்மீது பயங்கரமான கோபத்துடன் இருக்கிறான் என்று பார்த்தால் ஒன்றும் வித்தியாசமாக நடக்கவில்லை. ஆதர்ச கணவன்போல் கண்ணியமாக  நடந்து கொள்வதும் சதாவின் குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் ரொம்பவும் சினேகித்து பழகுவதும் ஒரு பழி வாங்கும் நடவடிக்கைபோல தெரியவில்லையே! கொஞ்சம் பழைய உவமைதான் இருந்தாலும் சொல்லி வைக்கலாமே…. அகலாமல் அணுகாமல் தீக்காய்வார்போல… இருந்தான்.  இந்த புவன் நிருபேஷை விசாரணைக்கு உட்படுத்துவது அவசியமாகிறதோ?

உண்மை என்னவென்றால், சதா அவனுக்கு ரொம்ப காலம் முன்பாகவே அறிமுகமாகியவள்தான். அப்போது அவள் பெயர் சதாக்ஷி என்றுகூட தெரியாது. அவனை பொறுத்தவரை அவள் ஒரு தேவதை. அப்போது சிறுவயதுதானே… தேவதையாகவே நினைத்தான். பிறிதொரு நாளில் வளர்ந்தபின் மனைவி பற்றிய கனவு வரும்போது அந்த பெண்ணை நினைத்து பார்த்திருக்கிறான். ரொம்பவும் தனிமையை உணர்ந்த காலத்தில் காதலிக்கவும் ஆரம்பித்திருக்கிறான். எப்போது இது ஆரம்பித்தது?

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

உங்களிடம் பழைய காலண்டர் இருந்தால் ஒரு எட்டு வருடங்களுக்கு முற்பட்ட மார்ச் மாத பதினெட்டாம் தேதியை குறித்து கொள்ளுங்கள். அப்படியே ரிவர்ஸில் ஒரு டைம் ட்ராவல் செய்யலாமா?

அன்றைக்கு ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் கொஞ்சம் மழை பெய்து கொண்டிருந்தது. மும்பையில் இருந்து வந்த சூப்பர் ஃபாஸ்ட் ரயிலில் இருந்து இறங்கும் அந்த இருபது வயது பையன்… ஓகே… இளைஞன்தான்… கண்ணும் கூரிய மூக்கும் பார்த்தால் புவன் நிருபேஷ் போலிருக்கிறதே!  ஆனால் இப்போதுபோல கம்பீரம் தெரியவில்லையே! கலவரமும் கலக்கமும்தான் முகத்தில் தெரிகிறதே! வொய்?

கொஞ்சம் ஃபாலோ பண்ணி பார்க்கலாமா?

அவன் ப்ளாட்ஃபாரத்தில் இறங்கி நடந்தான். ப்ளாட்ஃபாரத்தின் கடைகோடிவரை  நடந்தவன் ஆளரவமற்ற கடைகோடியில் இருந்த ஒரு சிறிய சிமெண்ட் திண்டில் அமர்கிறான். வானத்தை வெறித்து பார்க்கின்ற கண்கள்… கொஞ்சம் அழுததுபோலவும் இருக்கிறதே… அடடா எதுவும் தவறாக  நடந்துவிடக் கூடாதே!

சட்டை பையிலிருந்து மடித்து வைக்கப்பட்ட தாளை எடுத்து பார்க்கிறான்… கடிதமோ… அப்படியே நாமும் படிப்போமா?  (நம்ம கதைதானே நோ அஃபென்ஸ்) நல்லவேளை அது தமிழில்தான் எழுதியிருந்தது.

டியர் மாம்,

இது புவன்..  நீங்கள் ஏன் இப்படி செய்தீர்கள்.  நான் உங்கள் மீதும் அப்பாவின்மீதும் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன். அத்தனையும் இல்லை என்றாகி விட்டது. அப்பா தவறு செய்தார் ஒப்புக் கொள்கிறேன்… அதற்காக நீங்களும் உங்களுடைய பழைய காதலை தேடிக் கொண்டது என்ன நியாயம்? இதுபற்றி  நீங்கள் அப்பாவிடம் சொன்னபோது கொஞ்சமும் தயக்கம் குற்ற உணர்வில்லாமல் பேசினீர்களே. என்னையும் மிதிலாவையும் மறந்து விட்டீர்களா? நீங்கள் அப்பாவை தண்டிப்பதாக நினைத்துக் கொண்டு என்னையும் மிதிலாவையும் தண்டித்து விட்டீர்கள். அவரை திருத்த முயற்சிக்காமல் ரிவெஞ்ச் எடுப்பதாக நினைத்துக் கொண்டு இப்படி செய்தீர்களா?

உண்மையில் நாம் நால்வரும் ஒரு குடும்பமா என்று எனக்கு சந்தேகம் வந்திருக்கிறது? குடும்பம் என்பது ஒரு யூனிட் அல்லவா? ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பதுதானே பிணைப்பு. அப்பா தவறிழைத்தார் என்றால் அவரை திருந்த முயற்சிக்காமல் நீங்களும் பிரிந்து செல்ல நினைத்து விட்டீர்களே?

உங்களுக்கு அப்பா அம்மா அண்ணன் தங்கை என்று குடும்பம் இருக்கிறது. அதுபோலவே அப்பாவிற்கும் அவருடைய குடும்பம் இருக்கிறது. ஆனால் எனக்கும் மிதிலாவிற்கும் இருக்கும் குடும்பத்தை அழிப்பது என்ன நியாயம். இதை இருவரும் சேர்ந்து செய்கிறீர்களே? உங்களை யார் திருத்துவது?

இதோ நான் என் தொழிலிலும் தோற்று விட்டேன். இருபது வயதில் ஆர்வமாக ஆரம்பித்து உறக்கத்தை கனவாக்கி… கனவுகளை நிஜமாக்கி வளர்த்த தொழில் ஆரம்பித்த ஆறே மாதத்தில் முடிந்துவிட்டது. ஒரு தோல்வி அடுத்தடுத்த தோல்வியை தந்துவிட்டது.

இப்போது எனக்கு மிதிலா பற்றிய கவலைதான் உள்ளது. அவளுடைய எதிர்காலம்… ஐ வாண்ட் டு ஸ்டாப் திஸ்! ஒரேவழி என்னுடைய முடிவுதான்… இந்த அதிர்ச்சி உங்களை சரியான பாதைக்கு மீண்டும் கொண்டு வரும் என்று நம்புகிறேன்.  உங்களுடைய பழைய பாதையில் மிதிலா என்றொரு சிறுபெண் தாய்தகப்பனின் அன்பிற்காக ஏங்கி நிற்கிறாள். என்னுடைய மரணம்… நானும் மிதிலாவும் பிறந்தபோது நீங்கள் கண்ட கனவுகளையும் அந்த வாழ்க்கையையும் மீட்டுத் தரும் என்று நினைக்கிறேன். மிதிலாவாவது நலமாக வாழட்டும்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 12 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-11-21 13:02
சூப்பர் மேம்.. :clap: :clap:
அப்போ சதா தான் தேவதையின்ன்னு புவனுக்கு தெரியுமா.. :Q:
பெரியவங்க ரெண்டு பேரும் பேசுனது மறுக்க முடியாத உண்மையே... :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 12 - சாகம்பரி குமார்saaru 2018-11-20 21:27
Saru ku positive energy poorani moolam kidaithuvitadu super
Sada baby tan Enna seiumo
Kutti ha irukapa Nalla teliva irukaya
Ana Ipa ta ha ha
Iduvum marum nambalam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 12 - சாகம்பரி குமார்AdharvJo 2018-11-20 20:11
:dance: Fantastic Ms Sagampari :clap: :clap: No comments :hatsoff: I second you.

Kutti Pisasu oda part chanceless (y) Look forward to read the next update. Keep rocking.
Reply | Reply with quote | Quote
# MAMN by Sagambari KumarSahithyaraj 2018-11-20 19:42
Geometry Box secret revealed :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 12 - சாகம்பரி குமார்Srivi 2018-11-20 18:31
Idhan vitta korai thotta koraiya..super episode..evalo periya vishayatha simplea solliteenga.. awesome..
Reply | Reply with quote | Quote
# MAMNAruna 2018-11-20 17:47
Nice update mam... 😁 Eppdiyo fb Solliteenga... Seekrama turning point ah kondu vaanga mam.... Eagerly waiting for the next update
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top