அதற்கு இமாமி டூ யூ லவ் ஹெர்? என்றான். அதற்கு கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன் அவளை என்னைத்தவிர யாரும் பார்வையில் கூட நெருங்க விடகூடாது என்று நான் நினைக்கிறேன். இதற்கு பேர் லவ் என்றால்... என்று மனதினுள் நினைத்தவன் இமாமியிடம் எஸ் ஐ லவ் ஹெர் என்றான்.
அறையில் முழு ஒப்பனையுடன் தயாராக்கிக் கொண்டிருந்தனர் யாழிசையை. யாழிசைக்கு ஆங்கிலம் பேச தெரியும் என்றாலும் அவளை சுற்றி இருந்த அந்த இரு பெண்கள் மற்றும் நேற்று அவளுக்கு மேக்கப் போட்டுவிட்ட ஸ்டீபன் ஆகியோரின் அமெரிக்க ஆங்கிலத்தை கிரகித்து கொள்ள மிகவும் சிரமப்பட்டாள்.
அவள் மேக்கப்போடுவதற்கு ஒத்துழைப்பு கொடுத்துகொண்டிருந்தாலும் அவளின் மனதினுள் பயபந்து ஒன்று உருவாக்கி உருண்டு கொண்டிருந்தது. மீள முடியாத பந்தத்தை தான் ஒப்பந்த திருமணமாக நுழைவது சரிதானா? என்ற கேள்வியும் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ! என்ற குழப்பமும் அவளை ஆட்படுத்தி அலைக்களித்துக் கொண்டிருந்தது.
அவளின் கல்யாணத்திற்கு இங்கே ஏற்பாடு நடந்துகொண்டிருந்த இந்த வேலையில் அங்கே சந்தியா வீட்டில் அவளை மாப்பிள்ளை பார்க்க வரும் கலெக்டருக்காக அலங்காரப்படுத்திக் கொண்டிருந்தனர். அவளின் உள்ளமோ மிதுனனை விடுவித்ததில் இருந்து நடந்ததை நினைத்து பார்த்துகொண்டிருந்தது மேலும் நடப்பதை தடுக்கமுடியாமல் மனம் தடுமாறிகொண்டிருந்தது.
சந்தியா வீட்டில் அன்றைய மிதுனனின் எஸ்கேப் நிகழ்ச்சிக்கு பின் அவள் வீட்டிலேயே அவள் அன்னியமாகிவிட்டதுபோல் உணர்ந்தால். எந்நேரமும் அவளை கண்காணித்துகொண்டே இருப்பதை அவள் உணர்ந்தே இருந்தாள்.
மிதுணன் தப்பித்துவிட்டதை அவனை அடைத்துவைத்திருந்த இடத்தை பார்த்து உறுதிபடுத்தியபின் நேராக ரங்கராஜன் அவளின் அறைகதவைத்தான் வந்து தட்டினார்.
தூங்கி எழுந்ததுபோல் பாவனை செய்தபடி வந்து கதவை திறந்த சந்தியா ரவுத்திரமாக தோற்றத்துடன் நின்ற ரங்கராஜனின் முகத்தை கண்டு, அவளின் தொண்டை பயத்தில் உலர்ந்துவிட்டது .
அப்பா... என்று அவள் பயத்துடன் எழும்பாத சத்தத்துடன் உதடு அசைந்த மறுநொடி அவளின் கன்னத்தை அவரது கை பதம்பார்த்தது.
ஒரே அடியில் தடுமாறி பின்னால் விழுந்ததும் அவளை நோக்கி முன்னேறி வந்த ரங்கராஜன் எதுக்கு அவனை தப்பிக்க வச்ச? என்ன காதலா.... தொலச்சுபோடுவேன் தொலைச்சு. நீ இப்போ செய்துவச்ச காரியத்துக்கு உன்ன.... என்று மீண்டும் அவளை அறைய போகும் போது அவளின் அம்மா ஓடிகுறுக்கே விழுந்து அந்த அடியை வாங்கியவள்.
நான் அவளிடம் விசாரிக்குறேங்க என்று அவரின் அடியில் தகதகவென எறிந்த கன்னத்தை பொருட்படுத்தாமல் சந்தியாவின் பக்கம் திரும்பிய அவளின் அம்மா என்ன காரியம் செய்துவச்சுருக்குற சந்தியா? அப்பாவுக்கு எதிரா நீ இப்படி செய்வேன்னு நான் நினைத்துகூட பார்கல.
சொல்லுடி.... ஏன் இப்படி செய்த. அவன் இப்போ எங்கே தபிச்சு போயிருப்பான்னு உனக்கு தெரியுமா? தெரிஞ்சா சொல்லிடு டீ .அப்படி சொல்லிடனா அப்பா உன்மேல் கோபப்படாம நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார்.
ஆனால் எதுவும் கூறாமல் அடியை வாங்கியவள் அழக்கூட செய்யாமல் அழுத்தமுடன் அமர்ந்திருந்தாள். அப்பொழுது ஆட்களைவிட்டு மிதுனனை தேடச்சொல்லி அனுப்பிவிட்டு சந்தியாவின் அறைக்குள் வந்த சக்ரவர்த்தி அவளின் முகத்தை முறைத்துபார்த்தபடி உள்ளே வந்தவன் அப்பா அவ சொல்லமாட்டப்பா சிசிடிவில இப்போ தான் பார்த்துட்டுதான் வந்தேன் வாசலிலே அவனை அனுப்புறதுக்கு முன்ன ரெண்டுபேரும் கொஞ்சிட்டு இருக்கிறத. எனக்கு அப்படியே இவளையும் அவனையும் வெட்டிப் போட்டனும் போல இருக்குது .
அவன் மட்டும் என் கையில கிடச்சான் செத்தான். என்ன தைரியமிருந்தா மினிஸ்டர் மகளை லவ் பண்ணுவான் என்று கர்ஜித்தான்.
அவன் அவ்வாறு கூறியதும் சந்தியாவின் அம்மா வள்ளி, ரங்கராஜன் அவளை அடிப்பதற்குள் முந்திகொண்டாள். என் தலையில் கல்லை தூக்கி போட்டுட்டே இப்படியா செய்வ... இப்படியா செய்வ... பெத்த வயிறு பத்திகிட்டு எரியுதே... என்று கூறியபடி சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார்.
அப்பொழுது சக்ரவர்த்தி வேகமாக அவளின் மொபைலை தேடி எடுத்தவன் அப்பா இதில் அவன் போன் நம்பர் இருக்கும். எப்படியும் இவளை அவன் காண்டாக்ட் செய்வான். இதை நானே வச்சுருக்கிறேன் இனி இவளை காலேசுகெல்லாம் அனுப்ப வேண்டாம் என்றான்.
அவன் சொல்றதை கேட்டபடி ஆழ்ந்து யோசித்துகொண்டிருந்த ரங்கராஜன் நாளைக்கே இவளை பொண்ணுபார்க்க நம்ம கலெக்டர் தம்பிய வரச்சொல்லணும். அவரும் நம்ம ஆளுதான். நம்ம கூட்டாளியும் கூட. கலெக்டர் மாபிள்ளையானா நம்ம அரசியலுக்கும் துணையா இருக்கும் என்றார்.
அவர்கள் பேசுவதை கேட்ட சந்தியா, அய்யோ எனக்கு கல்யாணம் எல்லாம் இப்போ வேண்டாம் என்று கத்தினாள்.
அதனை கேட்ட வள்ளி, வாயை மூடு .உன்னிடம் யாரும் இப்போ அபிப்ராயம் கேட்கவில்லை. ஒழுங்கா சொன்னதை கேக்குற வழியைப் பார் அடிவாங்கி உடம்பை புண்ணாகிக் கொள்ளாதே என்று கூறியபடி மூவரும் அவளது அறையை விட்டு வெளியேறினர்.