(Reading time: 15 - 29 minutes)

பிராங் மிகவும் டென்சனாக அவனது தந்தையின் முன் அமர்ந்திருந்தான். வாட் ஹப்பேன் பிராங். மார்க் ரூபன்ஸ்க்கு இன்னும் இதுதெரியாமலா இருக்கும் . நீ நம் பிஸ்னசை கையில் எடுத்தபிறகு நல்லபடியாக போய்கொண்டிருப்பதால்தான் நான் விலகிக்கொண்டேன். ஆனால் இத்தனை நாள்  உயர்த்திய நம் நிலையை இப்போ தரைமட்டமாக்கி விட்டோமோ? என எனக்கு பயமாக  இருக்குது என்றார்.

டாட் என் அக்கவுண்டில் இருந்த  அமோன்ட்ஸ் ஹவ் டு லூடேட். ஐ கேன்’ட் பிலீவ் இட். நான் என்னுடைய பெர்சனல் பிசி இல் மட்டும்தான் என் அக்கௌன்ட் டிரான்சக்சன் அண்ட் வெரிபிகேசன் செய்வேன். என்னுடைய பாஸ்வேர்டை இதுவரை யாரிடமும் நான் சேர் செய்ததில்லை. பிறகு எப்படி இது நடந்துச்சுனு தெரியல! அதுவும்  இந்தியாவில் ஒரு மூலையில் இருக்கும் யாழிசை என்ற பெர்சனால்...! எப்படி இதை செயய முடிந்தது என்று விளங்கவில்லையே என்று புலம்பினான்.

நீ சொல்வதை பார்த்தால், இந்த ப்ராஜெக்ட்டை அடுத்த மூவ்மெண்டுக்கு தேவையான அமௌன்ட் இப்போ நம் கையில் இல்லை. இதற்கு ஸ்பான்சர் செய்தவர்கள் பணம் பற்றாக்குறையால் வேலையை நிறுத்தினோம் என்று தெரிந்தால்  நம்மை சும்மா விடமாட்டார்கள். மேலும் மார்க் ரூபன்ஸ் இந்த விஷயம் தெரிந்தால் நம் நிலைமை அவ்வளவுதான். நம் சேப்டரை குளோஸ் செய்திடுவான். என கவலையுடன் கூறினார்.

நோ டாட். இப்போதைக்கு நம்மிடம் பணம் இல்லை என்பதை யாருக்கும் தெரியவிட வேண்டாம்.  மேலும் நான் அந்த யாழிசையை சும்மா விடப்போவது கிடையாது மேலும் ப்ராஜெக்ட் மூவ் ஆகிக்கொண்டிருக்கும் வரை யாருக்கும் நம்மிடம் பணம் திருடப்பட்டு இல்லாமல் போனதை பற்றி தெரிய வாய்ப்பில்லை. ப்ராஜெக்ட் இனிசியல் மூவ்மெண்டுக்கு நம் அசெட் அனைத்தையும் கேஸாக மாற்றி ஸ்பென் பண்ணுவோம். இதில் நம் எல்லா சொத்துக்களையும் இழந்தாலும் இந்த ப்ராஜெக்ட் சக்சஸ் ஆக பினிஷ் ஆகிடுச்சுன்னால் திரும்ப இப்போ இருக்கிறதை விட  பலமடங்கு அசட்டை நம்மால் வாங்க முடியும் என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் அவனின் தந்தை நீ புரிந்துதான் பேசுகிறாயா? பிராங். நம் அசெட் அணையத்தையும் விற்று கேஸாக மாற்றினாலும் இந்த ப்ராஜெக்ட் மூவ்மெண்டுக்குரிய இனிசியல் மூவ்மண்டுக்கு கூட அது போதுமானதாக இருக்காது. நமக்கு இந்த ப்ரோஜெக்டுக்கு ஸ்பான்சராக கிடைத்த தொகையில் டென் பேர்சண்டேஜ் கூட நம் சொத்து  தேறாது.

நாம் இப்போ செய்யக்கூடியது இரண்டே இரண்டுதான் ஒன்று இருக்கிறதை எல்லாம் கேஸாக மாற்றிக்கொண்டு யாரும் நம்மை கண்டுபிடிக்காத ஒரு இடத்திற்கு போய் ஒளிந்துகொள்ள வேண்டும் அவ்வாறு செய்தால்தான் நமக்கு ஸ்பான்சர் செய்தவர்களிடம் இருந்து தப்பிக்கமுடியும். ஆனால் அவ்வாறு நாம் தப்பிப்பது அதுவும் அந்த டெவில்  மார்க் ரூபன்ஸ் கிட்ட இருந்து எஸ்கேப்பாவது அவ்வளவு எளிதானது இல்லை.

இரண்டாவது, இருக்கிற சொத்தினை விற்று வரும் பணத்தைக் கொண்டு நம்மிடம் பணம் கொள்ளையடித்த அந்த யாழிசை என்ற பெர்சனை கண்டுபிடித்து நம் கஸ்டடிக்கு கொண்டுவந்து கொடுக்கிற டார்சரில் நம்மிடம் இருந்து அவள் கைப்பற்றிய தொகையை மீட்க்க முயற்சிக்க வேண்டும். நான் நினைக்கிறேன் நமக்கு நல்லா தெரிந்தவர்களால் மட்டுமே இதை செய்ய சாத்தியம் இருக்கிறது. உனக்கு யார்மீதாவது சந்தேகம் இருக்கிறதா? பிராங். அந்த தீரமிகுந்தனுக்கும் உனக்கும் இடையேயான உறவு நல்லபடியாகத்தானே  இப்பொழுதும் உள்ளது  என்று கேள்விகேட்டார்.

அப்பொழுது பிராங்கின் மொபைல் ஒலி எழுப்பியது அதில் வகுலா அழைப்பதை பார்த்த பிராங்கிற்கு எரிச்சலாக இருந்தது. எனவே சே இவளை.... என்று பல்லை கடித்தபடி அட்டன் பண்ணிய மறுநிமிடம் டோன்ட் பாதர் மீ நவ். ஐ ஆம் இன் இம்பார்டன்ட் வொர்க். வென் மை வொர்க் பினிஸ் ஆகுதோ அப்போ உன்னை நான் காண்டாக்ட் செய்கிறேன்.அதுவரை என்னை தொந்தரவு செய்யாதே என்று படபடவென பொரிந்தான்.

ஏற்கனவே வகுலாவிற்கு கடந்த பத்துநாட்களாக தங்களது எங்கேஜ்மென்ட் ஆன பிறகு முன்புபோல் தன்னுடன் பிராங் நேரம் செலவு செய்து தன்னை ஆராதிக்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்தாள். அவனின் கோபமான இப்பேச்சு மேலும் வருத்தத்தை கொடுத்தது அவளுக்கு.

ஏனோ அவளின் மனம் இப்பொழுது தீரனின் அணுகுமுறையோடு அதனை ஒப்பிடுப்பார்த்தது தீரன் தன்னுடன் நேரம் செலவழிக்க வெளியில் சுற்ற வரவில்லையே தவிர தனக்கும் அவனுக்குமான கல்யாணப் பேச்சு ஆரம்பித்ததில் இருந்து அவனின் அன்பை வெளிபடுத்தும் வகையில் கூரியரில் அழகழகான மலர்களும் அடிக்கடி கிப்ட்களும் அவள் கையில் கிடைக்குமாறும் அதில் அவனின் காதலை வெளிபட்படுத்தும் வாசங்களுடன் அனுப்பிவைப்பான்.

அதை பார்த்ததும் அவனின் அருகாமைக்கு அவள் ஏங்கி அவனை அழைக்கும் போதெல்லாம் தன்மையாக அவனின் வேலையையே காரணம் காட்டி வரமுடியாததுக்கு வருத்தத்தையும் தெரிவித்ததையும் நினைத்து பார்த்தாள்.

பிராங்கிடம் வகுலாவிர்க்கு அவள் எதிர்பார்த்த அன்யோன்யம் கிடைத்தது. அவள் விரும்பிய பொருளாதார வளம் பிடித்தது. ஆனால் ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள் என்பதுபோல் காதலில்லா காமம் சலிப்பினை உண்டுபண்ணி இப்பொழுது அவனின்  காதலுக்கும் அவள் மனம் ஏங்க ஆரம்பித்தது. தன்னை உரசிக்கொண்டு தீரன் திரியாவிட்டாலும் அவன் தள்ளியிருந்தே உணர்த்திய காதல் அருகில் இருந்தும் பிராங்கிடம் இப்பொழுது கிடைக்காத ஏமாற்றத்துடன் அவன் தன்னை பேசிய கோபமான வார்த்தை அவளையும் சீற வைத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.