(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 10 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

பார்ட்டியில் அனைவரும் விபாகரனின் வரவுக்காக காத்திருந்தனர். சுதர்ஷன் குரூப் ஆஃப் கம்பெனியை அவன் பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு தான், மற்றவர் வியந்து பார்க்கும் அளவிற்கு அதன் வளர்ச்சி அதீத வளர்ச்சி அடைந்தது. அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றிக் கொண்டிருப்பவனை பார்ப்பதே கடினம்,  அவனோடு வியாபாரம் ஒப்பந்தம் போட நீ நான் என்று  போட்டி போடுகின்றனர்.  இப்போது கூட பாலா மற்றும் சுஜனாவின் தந்தை வீரராகவனுடன் அவன்  வியாபார ஒப்பந்தம் போட்டிருப்பதை கண்டு பலபேர், இப்படி ஒரு வாய்ப்பு நமக்கு வாய்க்கவில்லையே என்று பொறாமை கொண்டனர் என்றே சொல்லலாம், அவனை ஒருமுறையாவது பார்த்து அவனிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர் இந்த பார்ட்டியில் அதிகம்பேர்!!

இப்படி அனைவரின் எதிர்பார்ப்பின் நாயகன் விபாகரன், அவர்களை அதிக நேரம் காக்க வைக்காமல் காரில் வந்து இறங்கினான். அவனுக்கு இந்த பார்ட்டியில் கலந்துகொள்ள சற்று கூட விருப்பமில்லை. ஏதோ பாலா ஏற்பாடு செய்தது என்பதால் வேண்டா வெறுப்பாகத்தான் இந்த பார்டிக்கு வந்தான்.

ஆனால் இப்போதோ இங்கேயே இருக்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. யாரோ தனக்கு நெருக்கமானவர்கள் இங்கே இருப்பது போல் ஒரு உணர்வு, அது யாராக இருக்கும் என்று அவன் கண்களால் தேடிய போது,

“ஹாய்..” என்று அழைத்தப்படியே, மதுரிமா அவனருகில் வந்தாள்.  அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் கண்கள் அப்போதும் யாரையோ தேடியது.  தூரத்தில் இருந்தே அவன் வருவதைப் பார்த்துவிட்டு, அதிலும் அவன் யாரையோ தேடியதை உணர்ந்து, அது தான் தானோ? என்று நினைத்து தான், மதுரிமா அவன் அருகில் வந்தாள். ஆனால் அதன்பின்பும் அவன் வேறு யாரையோ தேடுவதை  உணர்ந்து, அதில் சிறிது  ஏமாற்றமாகி,

 “உங்க அம்மாவும் தங்கச்சியும் அங்க இருக்காங்க.. வாங்க அவங்கக்கிட்ட போகலாம்..” என்று அவனை அழைத்து கொண்டு போகும் போதே, அவனது தொழில் துறையை சேர்ந்தவர்கள் அவனை சூழ்ந்துக் கொண்டனர்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவர்களோடு சிறிது நேரம் உரையாடிவிட்டு அவன் தன் குடும்பத்தாரோடு இணைந்துக் கொள்ளும்போது சாத்விக் அவர்கள் அருகில் வந்தான். விபாகரனோடு அவன் பேச, அவளை தவிர மற்றவர்களோடு விபா பேசியதில் மதுரிமாவிற்கு கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருந்தது. இருந்தாலும் அவன் அருகிலேயே இருந்து கொண்டாள்.

கிட்டத்தட்ட சுஜனாவின் நிலையும் அதே தான், தேடிவந்து தன்னிடம் பேச முயற்சித்த அஜயை ஒதுக்கிவிட்டு சாத்விக்கோடு வந்து நின்றுக் கொண்டாள். ஆனால் அவனோ அவளை தவிர மற்றவர்களிடமெல்லாம் நின்று பேசிக் கொண்டிருந்தான். ஒருவிதத்தில் அது அவளுக்கு  கொஞ்சம் அவமானத்தை தான் கொடுத்தது. சாத்விக்கின் நடவடிக்கையிலேயே அவனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்பதை தெரிந்துக் கொண்டாள். ஆனால் இது தந்தை எடுத்த முடிவு. அதனால் அவளால் ஒன்றும் பேச முடியாத நிலை தான், எனவே அதைப் பொருட்படுத்தாமல் அவன் அருகிலேயே நின்று கொண்டாள்.

சாத்விக் பேச விபாவும் அவனோடு சகஜமாக பேச வேண்டிய நிர்பந்தம் இருந்தது. ஆனால் அதை பார்த்த அர்ச்சனா அவனது மனநிலையை அறியாமல், வியப்போடு, “என்னமா இது அண்ணாவும் சாத்விக்கும் ஏற்கனவே பேசிகிட்டாங்க போல.. இன்னும் உன் பிள்ளை பழசையே நினைச்சிக்கிட்டு இருந்தா, சாத்விக்கோடு சகஜமாக பேச முடியுமா?” என்று கேட்டாள். கிட்டத்தட்ட மஞ்சுளாவும் அதே நினைப்போடு தான் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்.

அதை உணர்ந்தவளாக, “அம்மா இதுதான் சரியான நேரம், இங்கப்பாரு மதுரிமாக்கு அண்ணாவை ரொம்ப பிடிச்சிருக்கு.. அதனால சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சிடுவோம், அண்ணன் யாதவியையே நினைச்சிகிட்டு இருக்குன்னு நீயும் கல்யாணத்தை பத்தி பேச தயங்குற.. அவளைப்பத்தி நினைப்பு இருந்தா, அவளை ஏமாத்தின சாத்விக்கோட அண்ணன் சகஜமா பேசுமா? அதுலயே புரிஞ்சிக்கோமா.. ஒருவேளை அண்ணன் இன்னும் கல்யாணம் வேண்டாம்னு சொல்றதுக்கு யாதவியை காரணம் சொன்னா இதைப்பத்தி கேட்டு மடக்கு.. இன்னும் அமைதியா இருக்காத..” என்று விளக்கமாக கூறினாள்.

“எதையும் எடுத்தோம் கவுத்தோம்னு செய்ய முடியாது அர்ச்சனா.. கொஞ்சம் பொறுமையா இரு.. விபுக்கு எல்லாம் நல்லதா தான் நடக்கும்..” என்று கூறினார்.

“இப்படியே சொல்லி காலத்தை ஓட்டு, நீயெடுத்த ஒரு தப்பான முடிவு இப்போ அண்ணனோட வாழ்க்கை எப்படி இருக்குன்னு பாரு.. யாதவி ஒரேடியா விட்டுட்டு போயிட்டான்னு பார்த்தா.. இப்படி தூர இருந்தும் தொல்லை கொடுக்கிறாளே..” என்று புலம்ப,

“நான் தூரமில்லை, உங்கள் அருகில் தான் இருக்கிறேன்..” என்று சொல்வது போல யாதவி தனது அறையில் இருந்து அவர்கள் அனைவரையும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன் அன்னையின் இழப்பை நினைத்து அழுதுக் கரைந்தவள், மனதிற்கு பொறுக்க முடியாத வேதனையாக இருந்தாலும், அதில் இருந்து மீண்டு தானே வர வேண்டும், அதனால் உள்ளுக்குள் வேதனையை சுமந்தவள், குளியலறைக்குச் சென்று முகம்  கழுவி வந்தால் பின் அவள் அறையின் ஜன்னலிலிருந்து பார்ட்டியில் நடக்கும் இடம் நன்றாக தெரிந்ததால் அங்கு நின்று பார்க்க ஆரம்பித்து இருந்தாள். அப்போதுதான் மஞ்சுளா, அர்ச்சனா, பாலா,  புவனா அனைவரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் விபாகரனும் மதுவும் அங்கு வர உடனே சாத்விக்கும் வந்தான், இப்போது அவள் பார்த்தது விபா மட்டும் சாத்விக்கை தான்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.