(Reading time: 11 - 21 minutes)

“இல்லைமா. ஷ்யாமும் இன்றைக்கு சீக்கிரம் கிளம்பினான் இல்லையா? அதனால் அவனே கொண்டு விடுகிறேன் என்று சொல்லிவிட்டான்”

“சரி அத்தை” என்று மட்டும் கூறியவள், சற்று நேரம் அவர்களிடம் பேசிவிட்டு , பிரேக் பாஸ்ட் முடித்து, ஆபீஸ் கிளம்ப தன் அறைக்குச் சென்றாள்.

அத்தனை நேரம் கீழே பேசிக் கொண்டு இருந்தாலும் கூட அவள் மனம் எல்லாம் ஷ்யாமிடம் சண்டை போட்டுக் கொண்டு இருந்தது.

எத்தனை சீக்கிரம் கிளம்பினாலும், அவளிடத்தில் சொல்லிவிட்டே கிளம்புபவன், இன்றைக்கு சொல்லவும் இல்லை. முதல் நாள் இரண்டு முறை கோபம் கொண்டதற்கு பதிலும் சொல்லவில்லை. பேசக் காத்து இருந்தது தெரிந்தும் அதைக் கண்டு கொள்ளவும் இல்லை.

இந்த அத்தானுக்கு என்னதான் ஆச்சு? அப்படி என்ன என் மேல் கோபம் ? என்று அவளுக்குள் கேள்வி தோன்றியது.

சற்று நேரம் அப்படியே அமர்ந்து இருந்தவள், மைதிலி அவளை அழைக்கும் குரல் கேட்கவும், ஒரு பெருமூச்சுடன் அலுவலகத்திற்குக் கிளம்பினாள்.

அன்றைக்கு அவள் அலுவலகத்தில் மைதிலி மற்றும் அதிகாரிகளோடு ஒரு மீட்டிங் இருந்தது.

எல்லோரும் கான்பெரென்ஸ் ஹாலில் அமர்ந்து இருக்க, இவர்களின் கிளையன்ட்டாக ராம் க்ரூப்ஸ் நிறுவனத்தின் பர்சனல் மேனேஜர் வந்து இருந்தார்.

மித்ரா ஆச்சர்யமாகப் பார்க்க, மைதிலிக்கு வருவது யார் என்று தெரிந்து இருந்தாலும் , என்ன விஷயம் என்று முழு விவரம் தெரியாததால், அவளும் அவரை ஆச்சர்யமுடன் தான் பார்ததாள்.

“குட் மார்னிங் மேடம்” என்று கூற,

“குட் மார்னிங் சார், ப்ளீஸ் பீ சீடெட் “ என்று அவரை அமரச் சொன்னாள் மைதிலி.

“சொல்லுங்க சார், வாட் கேன் வி டூ?” என்று ஆரம்பிக்க,

“மேடம், ராம் க்ரூப்ஸ்க்கு இப்போ சில வெளிநாட்டு கிளைன்ட்ஸ் நம்ம பாக்டரி, ஆபீஸ் எல்லாம் விசிட் பண்ண வராங்க. எங்க கம்பெனி ஸ்டாப்ஸ் எல்லோரும் ஆர்டர் , சேல்ஸ் எல்லாத்திலயும் பிஸியா இருக்கிறதால், அவங்கள ரிசீவ் பண்ணி, அவங்களுக்கு தங்க, சாப்பிட, கன்வேயன்ஸ்க்கு எல்லா ஏற்பாடும் உங்க கன்சுல்டன்சி சர்வீஸ் மூலமா செய்து தரனும். அதோட அவங்களுக்கு நல்ல டூர் பாக்கேஜ் அவங்களோட டேஸ்ட்டுக்கு ஏற்ற மாதிரி அரேஞ் செய்யணும். பர்ஸ்ட் இந்த டீல் நல்லா அமைஞ்சுட்டா, இனிமேல் இது சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு உங்க கூட டீல் அக்ரீமென்ட் போட்டுடலாம்ன்னு பார்க்கிறோம் “

“ஒஹ். இது கம்பெனியே வழக்கமா பண்ணுவீங்க தானே?

“ஆமாம். பர்சனல் & ட்ரைனிங் டிபார்ட்மென்ட் பார்த்துப்பாங்க மேடம். ஆனால் இப்போ நிறைய எக்ஸ்போர்ட் ஆர்டர் இருக்கிறதால், ரெண்டு டிபார்ட்மென்ட்டும் பிஸியா இருக்காங்க. & இது மட்டும் இல்லாமல், கம்பெனியில் அப்போ அப்போ நடக்கும் பெர்சொனலிட்டி ட்ரைனிங், ஸ்கில் ட்ரைனிங் ப்ரோக்ராம் எல்லாத்துக்குமே உங்க சர்வீஸ் யூஸ் பண்ணிக்கலாம்ன்னு சொல்லிருக்காங்க”

“உங்க சேர்மன் ராம் சார் ஐடியாவா இது?

“இல்லை மேடம். எம்.டி ஷ்யாம் சார் ஐடியா “ எனவும், மைதிலிக்கு புரிந்து விட்டது. இது ஷ்யாம் மித்ராவிர்காக செய்ய நினைக்கிறான் என்று. பிளானிங் விட கோ ஆர்டினஷேன் ஸ்கில் மித்ராவிற்கு இருக்கு என்பதை ஷ்யாம் உணர்ந்து கொண்டு தான் , அவளிடம் ஒரு பொறுப்பை இப்படித் தர எண்ணுகிறான் போலே என்று நினைத்துக் கொண்டாள்.

மித்ரா சாதரணமாக அமர்ந்து கொண்டு இருந்தாள். இந்த மீட்டிங் தனக்கு ஒரு பயிற்சி என நினைத்துக் கொண்டாள்.

மைதிலி “மித்ரா” என்று அழைக்கவும், நிமிர்ந்து பார்த்தாள்

“மித்ரா, ராம் க்ரூப்ஸ் வொர்க்க உன்கிட்டே ஒப்படைக்கிறேன். அவர்கிட்டே டிடைல்ஸ் கேட்டுட்டு, ஒரு கொடேஷன் ரெடி பண்ணி, ஈவ்னிங் என்னை வந்து பாரு” என்றாள்.

மித்ரா தயங்கவே, கண்ணாலே அவளுக்குத் தைரியம் சொன்னாள் மைதிலி. அதைப் புரிந்து கொண்டு சரி என்றாள்.

மற்ற எல்லோரையும் மித்ராவிற்கு தேவையான ஹெல்ப் செய்ய சொல்லிவிட்டு, ராம் க்ரூப்ஸ் பர்சனல் மேனேஜரை மித்ரா அறையில் காத்து இருக்கச் சொன்னாள்.

எல்லோரையும் கிளம்ப சொல்லிவிட்டு மைதிலி மித்ராவின் அருகில் வந்து , அவள் தலையைத் தடவிய படி,

“மிது, இந்த டீல் நல்லபடியா பண்ணுடா. உனக்கு நல்ல வாய்ப்பா இருக்கும்”

“ஆனால் அத்தை, நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா, மாமா கம்பெனி, நம்ம கம்பெனி ரெண்டுக்கும் கெட்ட பெயர் கெட்டுடுமே”

“ஒன்னும் ஆகாது. நீ நல்லபடியா இந்த வேலையை முடிப்ப என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனக்கு மட்டும் இல்லை நம்ம ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் இருக்கு. சோ தைரியமா பண்ணு. நம்ம ஸ்டாப்ஸ் உனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. பட் பிளானிங் உன்னோடதா இருக்கணும்”

மைதிலியின் நம்பிக்கையைக் கண்ட மித்ரா, தன்னால் இயன்ற அளவு இந்த வேலையை சிறப்பாக முடிக்க மனதில் உறுதி பூண்டாள்.

தன் காபின் சென்று, ராம் க்ரூப்ஸ் பர்சனல் மேனேஜரிடம், கிளையண்ட்ஸ் பற்றிய விவரங்கள், அவர்கள் வரும் தேதி, இங்கிருந்து அவர்களின் நாட்டுக்கு திரும்பும் தேதிகள் எல்லாம் வாங்கிக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.