(Reading time: 11 - 21 minutes)

அதோடு அவர்கள் பாக்டரி விசிட் எந்த நாளில் வருகிறார்கள், எத்தனை நாட்கள் அவர்களுக்கு ஓய்வு எல்லா விவரங்களும் தன் லேப்டாப்பில் சேவ் செய்து வைத்தாள்.

அவர் சென்றவுடன், சென்னையில் உள்ள ஸ்டார் ஹோடேல்ஸ், அதில் இருக்கும் வசதிகள் அனைத்தும் அலசி ஆராயிந்து இரண்டு, மூன்று ஹோடேல்ஸ் தேர்வு செய்து, அதற்குண்டான கட்டணங்கள் பற்றிய விவரம் எல்லாம் எடுத்து வைத்தாள்.

காலையில் மைதிலி சொன்ன மாதிரி, ஓரளவிற்கு எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டு , அவள் அறைக்குச் செல்ல முயற்சிக்கும் போது, அவளுக்கு போன் வரவே, எடுத்துப் பேசியவள்,

“இன்று மாலையா?” என்று யோசித்தாள்.

பின், “சரி. நான் மாலை அவர்களைப் பார்க்க வருகிறேன் “ என்று விட்டு வைத்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பின் மைதிலியோடு அமர்ந்து அவள் தயாரித்த எஸ்டிமேட் காண்பித்தாள்

“குட் மித்ரா. இதை அப்படியே ஷ்யாமின் மெயில் ஐ டிக்கு அனுப்பி வைத்து விடு. அப்படியே அந்த பர்சனல் மானேஜருக்கும் ஒரு மெயில் CC டு போட்டு விடு” . என, அதைச் செய்தாள் மித்ரா.

பின் “அத்தை. நான் ஈவ்னிங் வெளியில் போறேன். நீங்க எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க வேண்டாம்”

“எங்கடா போறே?

“வெளியில் ஒரு வேலை இருக்கு அத்தை. அதான் போறேன்”

“சரிம்மா.. ஷ்யாம் கேட்டால் என்ன பதில் சொல்றது?

“அவள் அவங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்கான்னு சொல்லுங்க அத்தை” எனவும் மைதிலி பட படத்தது விட்டாள்.

“இப்போ எதுக்கு அங்கே போறே? சபரி கூட எங்கிட்ட ஒன்னும் சொல்லலை.

“ஒன்னும் இல்லை அத்தை. சும்மாதான்” என்று மட்டும் கூறினாள்.

மாலையில் அன்று சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்த ஷ்யாம், மித்ராவை மேலே தங்கள் அறையில் தேடினான். அங்கே இல்லை எனவும், மைதிலியிடம்

“அம்மா, மிது எங்கே? “ என்று வினவினான்.

“அவள் அம்மா வீட்டிற்குப் போயிருகாடா” எனவும், ஷ்யாம் ஷாக் அடித்தது போல் நின்று விட்டான்.

முதல் நாள் கோபத்தில் அவள் அம்மா வீட்டிற்குப் போகச் சொல்லித் தான் சொன்னதை தான் இப்போது செய்து இருக்கிறாளோ என்று எண்ணி பயந்தான்.

ஆம் . அவனுக்குப் பயம் தான். ஏற்கனவே அப்பா கூப்பிட்டு திட்டி விட்டார். இன்னும் மித்ரா எதாவது அத்தையிடம் சொன்னால், அவர்கள் இங்கே வந்து அம்மாவிடம் சொல்லி விடுவார்களே. அப்போ அம்மாவும் கோபப்படுவார்களே . அதோடு இந்த மித்ராவும் இத்தனை நடந்தும் தன்னிடம் நேரடியாக எதையும் கேட்காமல் அவள் மற்றவர்கள் மூலமாகவே செய்கிறாளே என்ற கோபமும் வருத்தமும் வந்தது.

மித்ரா நடந்ததைச் சொல்லி, சபரி அத்தை இங்கே வந்து சண்டை போடுவதைக் காட்டிலும், நாமே அங்கே சென்று சமாதானப் படுத்திக் கூட்டி வந்திடலாம் என்று எண்ணிக் கிளம்பினான்.

காரில் செல்லும்போதே மித்ராவிடம் பேசி, அவளை அங்கேயே இருக்கச் சொல்லலாம் என்று அவளுக்கு செல் போனில் அழைக்க, அது சுவிட்ச் ஆப் என்று வந்தது.

அவன் சபரியின் எண்ணுக்கு அடிக்க ,

“ஹலோ ஷ்யாம். எப்படி இருக்க? மித்ரா எப்படி இருக்கா ? ரெண்டு பேரையும் பார்த்து ரொம்ப நாளாச்சு. அத்தை வீட்டிற்கு வாயேன் “ என்று கேட்க,

ஷ்யாம் திகைத்துப் போய் கார் பிரேக் அழுத்த, வண்டி சத்தமிட்டு ஒருமுறை குலுங்கி நின்றது.

தொடரும்

Episode # 35

Episode # 37

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.