(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 35 - தேவி

Kaathalana nesamo

சேகருக்குச் சொந்தமானது  மல்டி ஸ்பெஷலிட்டி ஹாஸ்பிடல்தான் . அவனின் அம்மா, அப்பா இருவரும் மருத்துவர்கள். அவனின் மருத்துவமனையில் பல பிரிவுகள் இருந்தாலும், கார்டியாக் பிரிவிற்கு மட்டும் வெளி மருத்துவர்கள் தான் வந்து கொண்டு இருந்தார்கள். இவர்கள் மற்ற பிரிவுகளில் பெயர் பெற்ற மருத்துவமனை என்பதால், கார்டியாக் செமினாருக்கு இவர்களுக்கும் அழைப்பு இருந்தது. இவர்களுக்கு வரும் கார்டியாக் ஸ்பெஷலிஸ்ட்டிடம் அழைப்பைக் கொடுத்த போது அவருக்கு ஏற்கனவே அழைப்பு இருப்பதாகக் கூறி, இதை சேகரை உபயோகப்டுத்திக் கொள்ளச் சொன்னார்.

ஷ்யாம் பேசும்போது சுமித்ராவின் விருப்பம் கார்டியாக் மேல்படிப்பு என்று சொல்லியிருந்தான். எனவே தான் சேகர் தன்னோடு சுமித்ராவை அழைத்துச் சென்றான்.

தேசிய அளவிலான இதய நிபுணர்கள் கலந்து கொண்டு செமினார் கிளாஸ் எடுக்கவே, சுமித்ராவிற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சுமித்ரா சிறிது கூட கவனம் சிதறாமல் அந்த செமினாரை கவனிப்பதைக் கண்ட சேகருக்கு அவளைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது.

எத்தனைக்கு எத்தனை விளையாட்டுத் தனமாக இருக்கிறாளோ அதை விட அவளின் படிப்பில், வேலையில் கவனம் செலுத்துவதைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டான். ஷ்யாமின் தங்கை அல்லவா ? அவனைப் போலத் தான் இருப்பாள் என்று எண்ணிக் கொண்டான்.

மதியம் லஞ்ச்சின் போது  சேகர், சுமித்ராவிடம்

“சுமித்ரா, நான் இப்படியே கிளம்பறேன். அங்கே வழக்கமான வேலை எல்லாம் பார்க்கணும். “

“நானும் வரணுமா டாக்டர்?

“இல்லை. வேண்டாம். நம்ம ஹாஸ்பிடல் சார்பில் ரெப்ரசென்ட்டிவ்வா உன் பெயர் கொடுத்துட்டேன். சோ இந்த ஒரு வாரம் இங்கே வந்து செமினார் அட்டென்ட் பண்ணிட்டு வீட்டுக்குப் போகலாம். நெக்ஸ்ட் வீக் வந்து ரிப்போர்ட் பண்ணு”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஓகே. டாக்டர் . தேங்க்ஸ் சோ மச்” என்று கூறி விட்டு அவளின் அப்போதைய தலையாய கடமையான சாப்பிடும் வேலையைப் பார்த்தாள்.

பபே முறையில் உணவு என்பதால், சேகரோடு சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று கொஞ்சம் அளவாகவே எடுத்து வந்தவள், அவன் கிளம்புகிறேன் என்றதும், நேராக சென்று இரண்டு ப்ளேட்டில் கோபி fry எடுத்து வந்து அமர்ந்து கொண்டு,

“சப்பா.. அந்த சிடுமூஞ்சி சிங்காரம் கிளம்பிடுச்சி. இல்லாட்டா இந்த fry எடுத்து வந்ததுக்கு நாலு பக்கத்துக்கு அட்வைஸ் கிளாஸ் எடுத்து இருப்பார். “ என்று முணுமுணுத்தபடி போர்க் வைத்து அதை எடுக்க ஆரம்பிக்கும் போது, அவள் அருகில் பேன்ட் அணிந்த கால்கள் தெரிந்தது.

“யாரா அது? “ என்றபடி நிமிர்ந்தவள், அங்கே சேகரை காணவும், ஹி ஹி அசடு வழிந்தாள்.

“இல்லை சார். ஆயில் பூட் நிறைய சாப்பிட்டா திட்டுவீங்கள்ள. அத தான் மைன்ட் வாய்ஸ்லே சொல்லிட்டு இருந்தேன்”

“உன் மைன்ட் வாய்ஸ் ஊருக்கே கேட்கற லவுட் ஸ்பீக்கர் வாய்ஸ்சா இருக்கு. கொஞ்சம் வால்யும் குறைச்சுக்கோ”

இப்போது “ஹ்க்கும். அது எல்லாம் டிசைன் அப்படி” என்று முணுமுணுக்க,

“இப்போவும் உன் மைன்ட் வாய்ஸ் சத்தமாதான் இருக்கு” என்று மேலும் வாரினான் சேகர்.

“டாக்டர் , என் மைன்ட் வாய்ஸ் கேட்ச் பண்றத விட்டுட்டு என்ன சொல்ல வந்தீங்களோ அதைச் சொல்லுங்க”

“ஹ்ம்ம். நேரம். ஈவ்னிங் பிக்கப் பண்ண உன் அண்ணன் வருவானா? இல்லை நான் வந்து பிக்கப் பண்ணி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடறேன். அங்கிருந்து வழக்கம் போலே போறியா?

“நான் அப்போவே அப்பாக்கு மெசேஜ் பண்ணிடேன். அவங்களே வந்து பிக்கப் பண்ணிக்கிறேனு சொன்னாங்க”

“ஒன் வீக் வரணுமே ? என்ன பண்ணுவ?”

“இன்னிக்கு அப்பா வருவாங்க. தென் டிரைவர்க்கு இடம் சொல்லிடலாம்னு சொல்லிடாங்க “

“ஓகே. டேக் கேர். இந்த செமினார் நல்லா யூஸ் பண்ணிக்கோ. நெக்ஸ்ட் வீக் பார்க்கலாம்” என்று விட்டுக் கிளம்பினான்,

அவன் நிஜமாகவே கிளம்பி விட்டானா என்ற ஒரு நிமிடம் பார்த்து விட்டு, அதன் பிறகே தன் வேலையைத் தொடர்ந்தாள்.

அப்போதும் அவளின் வாய் சும்மா இருக்காமல் “வர வர இந்த டாக்டர் அக்கபோருக்கு ஒரு அளவில்லாம போயிட்டு இருக்கே. ச்சே. ச்சே. மனுஷி நிம்மதியா சாப்பிட முடியுதா” என்று பேசிக் கொண்டே, மீண்டும் தலை திருப்பி பார்துக் கொண்டாள்.

“ஒய். மைன்ட் வாய்ஸ். கொஞ்சம் அடக்கி வாசி. அப்புறம் எல்லாம் சேர்ந்து உன்னை அடக்கம் செய்துரப் போறாங்க பார்த்துக்கோ”

என்றபடி சாப்பிட்டு முடித்து, மீண்டும் செமினார் அட்டென்ட் செய்தாள்.

மாலை அவளுக்கு ஏற்கனவே சொல்லியிருந்தபடி ராம் வந்து காத்து இருக்கவே,

“ஹாய் பா “ என்று காரில் ஏறிக் கொண்டாள்.

“ஹாய் சுமி” என்ற ராம்,  காரைக் கிளப்பியபடி,

“என்னடா, செமினார் எப்படி இருந்தது?”

“நல்லா இருந்துது டாட். இங்கே வந்த எல்லா டாக்டர்ஸ்சம், கெஸ்ட் லெக்சர்ஸ் வேறே கொடுக்கிறாங்களாம். சோ அவங்க போற காலேஜ் டிடைல்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிருக்கேன். அதில் எது பெஸ்ட்டோ அதில் சேர்ந்துறலாம் டாட்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.