(Reading time: 12 - 24 minutes)

“அதானே பார்தேன். நீ செமினார் எடுத்து, அங்க உள்ளவங்களுக்கு எல்லாம் புரிஞ்சா, இந்த உலகம் தாங்குமா?

“ஒய்.. என்ன லந்தா ? உன் புருஷன் கூட சேர்ந்து உனக்கும் பயம் விட்டுப் போச்சா?

“ஹலோ .. இங்கே பேச்சு உனக்கும் எனக்கும் தான். உங்க நொந்ணனை எதுக்கு இழுக்கற?

“அவனை இழுக்காம? காலையில் என்னவோ மிளகாய் கடிச்சவனாட்டம் கத்திகிட்டு கிடந்தான்.”

மைதிலி “ஷ்யாமை ஏண்டி இப்படி சொல்ற? அவனுக்கு என்ன டென்ஷனோ”

“ஏன் உன் சீமந்த புத்திரனுக்கு மட்டும் தான் டென்ஷன் வருமோ? எங்களுக்கு எல்லாம் வராதோ?”

“உன் கூட பேச முடியாதுடி. அவனே வந்து உன்னை சமாளிக்கட்டும்”

“அதுக்குதானே வைடிங்.” என்றவள், அப்போதுதான் நினைவு வந்தவளாக

“ஹேய் மித்ரா, நீ ஏன் இப்போ ஷ்யாமை திட்டின? அவனோட கொ.ப.செ. நீதானே. “

“ஹ. அந்த போஸ்ட்ட எல்லாம் ரிசைன் பண்ணியாச்சு”

இது எப்போ?

“காலையில் எட்டரை மணி ப்ரேகிங் நியூஸ்லேயே. உனக்குத் தெரியாதா?

“வாட். நான் ஒரு நாள் காலையில் சீக்கிரம் கிளம்பினதில் இவ்ளோ பெரிய நியூஸ்சா? வாட் நியூஸ்? யூ டெல் ?” என்று மித்ராவை ஏவ, இத்தனை நேரம் அவளிடம் வாயாடிக் கொண்டு இருந்த மித்ரா, இப்போது சற்றுத் தயங்கினாள்.

மைதிலி அதை உணர்ந்தவளாக “ சுமி, போய் முதலில் கை கால் சுத்தம் பண்ணிட்டு வா. “ என்று எழுப்பி அனுப்பி விட்டாள்.

அப்படியே அரட்டையும், கால்வாரலுமாக அன்றைய மாலைப் பொழுதும் கழிய, இரவு உணவின் போது ஷ்யாம் வந்து விட்டான்.

எல்லோரும் டைனிங் டேபிளில் அமர்ந்து இருக்கவே, ஷ்யாமும் கையைக் கழுவிக் கொண்டு சுமியின் பக்கத்தில் சென்று அமர்ந்தான்.

சுமித்ரா தான் , மைதிலியிடம் “என்னம்மா? இன்ன்றைக்கு பட்டத்து இளவரசர் சீக்கிரமே வந்துருக்கார்? என்ன விஷயமோ?” என்று கேட்க,

“ஹ. இந்த லிட்டில் பிரின்சஸ் மூஞ்சி அங்க்ரி பர்ட் மூஞ்சியா மாறி இருக்கிறதா பி.பி.சிலே நியூஸ் வாசிச்சாங்க. அந்த அரும்பெரும் காட்சியைக் காணத்தான் ஓடோடி வந்தேன்”

“டேய். யாருக்கு அங்க்ரி பர்ட் மூஞ்சி? உனக்குத் தான் அங்க்ரி பர்ட் அண்டங்காக்காய் மாதிரியே இருக்கு மூஞ்சி?

“ஹ.ஹ. நீ மட்டும் என்ன அந்த மஞ்சளா ஒரு சிட்டுக் குருவி இருக்குமே. அது மாதிரிதான் இருக்கே”

“நீதான். “ நீதான்” என்று மாறி மாறி இருவரும் சண்டையிட்டுக் கொண்டு இருக்க , ராம் தான்

“ச்ஷ்.. பேசாம சாப்பிடுங்க.” என்று கூறவே, ரெண்டு பேரும் வெவ்வே.. என்று அழகு காட்டிக் கொண்டு சாப்பிட்டனர்.

ராம் முதலில் சாப்பிட்டவன் , “ஷ்யாம் , சப்ப்பிட்டு விட்டு , ஆபீஸ் ரூமிற்கு வா, உன்னிடம் கொஞ்சம் பேசணும்” என, ஷ்யாமும் “சரிப்பா” என்றான்.

எல்லோரும் சாப்பிட்டதும் , தங்கள் அறைக்குச் செல்லத் திரும்பும் போது

“சுமிக் குட்டி” என்றழைக்க,

“என்ன ?” என்று அருகில் வந்தாள்.

“இந்தா. உன்னோட பேவரிட் சாகொபார் “ என்று கொடுத்து விட்டு “சாரிடா. மோர்னிங் ஏதோ டென்ஷன்லே பேசிட்டேன். “ என,

“உன்கிட்ட பேசக் கூடாதுன்னு தான் இருந்தேன். ஆனாலும் என்னோட சாக்கிகாக உன்னை மன்னிச்சுட்டேன் போ” என்று கூற,

“அடிப்பாவி, இங்கே பீல் பண்ணி சாரி கேக்கறேன். அதை விட்டுட்டு, சாக்கியப் பற்றி பேசறியே?

“உன்னோட பீல் வச்சு நோ யூஸ் பாஸ். மை சாக்கி இஸ் மை டார்லி” என்றபடி அவனுக்கு குட் நைட் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

அவர்கள் இருவரின் அலப்பரைகளைப் பார்துக் கொண்டே மித்ரா, தங்கள் அறைக்குச் செல்வதை ஷ்யாமும் பார்த்தான்.

பிறகு தன் தந்தை அறைக்குச் சென்று

“என்ன விஷயம் பா? “ என்று கேட்டான்.

ராம் ஷ்யாமின் முகத்தை நேரடியாகப் பார்த்தபடி

“நீ உன்னோட ரேஸ் விபத்திற்குப் பிறகு திருப்பி செக்கப் பண்ணின இல்லியா?

“ஆமாம். “

“அப்போ மித்ராவிற்கும் ஹாஸ்பிடல் செக்கப் பண்ணியா?

“ஆமாம்”

“இப்போ மித்ராவிற்கு செக்கப் பண்ண வேண்டிய அவசியம் என்ன வந்தது?

“அது..” என்று ஒரு நிமிடம் தயங்கிவிட்டு “அதைப் பற்றி என்ன டாட். இப்போ?

“எதுக்காக டெஸ்ட்ன்னு கேட்டா, இப்படிப் பதில் சொல்ற?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.