(Reading time: 12 - 24 minutes)

“வெரி குட். சுமிமா. “ என்றபடி

“ஹ்ம்ம். ஷ்யாம் சொன்னான். சேகர்கிட்டே ஷ்யாம் பேசிருக்கான்”

“ம்க்கும். உங்க புள்ளையப் பத்திப் பேசாதீங்க. காலையில் என்னவோ ஓவரா சீன் போட்டான். அப்படியே விட வேண்டியது தானே. ஏன் அவன் பிரெண்ட் கிட்டே பேசினானாம்?

“சுமி, அவனுக்கு ஏதோ டென்ஷன். அதப் பற்றி யோசிச்சுகிட்டே உன்கிட்டே கத்திட்டான். அதை அப்படியே விட்டுடு”

“உங்க லிட்டில் பிரின்சஸ் நான் அப்படின்றது எல்லாம் சும்மாதான். உங்க யுவராஜா வச்சது தான் இந்த வீட்டில் சட்டம்”

“அப்படி எல்லாம் இல்லைடா. “ என்று சுமியை மேலும் கொஞ்ச நேரம் சமாதனப் படுத்தினான் ராம்.

பிறகு “அப்பா, அண்ணாவ வேணா மறுபடி செக்கப் பண்ண சொல்லலாமே”

“ஏண்டா.. ஏற்கனவே அவன் பண்ணிட்டு வந்துட்டானே”

“ஆமாம். நானே பார்த்தேனே ரெண்டு பேர் ரிப்போர்ட்டும்.

“ரெண்டு பேரா? ஷ்யாம் மாட்டும்தானே செக்கப் பண்ணினான்”

“இல்லைப்பா. மித்ராவிற்கும் எல்லா டெஸ்டும் எடுத்து இருக்காங்க”

“எப்போடா?

“அவன் பைக் ரேஸ் அப்போ அடிபட்டு வந்தான் இல்லியா? அந்த டைம் தான் “

“என்ன செக்கப்?

“ஜெனரல் தான். “

“மித்ராவிற்குத் தெரியுமா?

“தெரியும்பா. நாந்தான் அவளை ரிபோர்ட் வாங்க வரசொன்னேன்”

“ஹ்ம்ம். ஓகே. ரிபோர்ட் எல்லாம் நார்மல் தானே”

“நார்மல் தான் பா. “

என்று அவள் கூறவும், பேச்சை மாற்றி விட்டான். செமினார் பற்றிப் பேசிக் கொண்டே வீட்டிற்கே வந்து விட்டார்கள்.

மைதிலி மித்ரா இருவரும் தங்கள் மாலை காபியை அருந்திக் கொண்டு இருக்க, சுமித்ரா நேராக வந்து மித்ராவிற்கு வைக்கப்பட்டு இருந்த பஜ்ஜியை எடுத்துக் சாப்பிட்டாள்.

அப்படியே சமையலறை நோக்கி “சுமி செல்லத்துக்கு ஒரு காபி கொடுங்கப்பா” என்று குரல் கொடுத்தாள்.

மைதிலி “ஏய். சோம்பேறி. வெளிலேர்ந்து வந்து கை, கால் கூட கழுவாமல், என்ன இது ? நீயெல்லாம் டாக்டர்ன்னு வெளிலே சொல்லாதே”

“அடப் போங்க மம்மி. ஆனானப்பட்ட ரூல்ஸ் ராம் கிட்டேயே நான் பிரேக் தி ரூல்ஸ்ன்னு பாடிட்டு போயிட்டே இருக்கேன். எங்கிட்ட வந்து ரூல்ஸ் பேசறீங்களே? என்னம்மா நீங்க? இப்படி பண்றீங்களேமா? “

“வாயாடி. இந்த வாய் மட்டும் இல்லைனா.. உன்னை யாரும் சீண்டக் கூட மாட்டங்க”

“ஹ. என் அருமை பெருமை எல்லாம் உங்களுக்கு என்ன தெரியுது?

இப்போது மித்ரா “உங்க எருமை சாரி.. சாரி.. பெருமை எல்லாம் வேறே யாருக்கு தெரியுதுங்க மேடம்?

“வேறே யார்? நம்ம சிடுமூஞ்சி டாக்டர்க்கு தான்”

மைதிலி “சுமி, காலையில் தானே ஷ்யாம் கிட்டே திட்டு வாங்கின. மறுபடியும் அப்படியே பேசற. என்ன பழக்கம் இது?” என்று படபடத்தாள். ராமிடம் திரும்பி “நீங்களாவது அவளை சத்தம் போடுங்க” என்று சொன்னாள்.

ராம் சுமியிடம் “என்ன பழக்கம் சுமிம்மா இது? நமக்குள் கேலி, கிண்டல் என்றால் சரி. அதுவே லிமிட் தாண்டக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா. உனக்கு இன்டர்ன்ஷிப் கொடுக்கிறவர், ஷ்யாமோட பிரெண்ட் அவர் கிட்டே இப்படி பேசினால், ஷ்யாமைப் பற்றி என்ன நினைப்பான்? அல்லது எங்களைப் பற்றி என்ன எண்ணம் இருக்கும்?”

கொஞ்சம் அழுத்தமாகவே ராம் கேட்க.

“இல்லைப்பா.. அவர் அப்படி எல்லாம் சீரியஸ்சா எடுத்துக்க மாட்டார். அதோடு அவரும் என்னைப் பேச விட்டுக் கேட்பார். எனக்கும் அவரை வெளி ஆள் போல் தோன்றுவதில்லை. அதனால் தான் அப்படி கேலி செய்கிறேன்”

“இருந்தாலும் நீ இடம் பொருள் பார்த்துப் பேசணும். அதை விட உன்னோட ரெஸ்பெக்ட் எந்த இடத்திலும் இறங்கிடாத மாதிரி நடந்துக்கணும்”

“சரி டாட். “ என்று சின்னக் குரலில் கூறவும், அத்தனை நேரம் ராம், மைதிலி சுமித்ராவிடம் பேசியதில் தலையிடாது இருந்த மித்ரா,

“சுமி, இன்னிக்கு எதுக்கு சீக்கிரம் போன?” என்று கேட்கவே,

“ஹ.. என் அருமை தெரிஞ்ச அந்த டாக்டர், என்னை செமினார் போக சொன்னார்” என்று கூறினாள்.

“என்னது செமினார் ? நீ எடுத்தியா?”

“ஹி ஹி.. நான் எடுக்கலை மத்து. ஒரு கார்டியாக் செமினாருக்கு என்னை ரெப்ரெசென்ட் பண்ண சொன்னங்க “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.