(Reading time: 40 - 79 minutes)

தொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்? - 01 - சுதி

Uyire yen pirinthaai

லகில் உள்ள இருளை நீக்கி ஆதவன் தன்னுடைய பணியை ஆரம்பிக்க ஆயத்தமாகும் அதிகாலை வேலையில் அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்க,நம் நாயகி சுவாதி அயர்வாக அமர்ந்திருந்தால். இரவு முழுவதும் பயணம் செய்த கலைப்புடனும் அழுது வீங்கிய முகத்துடனும் இருந்தவளின் அருகில் கண்டைக்டர் வந்தவுடன் திருச்சிக்கு டிக்கெட் எடுத்தவள் சீட்டின் பின் பக்கமாக சாய்ந்தாள்.இனி தன் வாழ்வில் தனிமைக்கு மட்டும்தான் இடம் இருக்க போகிறதா என்று எண்ணும்போதே நான் இருக்கிறேன், என்றது அவளின் வயிற்று சிசு.

தன்னுடைய வயிற்றை தடவியவள் குழந்தையை நினைத்து மனதை தேற்றிக்கொண்ட வேலையில் அவனின் நினைவும் அழையா விருந்தாளியாக வந்தது. அவனின் நினைவு வரும் பொழுது, தான் கோபமாக உணர்கிறோமா, இல்லை தன்னுடைய இயலாமையை எண்ணி வருந்துகிறோமா என்று அவளுக்கே தெரியவில்லை. தூங்க எண்ணி கண்ணை மூடியவள் பழைய நினைவுகளின் தாக்கத்தால் தூங்காமல் வேடிக்கை பார்க்க துவங்கினாள்.

திருச்சி பேருந்து நிலையத்தில் இறங்கியவள். தன் தோழி கீதாவின் வீட்டுக்கு செல்லும் பேருந்தில் அமர்ந்தாள். கீதாவை பற்றி நினைக்கையில் எப்போதும் தோன்றும் புன்னகை இன்றும் அவள் இதழ்களில்,கீதாவும் சுவாதியும் நெருங்கிய தோழிகள். கீதாவின் அப்பா ராகவன் மத்திய அரசு ஊழியர் அம்மா வள்ளி வீட்டு நிர்வாகி வேலை காரணமாக நாகப்பட்டினம் வந்தார்கள். சுவாதி சொந்த ஊரே நாகபட்டினம்தான், இருவரும் பக்கத்து வீடு என்பதால் நெருங்கிய தோழி ஆனார்கள். சுவாதியின் தந்தை கோவிந்தன் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர், குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆனவர் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்று குடிக்க ஆரம்பித்தார் இதனால் கோபமுற்ற கோவிந்தனின் தந்தை ராஜீ சொத்துக்கள் அனைத்தையும் கோவிந்தனின் இரட்டை மகள்களான மாலதி சுவாதி இருவருக்கும் சரிசமமாக பிரித்து எழுதியவர், அவர்களின் திருமணம் முடிந்து கணவனுடன் வந்து கையொப்பம் இட்டாள் மட்டுமே சொத்தை விற்க முடியும் என்றும் அதுவரை சொத்தில் வரும் வருமானத்தை அனுபவிக்கலாம் என்றும் எழுதி இறுதியாக சொத்துக்கள் அனைத்துக்கும் மருமகள் லட்சுமியை கார்டியனாகவும் நியமித்தார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ராஜீ இறந்து சொத்து விவரம் தெரிந்த பிறகு கோவிந்தனின் கோபம் முழுவதும் மனைவியின் மீதும் மகள்களின் மீதும் பாய்ந்தது. எப்போதும் மகள்களுக்கு சொத்தை பறிக்க வந்தவர்கள் என்ற திட்டு விழும் நான்கு வயதான குழந்தைகளுக்கு என்ன தெரியும், எதற்கு அப்பா திட்டுகிறார் என்று தெரியாமல் முழித்து அதற்காக அடியும் வாங்கிய பின்னர் இருவரையும் கோவிந்தனின் கண்ணில் படாமல் பார்த்துக்கொண்டார் லட்சுமி. இந்த சூழ்நிலையில் தான் கீதாவின் குடும்பம் அவர்களின் பக்கத்து வீட்டுக்கு வந்தனர்.

கீதா சுவாதி, மாலதி அனைவரும் ஒரே வயதுடையவர்கள் ஆதலாலும் விரைவிலேயே நட்பாகினர்.

மாலதி எப்போதும் அமைதி லட்சுமியுடனே இருப்பாள். சுவாதியையும் கீதாவையும் அடக்க முடியாமல் பெற்றோர்கள் திண்டாடுவார்கள். இருவரும் என்ன குறும்பு செய்தாலும் படிப்பில் முதலாவதாக இருப்பதால் இவர்கள் செய்யும் குறும்பை கண்டு கொள்ளாமல் இருந்தனர். இப்படியே இவர்களின் நாட்கள் சுதி,கீதுவின் குறும்பு தனத்திலும் மாலதியின் நாட்கள் அம்மாவுடனும் சென்று இதோ தோழிகள் இருவரும் நல்ல மதிப்பெண் பெற்று ஒன்றாக கல்லூரியில் சேர முடிவு செய்யதனர்.

மாலதி படிப்பில் சுமார்தான் என்றாலும் அவளும் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்று தேறினாள். அந்த நேரம் கீதுவின் தந்தை ராகவ்கு டெல்லியில் உயர் பதவியோடு டிரான்ஸ்பர் கிடைக்க மனம் இல்லாமல் தோழிகள் இருவரும் பிரிந்தனர்.

தில்லை நகர் ஐந்தாவது கிராஸ் இறங்குங்கள் என்ற கண்டைக்டரின் குரலில் தன்னிலை பெற்ற சுவாதி இறங்கியவள், இவ்வளவு நேரம் இல்லாத பயம் தன்னை சூழ்வதை உணர்ந்தாள். என்ன இது ஏன் எனக்கு இப்படி தோன்றுகிறது என்று யோசித்தவள் இல்லை சுவாதி இது போல் பயம் என்ற உணர்வே உனக்கு இருக்க கூடாது. உன் தாத்தா கூறிய தைரியம் என்ன ஆகிவிட்டது, உன்னை வேண்டாம் என்று யாரும் ஒதுக்கவில்லை நீதான் அவர்களை ஒதுக்கி வந்துள்ளாய் உன் தைரியம் எங்கே போனது, உனக்காக உன் குழந்தை இருக்கிறது என்று தனக்குள் கூறிக் கொண்டவள்.

கீதாவின் வீட்டை அடைந்தாள். கேட்டை திறந்து உள்ள போனவளை வரவேற்றது தோழியின் ஆர்ப்பாட்டமான வரவேற்பு குரல்தான்.

ஹாய் சுதி எப்படி இருக்கிறாய்? அம்மா எப்படி இருக்கிறார்கள்? மாலதி எப்படி இருக்கிறாள்? அப்பா டிரான்ஸ்பர் கிடைத்து டெல்லி சென்ற பிறகு தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

அப்பா ரிட்டையர் ஆகி திருச்சி வந்ததும் உன் பழைய போன் நம்பர்கு டிரை செய்தேன் நல்ல வேளை நீ உன் நம்பரை மாத்தவில்லை. உன்னை ரொம்ப மிஸ் செய்தேன் தெரியுமா என்று சுவாதி பேச இடம் தராமல் பேசியவள், என்னடி நான் பாட்டுக்கு பேசி கொண்டிருக்கிறேன் நீ பதில் சொல்லாமல் இருக்கிறாய் என்றவளை, முறைத்த சுவாதி எங்க டி நீ பேச விட்ட? என்றாள் கிண்டலாக.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.