(Reading time: 40 - 79 minutes)

சுவாதி சற்று நேரம் யோசித்தவள் ராகவை பார்த்து நான் இங்கு தங்குகிறேன் என்றவளை மூவரும் மகிழ்ச்சியாக பார்க்க என்னிடம் வாடகை வாங்கி கொண்டாள் என்ற அவளின் அடுத்த வார்த்தையில் அந்த மகிழ்சி துடைக்கப்பட்டு அனைவரும் அமைதியாக பார்க்க,உங்கள் மனதை காயபடுத்துகிறேன் என்று புரிகிறது இருந்தாலும் நீங்கள் என் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி தலை குனிய சுவாதியின் சுயமதிப்பை அறிந்தவர்கள் என்பதால் ஒத்துக்கொண்டனர்.

கீதாவும் பி.ஈ கம்பியூட்டர் படித்ததால் வேறொரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறாள்.மறுநாள் சுவாதி,கீதா இருவரும் வேலைக்கு கிளம்பினர்.முதல் நாள் என்பதால் இருவரும் ஒன்றாக கீதாவின் ஸ்கூடியில் சென்றனர்.சுவாதியின் கம்பெனி தாண்டிதான் கீதாவின் கம்பெனி இருப்பதால் இருவரும் ஒன்றாக தான் செல்வர்.சுவாதிக்கு நாட்கள் மசக்கையிலும் வள்ளியின் கவனிப்பிலுமாக இதோ குழந்தையின் வளர்ச்சி ஏழு மாதம் ஆனது.

வள்ளி சுவாதிக்கு வளைகாப்பு நடத்தலாம் என்று கூற சுவாதி மறுத்தாள்,குழந்தைக்கு நல்லது என்று சொல்லவும் ஒத்துக்கொண்டாள்.வள்ளிக்கு தெரியும் குழந்தையை இழுத்தால் நிச்சயம் சுவாதி சம்மதிப்பாள் என்று,அதனாலேயே குழந்தைக்கு நல்லது என்று சொல்லவும் ஒத்துக்கொண்டாள்.

வள்ளி வீட்டிலேயே வளைகாப்புக்கு ஏற்பாடு செய்தார்.பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் சுவாதியின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாக கூறி சமாளித்தார்.நழுங்கு வைக்க வள்ளி சென்று சுவாதியை அழைத்து வந்தார்.

சுவாதியை பார்த்த கீதா வியந்துதான் போனாள். சாதரணமாகவே சுவாதி நல்ல அழகு இன்று தாய்மை தந்த பொழிவுடனும் மேடிட்ட வயிற்றுடனும் வந்தவளை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள்.அருகில் சுவாதி வந்தவுடன் அனைத்து ரொம்ப அழகா இருக்க டா என்றாள்.அதற்கு சுவாதி மென்மையாக சிரித்தாலே தவிர வேறு எதுவும் பேசவில்லை.

கீதாவோ தன் தோழி வாழ்வை சரி செய்ய ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.ஆனால் என்ன செய்வது ஊருக்கு சென்றாள் சுவாதியின் நிலைக்கு யார் காரணம் என்று தெரிந்து கொள்ளலாம்,அதை பற்றி விசாரிப்போம் என்பதால் ஊருக்கு செல்ல கூடாது என்று சத்தியம் வாங்கிவிட்டாள் என்று யோசித்துக்கொண்டிருந்தவள் என்ன ஆனாலும் சரி ஏதாவது செய்து சுவாதியின் நிலைக்கு காரணமானவரை கண்டுபிடிக்க வேண்டும்.அவரை பற்றி எதுவும் அவள் தப்பாக சொல்லவில்லை ஏதோ மிஸ்அண்டர் ஸ்டாண்டிங்காக இருக்கும் நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த பின்னரே வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாள்.பாவம் அவளுக்கு எங்கு தெரிய போகிறது தோழிக்கு உதவ சென்று தானே சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்று.

வளைகாப்பு முடிந்து வள்ளி சுவாதியை சிறிது நேரம் ஓய்வு எடுக்க சொல்லி கீதாவின் அறைக்கு சென்றவள்,அங்கு இருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னை பார்த்தவளின் கண்கள் மேடிட்டு இருக்கும் வயிற்றில் நிலைத்தது.ஏதேதோ நினைவுகளில் கண்கள் கலங்கியது.நான் என்ன தவறு செய்தேன் எனக்கு ஏன் இந்த நிலைமை.

எல்லா பெண்களை போல் என்னை எனக்காக மட்டுமே விரும்பி ஏற்றுக்கொள்ளும் கணவன் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன்.அது தவறா நான் உயிராக நேசித்தவனே,என் மனதை உடைத்துவிட்டானே என்னுடையவன் என்ற எண்ணம் என்னுள் இருந்து நீங்கி உரிமை இல்லாத ஒன்றை எடுத்து கொண்டது போல் தோன்றும் இந்த நினைவு எப்போது நீங்கும் என்று தனக்குள் பேசிக்கொண்டவளின் கண்களில் கண்ணீர்.

யாரோ வரும் அரவம் கேட்டு கண்ணீரை துடைத்து கொண்டு உதட்டில் போலியான புன்னகையை பூசிகொண்டு திரும்ப கீதாதான் வந்தாள் வந்தவள் உன்னை ரெஸ்ட் எடுக்க சொன்னால் என்ன செய்கிறாய் என்றவள் சுவாதியை உற்று பார்க்க அவளின் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்தவள்.இவள் என்ன நடந்தது என்று சொல்லவும் மாட்டாள் நடந்ததை மறக்கவும் மாட்டாள் இப்படியே மனதில் போட்டு புதைத்து கொண்டு கஷ்டபடுவாள் என்று நினைத்து பெருமூச்சுவிட்டாள்.

சுவாதியின் அருகில் வந்தவள் அவள் வயிற்றில் கை வைத்து டேய் குட்டி பையா இந்த சித்திய பாக்க சீக்கிரம் வா,நம்ம ரெண்டு பேரும் ஜாலியாக விளையாடலாம்,பார்க் போகலாம் சித்தி உன்னை எல்லா இடத்திற்கும் கூட்டி போகிறேன் என்றவளின் குரலுக்கு சரி என்று பதில் சொல்வது போல் உதைத்தான் சுவாதியின் செல்வ மகன்.

கையில் குழந்தையின் அசைவை உணர்ந்தவள் ஹேய்...... என்று கத்தி குட்டி சித்தி பேசரது கேட்கிறதா சுதி இங்கு பாரடி நான் சொன்னதற்கு பதில் சொல்வது போல் உதைக்கிறான் என்றாள் உற்சாகமாக.சுவாதியும் ஆமாம் என்று தலை ஆட்டி சிரித்தாள்.

இப்படியே நாட்கள் மாதங்களாக சுவாதியின் மகன் அபிமன்யு பிறந்தான்.அரைமயக்கத்தில் இருந்த சுவாதியிடம் வந்த நர்ஸ் குழந்தையின் தந்தை பெயரை பிறப்பு சான்றிதலுக்காக கேட்க அர்ஜூன் என்று கூறியவள் முழு மயக்கத்திற்கு சென்றாள்.

கீதாவின் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.வெளியில் வந்த டாக்டரிடம் கீதா குழந்தையை பார்க்கலாமா என்று கேட்க குளிப்பாட்டியவுடன் கொண்டு வருவார்கள் பாருங்கள்.பேசண்டையும் ரூமிற்கு மாற்றியவுடன் பார்க்கலாம் என்று கூறி சென்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.