(Reading time: 40 - 79 minutes)

ராகவ் குழந்தையின் பிறப்பு சான்றிதழுக்கு விவரங்கள் சொல்ல ரிசப்ஷனை தேடி செல்ல,அங்கிருந்த ரிசப்ஷனிஸ்ட் பெண் டிஸ்ஜார்ஜ் ஆகும் போது பீஸ் கட்டிவிட்டு வாங்கி கொள்ளுங்கள் என்றாள்.

குழந்தையின் விவரங்கள் என்று அவர் கேட்க எல்லாம் பேசண்டிடம் கேட்டு வாங்கிவிட்டோம் என்றாள் புன்னகையுடன்.சரி என்று தலை ஆட்டியவர் எப்போது வீட்டிற்கு செல்லலாம் எந்த மாதிரியான உணவுகளை கொடுப்பது போன்ற விவரங்களை கேட்டுவிட்டே சென்றார்.

சுவாதியின் அறைக்கு சென்றவர் குழந்தையை பார்க்க குழந்தையின் சாயல் தனக்கு பரிச்சயமானதை போல் இருந்தது ஆனால் சரியாக தெரியவில்லை.சுவாதியின் ஜாடை கொஞ்சம் கூட இல்லாததை உணர்ந்தவர்.பெருமூச்சுடன் அட குட்டி பையா நீங்க யார் மாறி இருக்கீங்க என்று கொஞ்ச ஆரம்பித்தார். கொஞ்சம் நன்றாக யோசித்திருந்தாள் கண்டுபிடித்திருப்பாரோ என்னவோ.

கீதாவும் இதையேதான் சொன்னால்.ஆனால் குழந்தை அப்படியே அவன் தந்தையை உரித்து வைத்து பிறந்திருக்கிறான் என்று மனதோடு சொல்லி கொண்ட சுவாதி அதை பற்றி வாய் திறக்கவில்லை.சுகபிரசவம் ஆதலால் மூன்று நாட்களில் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.குழந்தைக்குபெயர் அபிமன்யு என்று வைத்தனர் சுவாதியின் விருப்ப படி.

கீதா ஆபிஸ் சென்று வரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் அபியுடனே தான் இருப்பாள்.ஒரு குழந்தை வீட்டிற்கு வந்தால் மகிழ்ச்சிக்கு குறைவேது.அந்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தினான் அபிமன்யு.

ஒவ்வொரு முறையும் கீதாவிடம் திருமண பேச்சை எடுத்தால் அவள் பதில் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்ற பதிலே இருக்க.கீதாவின் அழகை பார்த்து பெண் கேட்டு வருபவர்களை சமாளிப்பதே பெரும் பாடாக இருந்தது பெரியவர்களுக்கு.

கீதாவோ தோழியின் வாழ்வில் மாற்றம் வந்தவுடன் தான் திருமணம் என்பதில் தெளிவாக இருந்தாள்.வருடங்கள் உருண்டோட இதோ அபியின் நான்காவது பிறந்த நாளும் வந்துவிட்டது.தோழிகள் இருவர் வாழ்விலும் எந்த மாற்றமும் இல்லாமல் போக பெரியவர்கள் தான் திண்டாடி போயினர்.

ஒரு முறை சுவாதியிடம் வள்ளி அபியின் அப்பா என்று ஆரம்பிக்க கை நீட்டி தடுத்தவள்,நான் உங்களை இழக்க விரும்பவில்லை என்றாள் புரியாமல் பார்த்த வள்ளியிடம் இனி ஒரு முறை அபியின் அப்பாவை பற்றி பேசினீர்கள் என்றாள் உங்கள் யாருக்கும் சொல்லாமல் எங்காவது சென்றுவிடுவேன் என்றாள் உறுதியான குரலில் சுவாதியின் குரலே சொன்னதை செய்துவிடுவேன் என்ற உறுதி தெரிய பெரியவர்கள் அதன் பிறகு இந்த பேச்சை எடுக்கவில்லை.

கீதா கம்பெனிக்கு அன்று விடுமுறை எடுத்துக்கொண்டு ஜாலியாக அபியுடன் விளையாண்டு பொழுதை கரைத்தாள்.வள்ளி வந்து சாப்பிட அழைத்தவுடன் தான் இருவரும் சாப்பிடவே சென்றனர்.மாலை அபி வந்து அழைக்கவும் பார்க்குக்கு சென்றாள்.அபி விளையாடுவதை இவள் கவனிக்க இவளை இரு விழிகள் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தது.

கீதா நேரமாவதை உணர்ந்தவள் அபி குட்டி வாடா கோவிலுக்கு போய்ட்டு வீட்டுக்கு போகலாம் பாட்டி தேடுவாங்க,என்றவுடன் கீது இன்னும் கொஞ்ச நேரம் என்று தலைசாய்த்து கண்களை சுருக்கி கேட்ட அழகில் கீதா வழக்கம் போல் மயங்கிதான் போனால்.அந்த அழகை ரசித்துவிட்டு மாட்டேன் என்றா சொல்வாள்.ஆனால் கண்டிபாக பார்த்து பைவ் மினிட்ஸ்தான் என்று சொல்லிவிட்டு வேடிக்கை பார்க்கும் வேளையை ஆரம்பித்தாள்.

ஐந்து நிமிடம் என்றது அரைமணி நேரம் ஆன பிறகும் அபி இன்னும் கொஞ்ச நேரம் கதைபாடுவதை நிறுத்தவில்லை என்பதை உணர்ந்தவள் தன் நாடகத்தை ஆரம்பித்தாள்.

கோவிலுக்கு தனியாக போக பயமாக இருக்கிறது என்றுதான் பெரிய மனிதன் என்று உன்னை கூட்டி வந்தேன் நீ என்னவென்றாள் சின்ன பிள்ளைமாதிரி நடந்து கொள்கிறாய்.சரி இன்று கோவிலுக்கு போக வேண்டாம் நாளை அப்பாவுடன் போய் கொள்கிறேன் என்று போலியாக பெருமூச்சுவிட்டாள்.

அபி பிளே ஸ்கூல் போவதால் எப்போதும் தன்னை பெரிய பையன் என்று கூறிகொள்வான் அதனால்தான் கீதாவும் அவ்வாறு கூறினாள்.அபி உடனே நோ கீது நா பிக் பாய்தான் இந்த சுஸ்மி என்னை விடவே மாட்டிக்கிறாள் சின்ன பிள்ளை போல் என்னுடன் விளையாடுனு சொல்லிக்கிட்டே இருக்கா உனக்கு தனியா போக பயமா இருந்தா என் கூட வா நான் கூட்டிட்டுபோறேன்.

இந்த சின்ன பிள்ளைங்க பாவம்னு கொஞ்ச நேரம் விளையாண்டா பொழுதுக்கும் விளையாட சொல்றாங்க பேட் கேர்ஸ் என்றான் பெரிய மனித தோரணையில்.

சற்று முன் விளையாட அனுமதி கேட்டது என்ன இப்போது பேசும் அழகென்ன என்று ரசித்து சிரித்தவள் சரியான போக்கிரி என்று மனதில் நினைத்துக்கொண்டு இவன் சொல்லும் போதே கோவிலுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று வேகவேகமாக சென்றவள் எதிரே வந்தவனின் மார்பில் மோதிக்கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.