(Reading time: 40 - 79 minutes)

மற்றவர்கள் பொருளுக்கு ஆசைபடக்கூடாது என்று நினைப்பவள்

.உங்கள் அண்ணன் காதலித்தது மாலதியை என்றால் பிறகு அபி என்று சொல்லவந்தவள் எப்படி சொல்வது என்று நினைத்து நிறுத்திவிட்டாள்.அவள் என்ன சொல்லவருகிறாள் என்பதை ஊகித்தவன்.எனக்கும் அதுதான் புரியவில்லை.ஆனால் நிச்சயம் என் அண்ணன் தவறான எண்ணத்தோடு எந்த விஷயமும் செய்திருக்கமாட்டார் என்றவன், தவறான நோக்கத்தோடு இருந்திருந்தாள் நிச்சயம் தன்னிலை மறக்கும் அளவு மாறி இருக்கமாட்டார் என்றும் கூறினான்.

கீதா புரியாமல் பார்ப்பதை உணர்ந்தவன்.இப்போது இருக்கும் அர்ஜீன் எங்களிடம் இருந்து விலகியே இருக்கிறான்.எப்போதும் ஹாஸ்பிட்டல் நோயாளி என்றே இருக்கிறான்.அவன் சாப்பிடுகிறானா இல்லையா என்பதுகூட எங்களுக்கு தெரிவதில்லை.அவன் தான் பேசவில்லை நாமாக பேசுவோம் என்றாலும் என்ன கேட்டாலும் ஆமாம் இல்லை என்ற இரண்டு பதில் தான்.

முகத்தில் எப்போதும் சோகம் உயிரற்ற கண்களுடன் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது என்றான்.

நகுலன் சொல்வதை கேட்ட கீதா இவர்கள் இருவரும் நிச்சயம் தவறாக புரிந்து கொண்டு பிரிந்திருக்கிறார்கள். இவர்களை சந்தித்து பேசவைத்தால்,எல்லாம் சரியாகும் என்று நினைக்கிறேன் என்றாள்.அவளை கிண்டலாக பார்த்த நகுலன் அர்ஜீன் பெயர் கூறியதர்க்கே வீட்டை விட்டு சென்றுவிடுவேன் என்றவர்கள் அவனை பார்த்தவுடன் வேறு எங்காவது சென்றுவிட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் என்றான்.

பிறகு என்னதான் சார் செய்வது என்றாள் சலிப்பாக.நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றான். வ்வாட்..... என்று கத்தியவள் முதலில் போல் தங்களை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்க்க பக்கத்தில் யாரும் இல்லை அதனால் தான் இப்போது சொன்னேன் என்றான்.

உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தாள் இப்படி கேட்பீர்கள் என்றவள் அவன் பதில் சொல்வதற்கு முன் எழுந்து கொண்டவள் நான் செல்கிறேன்.நீங்கள் உளறுவதை எல்லாம் என்னால் கேட்க முடியாது என்று விறுவிறுவென அந்த ஹோட்டலை விட்டு வெளியேறி பேருந்து நிறுத்தத்துக்கு வந்தவள் அவனை வசைபாடி கொண்டே இருந்தாள்.

அவளை உரசினார் போல் கார் வந்து நிற்கவும் துள்ளி குதித்து யார் என்று பார்க்க நகுலன் தான்.ஆனால் இம்முறை அவன் முகம் கருத்து இறுகி இருந்தது.வண்டியில் ஏறு என்று வார்த்தைகளை மென்று துப்பினான்.நகுலின் கோபத்தில் ஒரு நிமிடம் திகைத்துதான் போனால்.அடுத்த நிமிடம் இவன் யார் எனக்கு ஆர்டர் போட என்ற வீம்பு எழ முகத்தை திருப்பி பஸ் வருகிறதா என்று பார்க்க ஆரம்பித்தாள்.

கோபமான நகுல் கடவுளே இவளுக்கு அழகையும் திமிரையும் அதிகம் கொடுத்த நீ அறிவையும் பொறுமையையும் கூட கொஞ்சம் சேர்த்து கொடுத்திருக்கலாம் என்று மனதில் நினைத்து அவனும் காரைவிட்டு இறங்கி கீதாவின் கையை பிடித்து வா என்றால் வரமாட்டாயா சொல்வதை முழுதாக கேட்காமல் வந்து விட்டு இப்போது அனைவரின் முன்பும் சீன் கிரியேட் செய்யாதே என்றான் கோபமாக.

பேருந்துக்கு நிற்பவர்கள் அனைவரும் தங்களையே பார்பதை உணர்ந்தவள்.நிமிர்ந்து அனைவரையும் பார்த்தாள் அவர்களின் பார்வை கோர்த்திருக்கும் தங்கள் கைகளில் இருப்பதை பார்த்தவள்.இவன் ஒன்று எப்போது பார்த்தாலும் கைகளை பிடித்து கொள்கிறான் என்று நினைத்து கொண்டாள்.

ஒரு வயதான தம்பதி இவர்களை நெருங்கி இங்கே பாரம்மா கணவன் மனைவி என்றாள் சண்டை வருவது சாதாரணம் அதற்காக வீட்டை விட்டு வரக்கூடாது.என்ன சண்டை இருந்தாலும் வீட்டில் வைத்தே பேசி கொள்ள வேண்டும் நாழுபேர் வேடிக்கை பார்க்கும் அளவு நடந்து கொள்ளகூடாது.

பார் உன் மேல் கோபம் இருந்தாலும் தம்பி வீட்டில் போய் பேசி கொள்ளலாம் என்று கூப்பிடுகிறது இல்லையா போ மா என்று சொல்ல அவர்கள் சொல்வதை கேட்டு நகுல் சந்தோசபட்டு சிறு சிரிப்புடன் தேங்யூ ஆண்டி என்று கூற கீதாவோ மேலும் கோபமாக அவர்களை முறைத்துவிட்டு காரில் சென்று ஏறினாள். கார் யாரும் இல்லாத இடம் நோக்கி சென்றது.

சாலையின் ஓரமாக காரை நிறுத்தியவன் காரை லாக் செய்தான்.அவன் செய்வதை பார்த்து கீதா முறைக்க பேசும் போது நீ மீண்டும் இறங்கி போய்விட்டாள் என்ன செய்வது உனக்கு பின்னால் வந்து கெஞ்சி கொண்டிருக்க எனக்கு விருப்பம் இல்லை என்று விரைப்பாக வெளியில் சொன்னவன் உன்னை கொஞ்சதான் விருப்பம் என்று மனதில் நினைத்து கொண்டான் இவளிடம் கோபமாக பேசினால் தான் வேலையாகும் என்பதை உணர்ந்து.

உன் தோழியின் வாழ்க்கையை சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் சொல் நான் உன்னிடம் மேற்கொண்டு பேசவேண்டியதை சொல்கிறேன் இல்லை என்றால் இப்போதே இறங்கி சென்றுவிடு எனக்கு நான் பேசி முடிக்கும் வரை யார் குறுக்கில் பேசினாலும் எழுந்து சென்றாலும் பிடிக்காது என்றவன்.கார் லாக்கை ரிலீஸ் செய்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.