எனக்கும் என் தோழியின் வாழ்க்கையின் மீது அக்கறை இருக்கிறது அதற்காக நீங்கள் கண்டபடி உளருவதை என்னால் அனுமதிக்க முடியாது என்றால் கோபமாக.
என்னை திருமணம் செய்துகொள் என்று கூறுவது இவளுக்கு உளரல் போல் தெரிகிறதா ஏன் இவளுக்கு என்னை பிடிக்கவில்லையா என்று யோசித்தவன்.சரி இவளுக்கு பிடிக்கவில்லை என்றால் அண்ணன் வாழ்வு சரியானதும் இவளுக்கு டைவர்ஸ் கொடுத்துவிடலாம் என்று மனம் கணக்க முடிவெடுத்தவன்.அதை அவளிடம் கூறினான்.
அவள் சிறிது நேரம் யோசித்தவள் நமக்கும் திருமணத்தில் விருப்பம் இல்லை இவன் சொல்வது போல் செய்தால் திருமணம் செய்துகொள் என்ற தாயின் தொல்லை குறையும் சுவாதி வாழ்வையும் சரி செய்துவிடலாம் அமெரிக்காவிற்க்கு செல்வதற்கான முயற்ச்சியை மேற்கொள்ளலாம் என்று நினைத்தாள்.
தன்னுடைய லட்சியமாக அவள் நினைத்து கொண்டு இருப்பது அமெரிக்காவிற்க்கு சென்று அவர்களே வியக்கும் படி வேலை செய்து இந்தியர்களின் திறமையை உலகுக்கு காட்ட வேண்டும் என்பதே அதற்கு திருமணம் தடையாக இருக்கும் என்றுதான் இவள் திருமணத்தை தள்ளி போட்டது.இப்போது இரு பிரச்சனைக்கும் தீர்வு போல் நகுல் சொல்வதால் சந்தோசமாக தன் சம்மதத்தை தெரிவித்தாள்.
ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு ஏன் சம்மதித்தோம் ஏன் இந்த திருமணத்தை செய்து கொண்டோம் என்ற கவலையில் தான்,தன்னுடைய கனவை நிறைவேற்ற அமெரிக்கா செல்ல போகிறாள் என்பதை அறியாமல்.
கீதாவின் சம்மதம் கிடைத்தவுடன் எதன் அடிப்படையில் இந்த சம்மதம் என்று அவளிடமே கேட்டான் பதிலை தெரிந்து கொண்டு.அந்த காரணத்தை அவள் கூறகூடாது என்று அவசரமாக கடவுளுக்கு வேண்டுதல் வைக்க கடவுள் உன்னுடைய வேண்டுதல் நிராகரிக்கபட்டது என்று கூறும் வகையில் அதுதான் டைவர்ஸ் தருவதாக சொன்னீர்களே அதுமட்டும் இல்லை என் தோழியின் வாழ்வில் எனக்கும் அக்கறை இருக்கிறது என்றாள்.
அவன் எந்த காரணத்தை அவள் சொல்ல கூடாது என்று நினைத்தானோ அதே காரணத்தை அவள் கூறவும் தன்னுள் இருகியவன் தன்னுடைய பிளானை சொன்னான்.
கேட்டவள் சந்தோஷமாக தலையை ஆட்ட,அவனோ நான் நமது பிளானின் முதல் கட்டமாக இன்னோரு பிளானை செய்துவிட்டேன் என்றவனை ஆச்சரியமாக பார்த்தவள்.என்ன பிளான் என்று கேட்க காலையில் உன் ஆபிஸ்ஸில் இருந்து நாம் வரும்போது அண்ணி நம்மை பார்த்துவிட்டார்கள்.
என்ன......எப்படி அவளை அவளுடைய ஆபிஸில் இறக்கிவிட்டுதானே நான் வந்தேன்.அது மட்டும் இல்லாமல் உங்கள் பிளானை பற்றி இப்போதுதான் என்னிடம் சொன்னீர்கள்.எந்த தைரியத்தில் இப்படி செய்தீர்கள் என்றால் கோபமாக.
உன் தோழியின் நல்வாழ்விற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நீ நினைப்பது எனக்கு தெரியும்.அதனால் எப்படியும் என் பிளானிற்கு நீ ஒத்து கொள்வாய் என்றும் எனக்கு தெரியும் என்றவன் நம்மிடம் அதிக நேரம் இல்லை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அபியையும் அண்ணியையும் என் குடும்பத்தின் முன் கொண்டு வரவேண்டும் அதற்காகதான் இப்படி செய்தேன் என்றான்.அவன் கூறுவது சரி என்று படவே அவளும் அமைதி ஆனால்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
இன்று நாம் இருவரும் ஒன்றாக காரில் ஏறியதையும்,நாம் அதாவது நீ திரும்பி இருந்ததால் நான் சிரித்து பேசியதை அண்ணி பார்த்து ஷாக்காகி நின்றுவிட்டார்கள். அண்ணியுடைய ஆபிஸ் எம்.டி என்னுடைய பிரண்ட் அவர்களின் கம்பெனியுடனும் டீலிங் இருக்கிறது.அந்த மீட்டிங் அட்டண் பண்ணதான் நான் திருச்சி வந்தேன்.
வேலை முடிந்து சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்க போன வாரம் பார்க்குக்கு வந்தேன் வந்த இடத்தில்,அபியை பார்த்து ஷாக்காகிவிட்டேன் ஏன் என்றால் நான் சின்ன வயதில் எப்படி இருந்தேனோ அப்படியே இருந்தான்.அதனால் அவனை யார் என்று அறிய அடுத்தநாள் வந்தேன் ஐந்து மணி போல் ஒரு வயதானவர் அபியை அழைத்து வந்தார்.
நான் அங்கு இருக்கும் மர நிழலில் அமர்ந்து கவனித்தேன்.அவர் கிளம்பவும் அவர் பின்னாடி சென்று அட்ரஸை கண்டுபிடித்து தனியார் டிடெக்டிவ் வைத்திருக்கும் நண்பனின் மூலமாக விசாரித்து பாதி தெரிந்து கொண்டேன்.
என் அண்ணனின் மூலமாக பாதி தெரிந்து கொண்டேன் என்றவனை புரியாமல் பார்த்தவள்,உங்கள் அண்ணன் யாருடனும் பேசுவதில்லை என்றீர்கள் பிறகெப்படி என்று கேட்க அண்ணன் சுயநினைவு இல்லாமல் உளறியவை என்றவனை அதிர்ச்சியாக பார்க்க அண்ணன் நாக பட்டினம் சென்றதும் அங்கு ஏதோ பெரிய பணக்காரனிடம் சண்டைவந்தது என்பது வரை தான் எங்களுக்கு தெரியும்.
நாங்களும் அவனுக்கு பக்க பலமாக இருந்து எந்த ஆபத்தும் அவனுக்கு வராமல் பார்த்து கொண்டோம் பிறகு அந்த பணகாரனுக்கு தண்டனையும் வாங்கி கொடுத்தாச்சு என்று அப்பா சொன்னார்கள்.நான் அந்த சமயம் பிஸ்னஸ் விஷயமாக வெளிநாடு சென்றிருந்தேன்.
வெளிநாடு டிரிப் முடிந்து நான் வீட்டிற்கு வந்த போது வீட்டில் இருந்த அனைவரும் கவலையில் இருந்தனர். என்னவென்று நான் கேட்க அர்ஜீன் திடீர் என்று ஒன்றும் சொல்லாமல் ஊரில் இருந்து வந்திருப்பதாகவும் காய்ச்சல் அதிகமாக இருப்பதால் டாக்டர் செக் செய்து கொண்டு இருப்பதாகவும் கூறினர்.
நான் சென்று பார்த்து கொள்வதாக சொல்லி அன்று அண்ணனுடன் தங்கிவிட்டேன். அப்போது தான் அண்ணன் என்னை மன்னித்துவிடு வது,தயவு செய்து என்னிடம் வந்துவிடு வது என்று ஒரே புலம்பல் எல்லாம் சரியாகிவிடும் என்று தேற்றி அன்று அண்ணனை தூங்கவைக்க டாக்டர் தூக்கமாத்திரை கொடுத்துதான் தூங்க வைத்தார் என்றான்.இன்றிலிருந்தே நம் நாடகம் துவங்குகிறது.
மாலை அண்ணி கண்டிப்பாக என்னைபற்றி கேட்பார்கள் நீ ஏதாவது சொல்லி சமாளி எனறான்.சரி சார் எனறவளை முறைத்தவன் நாம் இருவரும் காதலர்கள் என்றான். அந்த வார்த்தை கீதாவினுள் ஏதோ செய்ய ஒன்றும் சொல்லாமல் நகுலயே பார்த்தால்.அவள் பார்வையின் அர்த்தம் புரியாமல் தினறியவன்.
கண்களை ஒருமுறை இறுக மூடி திறந்தவன் இனிமேல் என்னை சார் என்று கூப்பிடாதே என் நண்பர்கள் என்னை நகுல் என்று தான் கூப்பிடுவார்கள் நீயும் அப்படியே கூப்பிடு
என்றவன் நான் உன் ஆபிஸிலேயே இறக்கிவிடுகிறேன் என்று கூறி வண்டியை எடுத்தான்.
தொடரும்...
{kunena_discuss:1236}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.