(Reading time: 37 - 74 minutes)

தொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்? - 02 - சுதி

Uyire yen pirinthaai

பிஸ் வந்த கீதாவை தோழிகள் சூழ்ந்துகொண்டு ஓட்டி எடுத்துவிட்டார்கள். எம்.டியின் மூலம் அனைவருக்கும் தெரிந்துவிட்டதை ஊகித்தவள்.

அட பாவி நளா என்னை வேறு எங்காவது பார்த்து வந்த விஷயத்தை சொல்லியிருக்க கூடாதா இப்படி மொத்த ஆபிஸிக்கும் என்னை பொறி உருண்டை ஆக்கிவிட்டாயே என்று திட்டிகொண்டிருந்தவள் திடிக்கிட்டு போனால்,நான் எதற்கு அவனையே நினைத்து கொண்டிருக்கிறேன் என்று யோசித்து கொண்டிருந்தவள், எல்லோரும் கிண்டல்பண்ண அவன் தானே காரணம் அதனால் தான் என்று தனக்கு தானே ஆறுதல் கூறிகொண்டு மாலை சுதியை எப்படி சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

மாலை எப்போதும் போல் சுதியை அழைக்க சென்ற கீதாவை, சுதி கூர்மையாக ஒரு பார்வை பார்த்து வேறு எதுவும் பேசாமல் வண்டியில் அமர்ந்து கொண்டால்.கீதாவோ என்ன பார்வடா இது இப்படி பார்க்கிறாளே,இவள் ஏதாவது கேட்பாள் அதில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைத்தால் இவள் வாயே திறக்கமாட்டேன்கிறாளே என்று மனதுக்குள் புலம்பியவள் எப்படி இருந்தாலும் சொல்லியாக வேண்டுமே எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

வீட்டிற்க்குள் நுழைந்த சுதி கீதாவை கூர்மையாக பார்த்து இன்று அபி பார்க்குக்கு போக வேண்டும் என்று சொன்னான் வா நாம் இருவரும் அவனை கூட்டி போகலாம் என்றாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

கீதா மனதுக்குள் ஹப்பாடி என் செல்லம் என்னிடம் என்கொயரிக்கு ரெடி என்று சொல்வது போல் இருக்கிறதே குரல் என்று நினைத்து உடனே ஒத்துக்கொள்ளாதே கீது கொஞ்சம் பில்டப் குடு என்று மனதினுள்ளே பேசி கொண்டவள்.

நீ இரு சுதி இங்கு இருக்கிற பார்க்கு தானே நானே அபியை கூட்டி போய் வருகிறேன் என்றாள்.கீதாவின் பேச்சை காதில் வாங்கியவள்.என்னுடைய பிளவுஸ் தைக்க கொடுத்ததையும் நான் வாங்க வேண்டும் நீ அபியை பார்த்து கொண்டு இரு நான் போய் வாங்கிவருகிறேன் என்றவள் கீதா மறுத்து எதுவும் சொல்லிவிடுவாளோ என்று வேகமாக படிகளில் ஏற ஆரம்பித்தாள்.

கீதாவோ மனதில் சிரித்து கொன்டு பார்க்குக்கு தயாரானாள்.இருவரும் தயாராகி அபியை அழைத்து கொண்டு பார்க்குக்கு சென்றனர்.அபி குழந்தைகளுடன் விளையாட கீதா இவளிடம் எப்படி சொல்வது என்று யோசிக்க,சுதியோ தன்னிடம் கூட தோழி காதலிப்பதை மறைத்துவிட்டாளே எப்படி இப்போது பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தாள். அபியின் அம்மா என்ற சத்தத்தில் இருவரும் நிகழ் உலகத்திற்கு வந்தனர்.என்னமா என்று இருவரும் சேர்ந்து கேட்க அவர்களை பார்த்து கொஞ்சலாக சிரித்தான் இவன் சிரிப்பின் காரணம் புரியமல் பெண்கள் இருவரும் முழித்து கொண்டிருந்தனர்.

பந்து அங்க தூரம் விழுந்துடுச்சு அந்த அம்மு இல்ல அவள் போட்டுவிட்டு அந்த பந்து வேண்டும் என்று அழுகிறாள்.நான் போய் எடுத்து வரவா என்றான்.சுதி தலையை அசைத்ததும் ஓடி சென்றான்.

கீதாவை பார்த்தவள் கேட்க என்று வந்துவிட்டு அமைதியாக இருப்பதில் பலன் இல்லை என்று யோசித்து பேச ஆரம்பிக்கும் போது ஏதோ டமார் என்ற சத்தமும் அச்சச்சோ என்ற சத்தமும் தொடர்ந்து கேட்க தோழிகள் இருவரும் அபி வெளியில் சென்றானே என்ற பயத்துடன் பார்க்குக்கு வெளியில் வர அங்கு அபி ஒருவர் கையில் அழுது கொண்டிருந்தான்.அவன் பார்வை வேறு இடத்தில் இருந்தது தோழிகள் இருவரும் அபியை பார்த்து நிம்மதி அடைந்தனர்.வேகமாக அவனிடம் சென்ற கீதா அவரிடம் இருந்து அபியை கைகளில் வாங்கி கொண்டாள்.

அபியை சமாதானபடுத்தும் விதமாக ஒன்னும் இல்ல ராஜா அழக்கூடாது என்று சொல்லி கொண்டிருந்தாள்.அதே நேரம் இவன் எதற்கு ரோட்டின் பக்கம் வந்தான் என்று யோசித்து கொண்டே அவன் பார்வை வேறு இடத்தில் இருப்பதை உணர்ந்து யாரை பார்க்கிறான் என்று கூட்டத்தை விலக்கி பார்த்த தோழிகள் இருவரும் அதிர்ந்தனர்.ஏனென்றால் இரத்த வெள்ளத்தில் கீழே அடிபட்டு கிடந்தது வள்ளி தோழிகள் இருவரும் அம்மா என்று கத்த கூட திறானி அற்றவர்களாக கண்களில் நீருடன் வள்ளியை கட்டி கொண்டு அழுதனர்.உடனே ஆம்புலன்ஸ்க்கு போன் செய்த நல்லவரின் உதவியுடன் மருத்துவமனை சென்றனர்.

செல்லும் முன் அங்கிருந்தவர்கள் சொன்னதை வைத்துதான் தெரிந்தது அபியை காப்பாற்ற போய்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று, இதை கேட்ட சுதிக்கு மேலும் அழுகை பொங்க ஏன்மா இப்படி செய்தீர்கள்.நாங்கள் உங்களுக்கு என்ன செய்தோம் உங்கள் உயிரை கொடுத்து இவனை காப்பாற்றி இருக்கிறீர்கள் நான் உங்களுக்கு என்ன கைமாறு செய்ய போகிறோம் என்று அழுதவளின் வாயை மூடிய வள்ளி என் பேரன் என்று மெதுவாக சொல்ல தோழிகள் இருவருக்கும் அழுகை பொங்கியது.

மருத்துவமனையில் ஐசியூவில் வள்ளியை சேர்த்தனர்.கீதா ராகவ்விற்க்கு போன் செய்து வர சொன்னாள்.மருத்துவமனைக்கு அரக்க பரக்க வந்த ராகவிடம் கீதா நடந்ததை சொல்ல சுவாதி தலையில் அடித்து கொண்டு அழுதால்.

என்னால்தான் என்னால்தான் எல்லாம் நான் கவனமாக அபியை பார்த்திருந்தால் அம்மாக்கு இப்படி ஆகி இருக்காது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.