(Reading time: 37 - 74 minutes)

இதற்காக நான் அம்மாவுக்கு என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று அழுதவளை கீதா கூர்மையாக தோழியை பார்த்து கொண்டே அவர்கள் எழுந்து வந்து என்ன கேட்கிறார்களோ அதை செய் என்றாள்.

சுதி கண்ணீரை துடைத்து கொண்டு நிச்சயமாக அம்மா என்ன சொன்னாலும் கேட்பேன் இது அபியின் மீது சத்தியம் என்றாள். இவர்களின் பேச்சு முடியவும் ஐசியுவில் இருந்து டாக்டர் வெளியே வரவும் சரியாக இருக்க,மூவரும் ஆர்வத்துடன் டாக்டர் முகம் பார்க்க சாரி சார் நாங்கள் எங்களால் முடிந்த எல்லா முயர்ச்சியும் செய்துவிட்டோம் இரத்தம் அதிகமாக வெளியேறியதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவரது உடல் நாங்கள் செய்யும் எந்த டிரிட்மண்ட்க்கும் ஒத்துழைக்க மறுக்கிறது.இன்று ஒரு நாள் பார்ப்போம்.அவரிடம் நீங்கள் யாராவது சென்று பேச்சு கொடுங்கள் நீங்கள் பேசுவதை பேசண்ட் உணர்ந்தாலே போதும் ஆபத்து கட்டத்தை அவர் தாண்டி விட்டதாக அறியலாம்.கடவுளை நம்புங்கள் என்றவர்,இப்போது ஒவ்வொருவராக சென்று பேசன்டை பார்க்கலாம் ரொம்ப அழுது மற்ற பேசண்டை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறி சென்றார்.

அவர் சொன்னதை கேட்டு அனைவரும் அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் இருக்க அந்த நேரம் மருத்துவமனையில் நுழைந்தான் நகுலன்.

ஐசியூ எங்கு என்று விசாரித்து வந்தவன் மூவரும் இடிந்துபோய் அமர்ந்திருப்பதை பார்த்து டாக்டரை சென்று விசாரித்து வந்தான்.ராகவிடம் சென்றவன் சார் இப்படி அமைதியாக உட்கார்ந்து இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை உங்கள் மனைவியை காப்பாற்ற முடியும் என்று நீங்கள் முதலில் நம்புங்கள்.

டாக்டர் முழுவதும் நம்மை கை விடவில்லை.நீங்கள் சென்று உங்கள் மனைவியுடன் பேசுங்கள் என்றவன்.நீங்களே இப்படி அமர்ந்திருந்தாள் உங்கள் பெண்ணிற்கு யார் ஆறுதல் கூறுவது என்று கூற கொஞ்சம் தெளிந்தவர்.நன்றி என்ற பார்வையோடு வள்ளி இருந்த அறையை நோக்கி சென்றார்.

சுருதியும்,கீதவும் அழுது கொண்டிருக்க இவர்கள் அழுவதை பார்த்து அபியும் அழுது கொண்டிருந்தான்.நகுலனை பார்த்த கீதா இவன் எப்படி இங்கே என்று பார்க்கும் போதுதான் கீதாவின் தந்தையுடன் அவன் பேசியது காதில் விழுந்தது.அண்ணனுக்காக இவன் என்னவெல்லாம் செய்கிறான் என்று யோசித்தாள்.

வள்ளி இருக்கும் அறைக்குள் நுழைந்த ராகவிற்க்கு என்ன முயன்றும் தன் அழுகையை கட்டுபடுத்த இயலாமல் வள்ளியின் கைகளில் முகம் பதித்து அழ ஆரம்பித்தார்.முப்பத்திஐந்து வருட திருமணவாழ்வில் ராகவை எதற்கும் கஷ்டபடுத்தாமல் இருந்தவர். இளம் வயதில் தாயை இழந்த ராகவிற்க்கு மற்றொரு அம்மாவாக மாறி பார்த்து கொண்டவர்.

வேலை விஷயமாக அடிகடி மாற்றல் வந்தாலும் முகம் சுழிக்காமல் தன்னுடன் இருந்தவள்.தனக்கென்று எந்த விருப்புகளுக்கும் முக்கியதுவம் தராதவள் இன்று தலையிலும் கை,கால்களில் கட்டுடனும் முக்கில் ஏதேதோ வயர்களை சொருகி இருந்ததை பார்த்து துடித்து போனார்.

ராகவின் அழுகை சத்தம் கேட்டு அங்கிருந்த நர்ஸ் அவரை வெளியே அனுப்ப வெளியில் வந்தவர் நேராக கீதாவிடம் சென்று கீது அம்மாவை என்னால் இப்படி பார்க்க முடியல டா நீ சொன்னா அம்மா கேட்பா எழுந்து வர சொல்லு டா.என்னிடம் என்ன என்ன சொன்னால் தெரியுமா உங்கள் இருவருடைய திருமணத்தையும் கண்குளிர பார்க்கணும் இருவரின் குழந்தைகளுக்கும் கதை சொல்லி தினமும் தூங்க வைக்க வேண்டும்.

சின்ன வயதில் நீங்கள் செய்த குறும்புகளை அவர்களிடம் சொல்லி சிரிக்க வேண்டும் இப்படி நிறைய விஷயங்களை கூறிவிட்டு இப்படி வந்து படுத்து கொண்டாலே சொல்லுடா போடா என்று அவளை வள்ளி இருக்கும் அறை நோக்கி இழுத்து செல்ல கீதா அப்பாவை எப்படி சமாளிப்பது என்று பயந்துதான் போனாள்.அம்மா அப்பாவின் காதல் வாழ்வை பார்த்தவள் அல்லவா.

இப்படி பேசியே ராகவ் மயக்கத்திற்கு போக அந்த மருத்துவமனையில் மற்றொரு அறையில் அனுமதிக்கப்பட்டார். நகுலன்தான் முன்னின்று அனைத்தையும் பார்த்து கொண்டான். வள்ளியை பார்க்க அடுத்ததாக கீதா சென்று பேசியும் சுவாதி சென்று பேசியும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தவரை என்ன செய்வது என்று அனைவரும் இருக்க.நகுலன்தான் அபியை அழைத்து சென்று வள்ளியிடம் பேச வைக்க சொன்னான்.

கீதா பயத்துடனே இந்த முறையாவது அம்மா கண் விழிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அபியை தூக்கி கொண்டு வள்ளியை பார்க்க சென்றாள்.அபியை பார்த்த கீதா பாட்டியுடன் பேசு கண்ணா என்னுடன் பேசமாட்டிகிறார்கள் என்றாள் தொண்டை அடைக்க.

அபி வள்ளியிடம் வந்தவன் பாட்டி எந்திரிங்க பாட்டி வீட்டுக்கு போகலாம்.நான் இனி குட் பாயா இருப்பேன்.கீது கூட சண்ட போடமாட்டேன்.நீங்கள் சொன்ன பேச்சு கேட்கிறேன்.கீதுவும் இனிமே குட் கேர்ளா இருப்பா பேசுங்க பாட்டி என்றவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.