இங்க பாருங்க மேடம் நீங்க சொல்வது சரிதான் இருந்தாலும் நாம் இருவரும் கணவன் மனைவியாக நடிக்க போகிறோம் இதனால் உங்கள் வாழ்வில் எந்த பிரச்சனையும் வந்துவிட கூடாது.அதனால் நான் உங்கள் காதலனுடன் பேசி தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும் அதனால் அவருக்கு போன் செய்யுங்கள் நான் இப்போதே பேச வேண்டும் என்றான்.
கீதாவோ இவன் என்ன லூசா நாம் என்ன சொன்னாலும் நம்புகிறான்.இவனிடம் தான் சொன்னோம் திருமணத்தில் விருப்பம் இல்லை வெளிநாடு போக போகிறேன் என்று,இப்போது காதலிக்கிறேன் என்று கூறுகிறேன் அதையும் நம்புகிறான் என்று எண்ணியவள்.வடிவேலு பாணியில் நீ ரொம்ப நல்லவன் என்று மனதில் கூறி நகைத்தாள் அவளுக்கு அப்போது புரியவில்லை அவள் கூறிய பொய் அவள் வாழ்வை சூறாவழியாக மாற்ற போகிறது என்று.
இருந்தாலும் அவன் பன்மையில் அவளுக்கு மரியாதை கொடுத்து,யாரோ போல் பேசியது அவள் மனதை பாதிக்கதான் செய்தது.அவளேதான் அவனை மரியாதை கொடுத்து பேச சொன்னது.ஆனால் அவன் மரியாதை கொடுத்து பேசும் போது ஏன் மனது கஷ்டபடுகிறது என்று யோசித்திருந்தாள்,அப்போதே அவள் வாழ்வு பிரச்சனை இல்லாமல் இருந்திருக்குமோ என்னவோ.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
கீதா இதைபற்றி யோசித்து கொண்டிருக்க.நகுலனோ காதலனைபற்றி பேசியவுடன் கனவு கான ஆரம்பித்துவிட்டாள் போல என்ற கடுப்புடன் அவளை பிடித்து உளுக்கி உன்னிடம்தான் பேசி கொண்டிருக்கிறேன் என்று கடுப்படிக்க.கீதாவோ சுய நினைவுக்கு வந்தவள் கையை எடுங்க எனக்கு நன்றாக காது கேட்கும் என்றாள்.இப்போது இவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்து இப்போது அவர் வேலையாக இருப்பார் அதனால் இன்னோரு முறை அவர் பேசும் போது எப்போது பிரியாக இருப்பார் என்று கேட்டு வைக்கிறேன்.அப்போது பண்ணலாம்.என்னை கேள்வி கேட்டது போதும் நான் கேட்டதுக்கு என்ன பதில் என்றவளை பார்த்தவன்.
நாம் ஒருவிஷயம் பேசவில்லை நிறைய பேசினோம் அதனால் நீங்கள் எதைபற்றி கேட்கிறீர்கள் என்று சொல்லுங்கள் என்று நிமிடத்திற்கு ஒரு ங்கள் போட்டு பேச.இவன் வேண்டும் என்றே நம்மை வெறுப்பேற்ற இப்படி பேசுகிறான் இருக்கட்டும் நாமும் கண்டுகௌள்ளாமல் இருப்போம் என்னதான் செய்கிறான் என்று பார்போம் என்ற முடிவுடன் எதற்காக கோபபட்டீர்கள் என்று கேட்டேன் என்றாள்.
அது........ என்று தடுமாறியவன் கல்யாணத்தைபற்றி பேசியவுடன் நீங்கள் எழுந்து வரவும் அம்மா உன்னை ஒரு மாதிரி பார்த்தார்கள் எங்கே அவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டதோ என்ற டென்சனில் அப்படி நடந்து கொண்டேன் என்று சமாளித்தான்.பிறகு நான் கல்யாணத்தைபற்றி பேசியவுடன் உன்முகத்தில் லேசான சிரிப்பாவது இருக்கும் என்று எதிர் பார்த்தேன் ஆனால் நீ உனக்கும் திருமணத்துக்கும் சம்மந்தம் இல்லாதவள்போல் வந்ததால் ஏற்பட்ட கோபம் என்றா அவளிடம் சொல்ல முடியும்.
பேச்சை மாற்றும் விதமாக அவனே மீண்டும் பேச ஆரம்பித்தான்.நீ இன்னும் உன் லவ்வரின் பெயர் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்க.
கீதா சற்றும் யோசிக்காமல் சொன்னால் நகுலனை அவள் திட்டிய பெயரான ‘நளன்’என்று.சரி அவருடன் பேசி மீட்டிங் அரேஞ்ச் பண்ணு.அப்புறம் நாம் காதலித்து திருமணம் செய்ய போகிறவர்கள்.அதனால் மற்றவர்கள் முன்பு நாம் கொஞ்சம் நடிக்க வேண்டி இருக்கும். நான் என்ன சொல்கிறேன் என்று உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்.இனி கவனமாக நடந்து கொள் என்று கூறி காரை விட்டு இறங்கி ஹாஸ்பிட்டலுக்குள் சென்றான்.அதை யோசித்து கொண்டிருந்த கீதா ஆட்டோ சத்தம் கேட்டு சுவாதி வந்து விட்டாள் போல என்று வெளியில் எட்டி பார்க்க அவள்தான் படிகளில் ஏறி கொண்டிருந்தாள்.
சுவாதியிடம் திருமண விஷயத்தை எப்போது கூறுவது.சொன்னாலும் திருமணத்துக்கு ஒத்து கொள்வாளா என்ற கவலையோடும்.கடவுளே அவள் ஒத்து கொள்ள வேண்டுமே என்ற வேண்டுதலுடனும் மருத்துவமனை கிளம்பினர்.
தொடரும்...
{kunena_discuss:1236}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.