நகுலை ஆராய்ச்சியாக பார்த்த அர்ஜூன் உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க காய்ச்சல் அன்று அவன் புலம்பியதையும்,மீட்டிங் வந்த இடத்தில் அபியை பார்க்கில் பார்த்தது டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் தெரிந்து கொண்டது என அனைத்தையும் கூறியவன் கீதாவிற்கும் அவனுக்கும் நடந்த உரையாடலை பற்றி வாய் திறக்கவில்லை.
சரி உன் அண்ணியை அனைவருக்கும் சமைக்க சொன்னேன் நான் அவளை புரிந்து கொண்ட வரை அவள் நிச்சயம் நமக்கு சமைத்திருக்க மாட்டாள்.அவர்கள் மூவருக்கு மட்டும் தான் சமைப்பாள் நீ சென்று மற்றவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடு நான் உன் அண்ணியை அழைத்துவருகிறேன் என்று கூறி அவனை அனுப்பிவிட்டு வீட்டின் முன்பு இருந்த தோட்டதில் இருக்கும் பெஞ்சில் அமர்ந்தான்.இவ்வளவு நாள் ஒடிய ஓட்டத்தை முடிவுக்கு கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவன் உடனே சில போன் கால்கள் செய்து பேசிவிட்டு மாடிக்கு சென்றான்.
அங்கு அபி பொம்மைகளுடன் விளையாண்டு கொண்டு இருப்பதை பார்த்தவன்.இவன் என் மகன் என் உதிரத்தில் உதித்தவன் என்று கர்வமாக நினைத்தவனின் நினைப்பை தன் மகனே அழிக்க போகிறான் என்பதை அறியாமல்.அவனை பார்த்து கொண்டே நின்றான் அபி நிமிர்ந்து பார்த்து யார் என்று தெரியாமல் அறிமுகமில்லாத பார்வை பார்த்து வணக்கம் அங்கிள் நீங்கள் யார் உங்களுக்கு என்ன வேண்டும் ராகவ் தாத்தாவை பார்க்க வந்தீர்களா என்று கேட்க அர்ஜூன் உள்ளுக்குள் நொறுங்கினான்.
தன் மகன் தன்னை அடையலாம் தெரியாமல் இருப்பதை கூட ஏற்றுகொண்டவனால் அவன் அங்கிள் என்று சொன்னதை ஏற்று கொள்ள முடியாமல் கண்ணில் நீருடன் பார்த்து கொண்டிருந்தான்.அபிக்கு பால் ஆற்றி கொடுக்க வந்தாள் சுவாதி.
அபியின் பேச்சு சத்தம் கேட்டு யாருடன் பேசுகிறான் என்று யோசித்து கொண்டே வந்த சுவாதியின் காதுகளிலும் அபி பேசியது கேட்க கையில் வைத்திருந்த பால் டம்ளரை வேகமாக டேபிளின் மேல் வைத்துவிட்டு சமையல் அறைக்குள் சென்று விட்டாள்.
அர்ஜூனோ சமையல் அறையில் இருந்து வந்தவள் தன்மகனுக்கு தான் யார் என்று சொல்லுவாள் என ஆர்வமாக பார்த்து கொண்டிருக்க அவள் ஒன்றும் சொல்லாமல் சென்றது கோபத்தை ஏற்படுத்தினாலும் தப்பு தன் பேரிலும் உள்ளது தான் அதற்காக இவ்வளவு பெரிய தண்டனை தனக்கு தர வேண்டுமா தன் மகன் தன்னை அங்கிள் என்று அழைக்கும் கொடுமை தன் எதிரிக்கு கூட வர கூடாது என்று தன்னை நொந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.
வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவனை,அபியின் அப்பா என்ற குரல்தான் வரவேற்றது.அவனின் குரலில் தனக்குள் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தவன் வேகமாக அபியின் அருகில் சென்று அவனை தூக்கி முத்தமிட துவங்கினான்.
என்ன கண்ணா என்ன வேண்டும் உனக்கு இன்னொரு முறை கூப்பிடு என்று கேட்டு மகிழ்ந்தான்.தன் வருத்தத்தை புரிந்து கொண்டு சுவாதி தனக்காக தன் சந்தோஷத்துக்காக அபியை அப்பா என்று அழைக்க வைத்திருக்கிறாள் என்ற சந்தோஷத்தை முழுதும் அனுபவிக்கும் முன் அங்கு வந்தாள் கீதா.
என்ன சார் நீங்கள் உங்களுக்கு தான் அவளைபற்றி தெரிகிறதே பிறகு எதற்கு வருத்தபடுகிறீர்கள்.அவளைபற்றி நன்கு தெரிந்தவள் நான் அதனால் இந்த விஷயத்தில் என்னாலும் உங்களுக்கு உதவ முடியாது ஏன் என்றால் அவள் சில விஷயங்களில் ரொம்ப பிடிவாதம்.
உங்களுக்குள் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது இருந்தாலும் நீங்கள் கொஞ்சம் இல்லை,இல்லை அதிக பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்றாள்.
நான் வரும் போது கண்ணில் நீருடன் நீங்கள் போவதை பார்த்தேன்.அபியிடம் தான் கேட்டு தெரிந்து கொண்டேன்.அதான் நான் அவனிடம் உங்களை அப்பா என்று கூப்பிட சொன்னேன் என்றவள்.
நான் குளித்துவிட்டு மதிய சமையல் எடுத்து செல்ல வந்தேன்.சுவாதி ஆட்டோ பிடிக்க போய் இருக்கிறாள். நீங்கள் கொஞ்சம் அவசரபடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
அப்பா எல்லாம் சொன்னார் என்றாள் கீழே பார்த்து கொண்டே.அவள் எதை பற்றி பேசுகிறாள் என்பதை உணர்ந்தவன் அத்தையின் ஆசையும் இதுவே என்னும் போது எதற்கு யோசிக்க வேண்டும் என்றான்.
கீதா எதுவும் பேசாமல் தலை குனிந்து கொண்டால்.அவள் மனதில் சுவாதி ஹாஸ்பிட்டலில் இருந்து கிளம்பிய பிறகு நடந்ததை யோசித்து கொண்டு இருந்தாள்.
சுந்தரியிடம் இருந்து குழந்தையை பிடுங்கி கொண்டு போனதால் அனைவரும் திகைத்து நிற்க.ராகவ்தான் என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தார்.
தன்னிலை அடைந்த சுந்தரி அண்ணா என்று அழுது கொண்டே அவரிடம் சென்றவள்.அண்ணா அர்ஜூன் கெட்ட எண்ணத்தில் எந்த விஷயமும் செய்யமாட்டான்.
என் வளர்ப்பைபற்றி சந்தேகபடாதீர்கள் அண்ணா என்று கூறயவள்,நான்கு வருடத்திற்கு முன்பு நாகபட்டினத்திற்க்கு வேலைக்கு சென்ற அர்ஜூன் திரும்பி வரும்போது இருந்த நிலை அதன் பின்பும் யாருடனும் பேசாமல் அவன் வாழ்ந்த வாழ்வைபற்றி கூறியவள் இப்போது சொல்லுங்கள் அண்ணா ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்திருந்தால் என் மகன் ஏன் பைத்தியகாரன் போல் இவ்வளவு நாட்களை வீணடிக்க வேண்டும்.