(Reading time: 37 - 74 minutes)

நகுலனோ மனதில் அட நம்ம அழகி எனக்கு மாமன் மகளா.வாடி என் மாமன் பெத்த மணிகொழுந்தே நல்லதா போச்சு இப்போது எப்படி என்னிடம் இருந்து டைவர்ஸ் வாங்கி வெளிநாடு செல்கிறாய் என்று பார்க்கிறேன்.இலட்சியமாம் அதுவும் வெளிநாட்டில் சென்று இவள் தான் இந்தியர்களை பெருமைபட வைக்க போகிறாளாம்.

எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் சில சமயம் பெண்கள் அடி முட்டாள் போலவே பிகேவ் செய்கிறார்கள்.அதில் என் அழகியும் ஒருத்தி என்று அவன் தனி உலகில் சஞ்சரித்து கொண்டிருந்தான்.அடேய் உனக்கே இது ஓவராக இல்லை இன்னும் திருமணமே நடக்கவில்லை அதற்குள் அவள் உன் முன் வந்து டைவர்ஸ் கேட்டு நிற்பது போலவே பேசுகிறாய் என்று அவன் உள் மனம் அவனை கேளி செய்ய அதன் தலையில் தட்டி அடக்கினான்.

ராகவ் சுந்தரியிடம் நீ எப்படி இங்கு என்றார் ஒன்றும் புரியாமல்.அப்போது அங்கு வந்த நகுலன் என் அம்மா என்றான்.

நகுலன் உன் மகனா என்று ஆச்சரியபட்டவர் உன் மகன் தான் எனக்கு மகன் இல்லாத குறையை போக்கி தைரியம் கொடுத்தான் என்று கூறினார்.நீ காதலித்ததை என்னிடமாவது சொல்லியிருக்கலாம்.இப்படி வீட்டை விட்டு போய் எங்கிருக்கிறாய் என்று தெரியாமல் அப்பா இறந்ததற்க்குகூட உன்னிடம் தகவல் சொல்லமுடியாமல் போனது என்று அவரும் புலம்பினார்.

நீ வந்த விஷயம் தெரிந்தால் வள்ளி ரொம்ப சந்தோசபடுவாள் என்று சொல்லி கொண்டு வந்தவர் அழ ஆரம்பித்தார்.

அர்ஜூனின் தந்தை வரதராஜன் நகுலனை நீர் எடுத்து வருமாறு பணித்தார்.நகுலன் கொண்டுவந்த நீரை குடிக்க வைத்து ஆறுதலாக அவர் கையை ஒரு பக்கம் வரதராஜனும் மறுபக்கம் சுந்தரியும் பிடித்து கொள்ள அர்ஜூன் டாக்டரிடம் சென்று நிலமையை பற்றி விசாரித்து வருவதாக சென்றான்.

நகுலனின் குடும்பத்தினர் சென்று வள்ளியை பார்த்துவிட்டு வந்தனர்.சுந்தரி ராகவிடம் பேசி கொண்டிருக்கும் போதுதான் நினைவுவந்தவராக கீதாவை பற்றி விசாரிக்க இங்கு ஒருவருக்கு மேல் தங்க அனுமதி இல்லை அதனால் வீட்டிற்க்கு சென்று சமைத்து எடுத்து வர சென்றிருக்கிறாள் என்றவர் வரும் நேரம் தான் இப்போது வந்துவிடுவாள் என்றார்.

சாப்பாட்டு கூடையுடன் அபியை ஒரு கையில் பிடித்து கொண்டு அவன் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமயாக பதில் அழித்து கொண்டு வந்த கீதாவை சுந்தரி ஆச்சரியமாக பார்த்தார். தன் அம்மாவின் மறு பதிப்பாக இருந்தவளை பார்த்தவர். அவள் கையை பிடித்து கொண்டு துறுதுறு விழிகளுடனும் குண்டு கண்ணத்தோடும் வந்தவனை பார்த்து அதிர்ந்து போனார் ஏன் எனில் சிறு வயதில் நகுலன் எப்படி இருந்தானோ அதே ஜாடையையும் அர்ஜூனை போல ஆராய்ச்சி பார்வையுடனும் வாய் ஓயாமல் கேள்வி கேட்கும் மதியின் குணத்தோடும் தன் வீட்டு வாரிசுகளின் மொத்த குணத்தையும் ஒன்றாய் பெற்றிருந்த அபியை நோக்கி வேகமாக சென்று தூக்கினார்.

கீதாவோ சுந்தரி வந்த வேகத்தை பார்த்து பயந்து போனாள்.அதே சமயம் தன் தந்தை இவர்களுடன் பேசி கொண்டு இருந்ததை பார்த்ததால் யார் இவர்கள் என்று பார்க்க சிரித்து கொண்டே அவர்கள் அருகில் வந்த ராகவ் என்னமா யார் என்று தெரியவில்லை இல்லையா இவர்கள்தான் உன் அத்தை என்றார். அப்படியா என்ற பார்வையோடு அருகில் நின்றிருந்த அனைவரையும் பார்த்து கொண்டிருக்கும் போதே வண்டியை பார்க்கிங்கில் விட்டு விட்டு வந்த சுவாதி அபி யாரோ பெண்மணியிடம் இருப்பதை பார்த்து யார் இவர்கள் என்று யோசித்து கொண்டே அருகில் வந்து கீதாவை பார்த்து யார் என்று கேட்க அதே நேரம் அம்மா என்று அர்ஜூன் வரவும் சரியாக இருந்தது.

அம்மா யாரோ ஒரு குழந்தையை தூக்கி வைத்திருப்பதை பார்த்தவன்.பக்கத்தில் சென்று யார் என்று பார்த்த அர்ஜூனும், இது அவன் குரல் போல் இருக்கிறதே என்று வேகமாக திரும்பி பார்த்த சுவாதியும் திகைத்து நின்றுவிட்டனர்.இவர்களை கவனித்து கொண்டிருந்த கீதா,நகுலன் இருவருக்கும் அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்று பார்த்தும் பார்க்காதது போல் இருக்க இதை அறியாத ராகவ் அவர்களை தன் தங்கைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அம்மா சுந்தரி இது என் பொண்ணு கீதா,இது அவள் தோழி சுவாதி இவளும் எனக்கு இன்னொரு பெண் போலதான் என்றவர்,இவன் என்னுடைய பேரன் என்று அவர் சொல்லி முடிக்கும் முன் சுந்தரி சொன்னார் அபிமன்யு என்று.

உனக்கு தெரியுமா என்பதை போல பார்த்தவர்.நகுலன் சொன்னாரா என்று கேட்க,அதற்கு சுந்தரி மறுப்பாக தலையாட்டி அர்ஜூனின் மகன் அபிமன்யுதானே என்று கூற அனைவரும் குழப்பத்துடன் பார்த்தனர்.

சுந்தரி வரதராஜனை பார்த்து நம் பேரன் அபிமன்யு என்று கூற அங்கிருந்த அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.கீதாவும்,நகுலனும் இவருக்கு எப்படி தெரிந்தது என்று பார்க்க,மதுவோ அண்ணி பிரிந்து போனதால் தான் அண்ணன் இப்படி மாறிவிட்டாரா என்று யோசிக்க,வரதராஜனோ என் மகனின் இத்தனை நாள் மனமாற்றத்திற்க்கு இந்த பொண்ணுதான் காரணமா என்று பார்க்க,ராகவிற்கு அப்போது தான் புரிந்தது அபியின் அப்பா இந்த அர்ஜூன் தான் என்று.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.