(Reading time: 37 - 74 minutes)

சுவாதியிடம் நீங்கள் பேசுங்கள் அண்ணா என் மகனை பழைய அர்ஜூனாக மாற்ற அவளால் மட்டும்தான் முடியும் என்று கூறினாள்.

நகுலன் நேற்று போன் செய்து தான் ஒரு பொண்ணை விரும்புவதாக சொன்னான்.அப்போதே நான் இவன் அண்ணனுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வானோ என்று பயந்தேன்.இப்போது தான் புரிகிறது அண்ணனின் குடும்பத்தை கண்டுபிடித்துவிட்டுதான் தன் வாழ்க்கையை அமைத்து கொண்டிருக்கிறான் என்று.

என் மகன்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது என்றாள்.

ராகவ் எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்து என்ன அண்ணா நான் பேசிகொண்டே இருக்கிறேன் நீங்கள் எதையோ தீவிரமாக யோசித்து கொண்டு இருக்கிறீர்கள் போல என்றவளை பார்த்த ராகவ் இல்லமா சுவாதியை நினைத்தால்தான் கவலையாக உள்ளது.

அபியின் மூன்றாவது பிறந்தநாள் அன்று அர்ஜூனைபற்றி கேட்டு விசாரிக்கிறோம் என்றோம் அதற்கே அவள் வீட்டைவிட்டு சென்றுவிடுவதாக கூறினாள்.எங்களிடம் அர்ஜூனைபற்றி இதுவரை எதுவும் பேசியது இல்லை.நாங்கள் பேசினாலும் பேச்சை திசை திருப்பிவிடுவாள் இல்லை என்றால் எதுவும் பேசாமல் அமைதியாகிவிடுவாள் அதனால் நாங்கள் அர்ஜூன் பேச்சை எடுக்க மாட்டோம்.

அபியின் பிறந்த சான்றிதழ் பார்த்துதான் அர்ஜூன் பெயரே எங்களுக்கு தெரிந்தது. நாங்களும் அந்த பேச்சை எடுத்தால் ஒரு வாரம் வரை யாரிடமும் எதுவும் பேசாமல் அவள் இருப்பதை பார்த்து அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டோம்.நீ சொல்வதை பார்த்தால் நாங்கள் அன்றே அவளிடம் பேசி பிரச்சனை என்ன என்று விசாரித்து அவளின் வாழ்வை சரிசெய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது தப்பு செய்துவிட்டோம் என்று தோன்றுகிறது என்று வருத்தபட்டு கொண்டு இருந்தார்.

 அண்ணனை பார்த்துவிட்டு அவர்களுக்கு மட்டும் மதிய உணவை வாங்கி கொண்டு வந்த நகுலன் நிலைமையை சரி செய்யும் பொருட்டு சுந்தரியிடம்,சென்று என்ன மா எனக்கு திருமணம் பேச வந்துவிட்டு அண்ணன் குடும்பத்தை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று கேட்டான்.அவர்களுக்கு உண்மை எப்படி தெரிந்தது என்று அறிந்து கொள்ளும் ஆவலில்.

சுந்தரி சிரித்து கொண்டே சொன்னார் நான் உனக்கு அம்மா டா என்று.நீ போன் செய்து எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது அவளுக்கும் என்னை பிடித்திருக்கிறது.அவளின் அம்மாக்கு உடல் நலம் சரியில்லை அதனால் உடனே திருமணம் முடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் தயவு செய்து என் மேல் நம்பிக்கை வைத்து எல்லோரும் இங்கு வாருங்கள் மற்ற அனைத்தும் நேரில் பேசிகொள்ளலாம் என்று சொன்னவுடன் எனக்கு பயம் வந்தது என்னமோ உண்மைதான் அதே போல் நீ ஒரு விஷயத்தை மறந்துவிட்டாய்.

அஜூக்கு காய்ச்சல் வந்த அன்று நீ வரும் வரை நான்தான் அவனுடன் இருந்தேன்.எனக்கு அப்போதே லைட்டாக விஷயம் புரிந்தது ஆனால் யார் என்ன என்று ஒன்றும் புரியவில்லை.சில சமயம் அவன் புலம்பல் மனதை உருத்திகொண்டே இருக்கும். இங்கு நம் குடும்பத்தில் உள்ள அனைவரின் சாயலையும் கொண்டிருந்த அபியை பார்த்து கன்பார்ம் செய்து கொண்டேன். அது மட்டும் இல்லாமல் நாகபட்டினத்தில் இருந்து உன் அண்ணன் ஒரு முறை போன் செய்து பேசும் போது இந்த பெயர் விஷயமும் வந்தது அப்போது நான் அவனிடம் சொன்னேன் உன் மகன் பெயரும் எனக்கு பிடித்த பாண்டவர்களின் மகன்களின் பெயர்தான் வைப்பேன் என்று.

நான் சொன்னதை சுவாதி கேட்டிருக்க வேண்டும் அதான் அர்ஜூனனின் மகன் அபிமன்யு பெயரை வைத்திருக்கிறாள் என் மருமகள் என்றார்.

இவர்கள் இப்படி பேசி கொண்டிருக்க அப்போதுதான் அர்ஜூன் போன் செய்து இருவருக்கும் நாளையே திருமணம் என்றும் அடுத்த வாரத்தில் ஒரு நாள் அத்தைக்கு ஆப்ரேஷன் அர்ஜூனே செய்வதாகவும் அதற்கான ஏற்பாட்டை செய்யும்படியும் சொன்னான்.

அர்ஜூன் சொன்னதை கேட்டு ராகவ் ஒரு பக்கம் மனைவியின் விருப்பப்படி மகள் இப்போதாவது திருமணத்துக்கு சம்மதித்தாலே என்ற சந்தோஷமும் சுவாதி ஒத்து கொள்வாளா என்ற இரு உணர்வுகளுடன் இருக்க.

கீதா எந்த உணர்வையும் வெளிகாட்டாமல் ஒரு முறை நிமிர்ந்து நகுலனை பார்த்துவிட்டு குனிந்து கொண்டவள் எழுந்து நின்று நான் சென்று மதிய உணவு எடுத்துவருகிறேன் என்று கூறி வேகமாக அந்த இடத்தைவிட்டு சென்றாள்.நகுலனும் மாமா மதியம் அத்தையை நார்மல் வார்டுக்கு மாத்தலாம் என்று சொன்னார்கள் அதை பற்றி விசாரித்துவருகிறேன் என்று கூறி வேகமாக கீதாவை தொடர்ந்து சென்றான்.

வெளியில் வந்தவன் கீதாவின் சோர்ந்த நடையை பார்த்து கோபம் கொண்டான்.வேகமாக அவள் அருகில் சென்றவன் அவள் கையைபற்றி இழுத்து கொண்டு அவன் காரை திறந்து அவளை தள்ளிவிட்டவன் அவனும் காரினுள் ஏறி அவளிடம் பொறிய துவங்கினான்.

உன் மனதில் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாய் உள்ளே திருமண விஷயம் சொல்லும் போதும் எல்லாம் முடிந்தது என்பது போல் பார்க்கிறாய்.முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் இருப்பதை பார்த்தால் எல்லோரும் என்ன நினைப்பார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.