(Reading time: 37 - 74 minutes)

இவர்கள் யாரை பற்றி யோசித்து கொண்டு இருக்கிறார்களோ அந்த இருவரில் அர்ஜூனின் உணர்வுகளைதான் அனைவராலும் தெரிந்து கொள்ள முடிந்தது. ஏன் என்றால் சுந்தரி பேச ஆரம்பித்த உடனே சுவாதிக்கு இவர்கள் அர்ஜூனின் குடும்பத்தவர்களோ என்ற சந்தேகத்தோடு பார்க்க அதை உறுதி செய்வது போல் அர்ஜூன் அங்கு வரவும் தலை குனிந்தவள் அவர்கள் இவ்வளவு பேசும் போதும் சரி பேசி முடித்த பிறகும் கூட தலை நிமிரவில்லை.

அர்ஜூனோ முதலில் சுவாதியை பார்த்தவுடன் கண்களில் தோன்றிய மகிழ்வை மறைக்காமல் காட்டியவன்.பின் அபியின் விஷயம் தெரிந்தவுடன் என்னிடம் ஏன் மறைத்தாய் என்று குற்றம் சுமத்தும் பார்வையை சுவாதியை நோக்கி வீசியபடி இருந்தான். தன் உணர்வுகளை மறைக்காமல் வெளிபடுத்திய அர்ஜூனை பார்த்தவர்களுக்கு அபியின் விஷயம் இவனுக்கும் தெரியாதா என்று எண்ணி கொண்டனர்.

சுவாதி மனதிலோ திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்ற தன்னைபற்றி இவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணமும், இவரை பார்க்க கூடாது என்று இவ்வளவு தூரம் வந்தும் மீண்டும் சந்திக்கும் நிலையை ஏற்படுத்திய தன் விதியை நொந்து கொண்டும்,அதிக நாட்களுக்கு பிறகு அர்ஜூனை பார்த்த மகிழ்வுடனும்,சந்தித்து என்ன செய்வது அவர் என்னை விரும்பவில்லையே முதலில் அன்று என்ன நடந்தது என்று இன்றளவும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டுமே புரிந்தது அன்று நடந்த விஷயங்கள் யாவும் ஒரு விபத்து அவரை பொறுத்த வரை அவர் சரியாக நடந்து கொண்டார்.

உண்மை தெரிந்து விலகி இருந்தவரை. சுயகௌரவத்தைவிட்டு அன்று தேடி சென்றது நான் தான்.தவறு என் மீது தான் மற்றவர் பொருள் என்று தெரிந்தும் அன்று நான் ஏன் போனேன் என்று கோபமாக நினைத்தவள்.

கசப்பாக இருந்தாலும் உண்மையை மாற்ற முடியாது ஏற்று கொள்ளதான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவள்.இவர்களின் முன் எந்த உணர்வுகளையும் வெளி காட்ட கூடாது அவள் எண்ணி கொண்டு இருக்க கடைசியாக சுந்தரி சொன்ன நம் பேரன் என்ற வார்த்தை அவளின் கட்டுபடுத்திய கோபத்தையும் தாண்டி வெளிவந்துவிட்டது.

சுவாதி அபியை சுந்தரியிடம் இருந்து வேகமாக வாங்கி கொண்டு இல்லை இல்லை பிடுங்கி கொண்டு,இவன் என் மகன் எனக்கு மட்டுமே மகன் என்று கத்திவிட்டு அவ்விடத்தைவிட்டு வேகமாக வெளியேறினாள்.

அனைவரும் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நிற்க.அர்ஜூன் கோபமாக சுவாதியை தொடர்ந்து சென்றான்.

ஹாஸ்பிட்டலில் இருந்து வெளியேறிய சுவாதி ஆட்டோவை பிடித்து வீடு வந்து சேர்வதற்குள் சில முடிவுகளை எடுத்தால். அதன்படி வண்டியில் வரும்போதே தன் அக்காவின் பழக்கம் போல் தூங்கிய மகனை கண்ணில் நீருடன் பார்த்தவள் உன்னை என்னிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது.நாம் இங்கு இனி இருக்க வேண்டாம் என்று கூறி படுக்கையில் படுக்க வைத்தவள்.தன்னுடைய பொருட்களை எல்லாம் பேக் செய்ய ஆரம்பித்தாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு யார் இந்த நேரத்தில் என்று படுக்கையறையில் இருந்து வெளியில் வந்தவள் பார்த்தது.கதவை உட்புறமாக தாழிட்டு கொண்டிருந்த அர்ஜூனின் முதுகைதான்.

வேகமாக அவன் அருகில் வந்தவள் என்ன செய்கிறீர்கள் எதற்காக இங்கு வந்தீர்கள் என்றாள் கோபமாக.

நிதானமாக அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்தவன் தன் கைகளை தூக்கி சோம்பல் முறித்து மேடம் வெளியில் எங்கயோ கிளம்பி கொண்டு இருக்கிறீர்கள் போல என்றான் நக்கலாக.

நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை.இங்கு எதற்கு வந்தீர்கள் என்று கேட்டேன்.வந்தது மட்டும் இல்லாமல் கதவை எதற்கு சாற்றினீர்கள்.வெளியில் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்றாள் கோபமாக.

அவனோ வெளிநாடு சென்றிருந்த உன் கணவன் வந்து விட்டான் என்று நினைப்பார்கள் வெகு நாட்களுக்கு பிறகு பார்க்கும் கணவன் மனைவி என்ன செய்வார்கள் என்று அறியாதவர்கள் யாரும் இல்லை என்று கூலாக சொல்லி கண்ணடித்தவனை பார்த்தவளுக்கு கோபம் சுறுசுறு என ஏறி முகம் கோபத்தில் சிவக்க,அதை பார்த்த அர்ஜூன் தன் விளையாட்டு தனத்தை கைவிட்டு ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டான்.

ஏற்கனவே கோபத்தில் இருந்தவள் அவன் கேள்வியில் வெகுண்டு.நான் என்ன செய்தேன் எல்லாம் செய்தது நீ.சும்மா இருந்தவளை சுற்றி சுற்றி வந்து காதல் ஆசை காட்டியது நீ. காப்பாற்றுவாய் என்ற நம்பிக்கையில் உன்னை தேடி வந்த என்னை வேலியே பயிரை மேய்ந்த கதையாய் என் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கியது நீ.இப்போது என்னை நீ கேள்வி கேட்கிறாயா.என்னை கேள்வி கேட்க நீ யார்?முதலில் வீட்டை விட்டு வெளியில் போ என்று ஒருமையில் அவனை சுவாதி வெளுத்து வாங்கினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.