அது வரை அவள் மனதில் இருக்கும் அனைத்தும் வெளிவரட்டும் என்று பார்த்து கொண்டிருந்தவன்.அவள் கடைசி கேள்வியில் வெகுண்டான்.வேகமாக அவள் அருகில் வந்தவன் அவளின் இரு தோள்களில் கை வைத்து உளுக்கி கொண்டே நான் யாரா,நான் யார் என்றா கேட்டாய் உள்ளே தூங்கி கொண்டு இருக்கிறானே நம் மகன் அவன் பிறந்த சான்றிதழை பார் நான் யார் என்று தெரியும் என்றவன் நம் மகன் என்று அழுத்தி கூறினான்.
எனக்கு என்ன உரிமை என்று கேட்டாய் அல்லவா எனக்கு உன்னிடம் இருக்கும் உரிமை வேறு யாருக்கும் இல்லை.வேறு யாருக்கும் என் உரிமையை உன்னால் கொடுக்க முடியாது என்றான் கர்வமாகவும் அவளை ஊடுருவும் பார்வை பார்த்து கொண்டும்.
அவன் பார்வையில் ஒரு நிமிடம் தடுமாறியவள் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து கடகடவென சிரிக்க ஆரம்பித்தாள்.எதற்காக சிரிக்கிறாள் என்று அவன் யோசிக்கும் முன்னே நிதானமாக அவனை பார்த்து கேட்டாள் இவன் உங்கள் குழந்தைதான் என்று யார் சொன்னார்கள்.உடனே அபியின் பிறப்பு சான்றிதழை பற்றி சொல்லாதீர்கள்.இந்த உலகத்தில் அர்ஜூன் என்ற பெயர் உங்களுக்கு மட்டும் தான் வைப்பார்களா என்ன.
நான் அங்கிருந்து வந்த பிறகு வேறு ஒருவரை என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவள் இதழ்களை மூடினான் தன் இதழ் கொண்டு.அவன் முத்தத்தை எதிர் பாராதவள் அவன் வேகத்திலும் இறுகிய அணைப்பிலும் மூச்சு முட்டி போய் அவன் மார்பில் கை வைத்து தள்ள அவன் அணைப்பு மேலும் இறுகியது.
நீண்ட நெடிய முத்தத்திற்கு பிறகு அவளை விட்டவன்.அபி என் குழந்தை தான் என்று எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும் பின் எதற்கு இந்த விதண்டாவாதம்.அது மட்டும் இல்லை இன்றைய கால கட்டத்தில் அபி என் மகன் தான் என்று நிருபிக்க எனக்கு பத்து நிமிடம் போதும் ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தால் தெரிந்து விட போகிறது.நீ எல்லாம் படித்து பாஸ் செய்தாயா யாரிடமும் பணம் கொடுத்து பாஸ் செய்தாயா.கொஞ்சமாவது படித்த பெண் போல் பேசு என்றான் கிண்டலாக.
சரி நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிவிட்டேன் இப்போது நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல் என்றான் அதிகாரமாக.
என்ன கேள்வி என்று பார்த்தவளிடம்.
வெளியே எங்கயோ கிளம்பி கொண்டிருக்கிறாயா?என்று கேட்டேன் என்றவனிடம் என்ன பதில் சொல்வது என்று அவள் திருதிருவென முழிக்க நான் நினைப்பது சரி என்றால் நீ இங்கிருந்து மீண்டும் யாரிடமும் சொல்லாமல் செல்ல முடிவெடுத்திருக்கிறாய் சரியா என்றான்.
அவளை கூர்மையாக பார்த்து கொண்டே.என்னிடம் இருந்து இனி நீ எங்கும் ஓட முடியாதபடி செய்கிறேன் என்றவன்.
நான் இனி இங்கு தான் தங்க போகிறேன்.அங்கு ஹாஸ்பிட்டலில் அனைவரும் பசியோடு இருப்பார்கள் நீ அவர்களுக்கு வேண்டியதை செய் என்றவன் போகிற போக்கில் அபியை காப்பாற்ற சென்று தான் அத்தைக்கு இப்படி ஆனதாக கேள்வி பட்டேன் அவர்கள் அங்கு துன்பத்தில் இருக்கும் போது நீ போக நினைத்ததை அவர்கள் அறிந்தால் என்ன நினைப்பார்கள்.
அவர்கள் நினைப்பது இருக்கட்டும் உனக்கே நீ செய்ய நினைக்கும் செயல் நன்றி கெட்ட தனமாக தெரியவில்லை என்று குட்டை வைத்துவிட்டே சென்றான்.அவன் சொன்னதில் நியாயம் இருந்தாலும் அதை ஏற்று கொள்ள மனம் அற்றவளாக,எனக்கு தெரியும் உன் வேலையை பார் என்று கோபமாக சொன்னவள். சமைக்க ஆரம்பித்தால்.
சமைக்கும் போது இடையில் வேண்டும் என்றே வந்து அவளை இடித்து கொண்டு நின்று ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டு வெறுப்பேற்றி கொண்டிருந்தவனை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தால்.
வீட்டைவிட்டு வெளியே போக சொல்லியாற்று நீ எனக்கு உறவு இல்லை என்றும் சொல்லியாற்று என்ன செய்து இவனை வெளியே அனுப்புவது என்று யோசிக்கையில் அவள் உள் மனம் கேலி செய்தது நிஜமாகவே உனக்கும் அவனுக்கும் உறவு இல்லை என்றால் நீ ஏன் அவன் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லவில்லை என்ற கேள்வியை அதன் தலையில் தட்டி அடக்கினாள்.
இவள் சமைத்து முடிப்பதற்குள் எழுந்து வந்த அபியை பார்த்து என்ன ராஜா எழுந்துட்டியா கொஞ்சம் பொறு அம்மா உனக்கு பால் ஆற்றி தருகிறேன் என்றாள்.அபியும் சமத்தாக சென்று விளையாட ஆரம்பித்தான்.
சுவாதியை சமைக்க சொல்லிவிட்டு கீழே வந்தவன் நகுலன் நகத்தை கடித்து கொண்டு இருப்பதை பார்த்து உனக்கு திருமணம் என்று வர சொன்னாய் என் குடும்பத்தை கண்டுபிடித்துள்ளாய் ரொம்ப நன்றி டா என்று அனைத்து கொண்டான்.
என்ன அண்ணா நீ எதுக்கு நன்றி எல்லாம் சொல்லி கொண்டு நீ சந்தோஷமாக இருந்தாலே போதும் ஆனால் என்ன நாம் அனைவரும் சந்தித்த சூழ்நிலைதான் தவறாக போய் விட்டது அத்தை ஹாஸ்பிட்டலில் இல்லையென்றால் அபியை பார்த்ததுமே பெரிய விழா ஒன்று தயார் செய்து இருப்பேன் என்றான்.