(Reading time: 37 - 74 minutes)

நான் உன்னை கட்டாயபடுத்தி திருமணம் செய்வதாக நினைக்கமாட்டார்கள் என்று பொறிந்தான்.அவனும் தான் என்ன செய்வான் கல்யாணவிஷயம் கேட்டவுடன் அவன் பார்த்தது கீதாவின் முகத்தைதான் நடிப்புக்காகவாவது சிரிப்பாள் என்று எதிர்பார்த்தான் அது நடக்கவில்லை என்ற கோபமும் எல்லாம் முடிந்துவிட்டது என்பதை போல் அவள் பார்த்த பார்வை அவனை அதிக கோபப்படுத்தியது.கை நீட்டி அவன் பேச்சை தடுத்த கீதா அதுதான் உண்மை என்பதை மறக்க வேண்டாம் என்றாள்.

கீதாவை நெருங்கி அமர்ந்தவன் அவள் கண்களை கூர்மையாக பார்த்து நீ யாரையாவது விரும்புகிறாயா அதனால்தான் இப்படி நடந்து கொள்கிறாயா என்று கேட்டான்.அவன் கேள்வியில் கோபம் கொண்ட கீதா திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் அந்த பெண் யாரையும் விரும்பியிருக்க வேண்டுமா இவன் வழியில் சென்றே இவனை கடுப்பேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவள்.

ஆமாம் நான் ஒருவரை காதலிக்கிறேன் என்று கூறினாள்.

கீதாவின் வார்த்தையில் உள்ளுக்குள் நொறுங்கிய நகுலன்.தன் முதல் காதல் ஆரம்பிக்கும் முன்பே முடிந்துவிட்ட கொடுமையை எண்ணி வருந்துவதா இல்லை நான் விரும்பியவள் மனதில் வேறு ஒருவன் இருப்பதை நினைத்து வருந்துவதா என்று ஒரு நிமிடம் செயலற்று அமர்ந்திருந்தான்.அவனின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்த கீதாவே நாம் இப்படி சொல்லியிருக்க கூடாதோ என்று யோசித்தாள்.அவன் செய்தது மட்டும் சரியா நான் என்ன செய்கிறேன் எப்படி செய்கிறேன் என்று பார்த்து கொண்டே இருக்கிறான்.இப்போது கூட இவனுக்கு எதற்கு இவ்வளவு கோபம் என்று ஒன்றும் புரியவில்லை என்று தனக்குள் பேசிகொண்டு வெளியே உங்கள் அண்ணன் வாழ்வைபற்றி கவலை படாதீர்கள் சார் உங்களுக்கு உதவி செய்வதில் என் தோழியின் வாழ்வும் உள்ளது.அதனால் உங்களுக்கு தேவையான உதவியை நான் கண்டிப்பாக செய்வேன் என்று கூறியவளை தீர்க்கமாக பார்த்தவன் எப்படி மேடம் உதவுவீர்கள்.

உன் காதலனை விட்டு விட்டு எப்படி என்னை திருமணம் செய்து கொள்வாய் அதற்கு உன் காதலன் ஒத்து கொள்வானா இல்லை அப்படி ஒருவனே இல்லையா என்று கேட்க.

கீதா உண்மையில் அதிர்ந்துதான் போனாள்.

என்னடி கீதா உன் பொய்யை இப்படி உடனே கண்டுபிடித்துவிட்டான்.பெரிய பிஸ்னஸ்மேன் இல்லையா அதான் அவன் என்ன ராகவ்வா நீ என்ன சொன்னாலும் நம்ப அய்யயோ இவன் ஏன் இப்படி பார்க்கிறான் இப்படி பார்பதை பார்த்தால் நமக்கு பேச்சே வராது போலவே என்று யோசிக்க.

நகுலன் பேச ஆரம்பித்தான் சோ........ நான் சொன்னது போல் பொய்தான் இல்லையா என்று நக்கலாக கேட்க.

கீதா மனதினுள் சமாளி டி கீதா எதாவது யோசி என்று யோசித்தவளின் மூளையில் பல்ப் எரிய டக்கென்று சொல்ல ஆரம்பித்தாள். மனதில் நகைத்தாலும் வெளியில் கூலாக இங்க பாருங்க சார்,அவர் இப்போது பாரினில்தான் இருக்கிறார்.வேலை விஷயமாக சென்றிருக்கிறார்.வருவதற்கு மூன்று வருடங்கள் ஆகும் வந்தவுடன் திருமணம்தான் அதனால்தான் வீட்டில் எல்லோரிடமும் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சமாளித்து கொண்டு இருக்கிறேன்.

அதுமட்டும் இல்லாமல் என்னால் என் தோழியின் வாழ்க்கை நன்றாக அமையும் என்று நீங்கள் சொன்னதால்தான் நான் இதற்கு ஒத்து கொண்டேன். அவர் பாரினில் இருந்து திரும்ப வருவதற்குள் இங்கு சுவாதி பிரச்சனை தீர்ந்துவிடும் நீங்களும் எனக்கு டைவர்ஸ் குடுத்துவிடுவீர்கள் பிறகு எங்கள் கல்யாணம்தான்.என்று ஒரு வழயாக ஒருகதை உருவாக்கி அவன் நம்புவது போல் சொன்னவள்.

அவனின் யோசனையான முகத்தை பார்த்து நம்பிவிட்டானா இல்லையா தெரியவில்லாயே என்று ஓரகண்ணால் அவனை கவனித்து கொண்டிருந்தாள்.

அவனோ சற்று நேர யோசனைக்கு பிறகு கோபமாக அவள் பக்கம் திரும்பி முதலிலேயே ஏன் என்னிடம் சொல்லவில்லை என்னுடைய பிளான் முழுவது உன்னிடம் சொல்லும்போதே சொல்லியிருந்தாள் வேற பிளான் போட்டு இருக்கலாம்.இப்போது சொல்கிறாய் என்று கோபமாக கத்த.எதற்கு நான் உங்களிடம் சொல்ல வேண்டும்.

நீங்கள் யார் சார் எனக்கு நான் தோழியிடமே இதைபற்றி இன்னும் சொல்லவில்லை பிறகெப்படி உங்களிடம் சொல்வேன் என்று எதிர் பார்க்கிறீர்கள் சார் என்றவள்.இப்போது எதற்கு கோபபட்டீர்கள் என்று கூட எனக்கு புரியவில்லை என்றாள்.

மனதினுள் கீது செல்லம் வர வர ரொம்ப கதை சொல்கிறாய் உன் கதையை பெரிய பிஸ்னஸ் மேனே நம்பிவிட்டான் நீ கதை எழுத போனால் உன் பிஸ்னஸ் பிச்சுக்கும் போ... என்று தனக்குதானே சபாஷ் போட்டுகொண்டாள்.

அவளின் தெளிவான பேச்சை கேட்டவன்.கஷ்டமாக இருந்தாலும் இதுதான் உண்மை ஏற்று கொள் மனமே.இவள் உனக்கானவள் இல்லை.அவள் வேறு ஒருவனுக்கு சொந்தமானவள்.இனி இவள் வாழ்வில் தலையிட கூடாது.வேறு ஒருவனை மனதில் நினைத்து கொண்டிருப்பவளை நீயும் நினைப்பது பாவம் என்று தனக்குள் கூறி கொண்டு உன் அண்ணனின் வாழ்வையாவது சீர் செய்.அதுதான் இப்போது முக்கியம் என்று அவளை ஒரு அன்னிய பார்வை பார்த்து பேச ஆரம்பித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.