(Reading time: 37 - 74 minutes)

தொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்? - 03 - சுதி

Uyire yen pirinthaai

ராகவ்விடம் சென்ற சுவாதி அப்பா சாப்பிடலாம் ரொம்ப நேரம் பசி தாங்கமாட்டீர்கள் வாருங்கள் என்று அழைத்து செல்ல.சுந்தரி அவள் கைகளில் இருக்கமாக பிடித்திருக்கும் பேரனை பார்த்து கொண்டிருந்தார்.

ராகவ் சாப்பிட்டு முடித்தவுடன் என்னமா அம்மா ஆசையைபற்றி இருவரும் என்ன முடிவெடுத்து இருக்குறீர்கள் என்று பொதுவாக இருவரையும் பார்த்து கேட்க ஒரே நேரத்தில் இருவரும் முதலில் அவளுக்கு செய்யுங்கள் என்று கூற.

இருவரையும் பார்த்த ராகவ் இருவருக்கும் ஒரே நேரத்தில்தான் திருமணம் யாருக்கு முதலில் என்று கேட்கவில்லை உங்கள் விருப்பம் என்ன என்று மட்டும் கூறுங்கள் என்றவரை அதற்கு மேல் பேச விடாமல் முதலில் சாப்பிடுங்கள் பிறகு பேசலாம் என்று அமைதியாக்கினாள் சுவாதி.

சுவாதியை பார்த்த ராகவ் உன்னை நாங்கள் கஷ்டபடுத்துகிறோம் என்று நினைத்தால் சொல்லிவிடம்மா. உன்னை கம்பல்பண்ண எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.நீ அம்மா அப்பா என்று கூப்பிடுவதால் நாங்கள் உன்னிடம் அதிகமாக இடம் எடுத்து கொள்கிறோம் என்று நீ நினைத்தாலும் சொல்லிவிடம்மா என்று கேட்டார்.சுவாதி வேகமாக அவர் அருகில் வந்து என்னப்பா என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

எனக்கு என்று இருக்கும் உறவு உங்களை தவிர யார் இருக்கிறார்.இப்படி எல்லாம் பேசி என்னை கஷ்டபடுத்தாதீர்கள் என்று அவர் மடியில் படுத்து அழுது.என்னை புரிந்து கொள்ளுங்கள் அப்பா எனக்கு என் மகன் மட்டும் போதும் நான் இப்போது சந்தோசமாகதான் இருக்கிறேன் என்றாள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு புரிகிறது ஆனால் இந்த திருமணம் நடந்தால்தான் நான் கஷ்டபடுவேன் பிளீஸ்பா ...... நீங்கள்தான் எப்படியாவது இதை அம்மாவிடம் சொல்லவேண்டும் என்று கெஞ்ச.

கீதாவோ அப்பா நடந்தால் இருவருக்கும் திருமணம் நடக்கட்டும் இல்லையென்றால் இருவருக்கும் வேண்டாம் எப்படியாவது அம்மாவை சமாளித்து ஆப்ரேஷனுக்கு ஒத்து கொள்ள வைக்கலாம் என்று பிடிவாதமாக கூறிவிட்டாள்.

சுவாதி எவ்வளவோ கெஞ்சியும் வள்ளி பிடிவாதம் பிடிக்க வேறு வழி இல்லாமல் திருமணத்துக்கு சம்மதித்தாள் சுவாதி.

இரவு வீட்டிற்க்கு வந்த சுவாதிக்கு எவ்வளவு முயன்றும் தன் அழுகையை கட்டுபடுத்த முடியாமல் குமுறி அழ ஆரம்பித்தாள்.

சுவாதி திருமணத்துக்கு சம்மதித்த விஷயம் அறிந்து அவளை பார்க்க வந்த அர்ஜூன் அவள் அழுது கொண்டிருப்பதை பார்த்து என்னை மன்னித்துவிடு வது இதுதான் நீ அழும் கடைசி அழுகையாக மாற்ற என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன்.

இப்போது நீ என்ன காரணத்துக்காக அழுகிறாய் என்று எனக்கு தெரியும்.நிச்சயம் ஒரு நாள் நான் உண்மையை புரிந்து கொண்டது போல் நீயும் புரிந்து கொள்வாய் அதுவரை நான் காத்திருப்பேன் என்று தனக்குள் சொல்லிகொண்டு வீட்டைவிட்டு வெளியேறியவன் மனதிலும் வீட்டில் அழுது கொண்டிருந்தவளின் மனதிலும் கடந்த காலம் நிழலாடியது.

சுதி எழுந்திரிக்க போகிறாயா?இல்லையா?மணி என்ன ஆகிவிட்டது பார்.அப்புறம் சீக்கிரம் எழுப்ப வேண்டியதுதானே என்று மல்லுக்கு நின்று லேட்டாகிவிட்டது என்று சாப்பிடாமல் போனால் எனக்கு கெட்ட கோபம் வரும் என்று கத்தி கொண்டிருந்தார் சுவாதி,மாலதியின் தாய் லட்சுமி.

அம்மாவின் சத்தம் கேட்டும் படுக்கையைவிட்டு எழ மனம் இல்லாமல் புரண்டு கொண்டிருந்தவள்.மாலதி யின் அம்மா நான் போய்வருகிறேன் என்ற மெல்லிய குரலில் வாரி சுருட்டி கொண்டு எழுந்து வேகமாக வெளியில் வந்தவள் மாலதி பட்டு சேலை கட்டி தயாராக இருப்பதை பார்த்து அவளை முறைக்க.

அவளோ என்ன மேடம் என் சத்தம் கேட்டு லேட்டாகிவிட்டது என்று பயந்து எழுந்து வந்திருப்பாய் போல இருக்கிறதே என்று கிண்டல் அடித்தாள்.அதை கண்டு கொள்ளாமல்

இன்னைக்கு என்ன சீக்கிரம் கிளம்பிவிட்டாய் வெளியில் செல்வதாக என்னிடம் சொல்லியிருந்தால் நானும் கிளம்பியிருப்பேன்.நீ தனியாகவா போக போகிறாய் என்று அடுக்கடுக்காக பேசியவள் இறுதியில் ஆச்சரியத்தில் முடிக்க.

மாலதியோ அன்பாக அவளை பார்த்து தனியாக போகவில்லை.என் தோழி ரம்யா இல்லை அவள் வருவதாக சொல்லியிருக்கிறாள்.என் கிளாஸ் மேட் சரண்யாவுக்கு இன்று திருமணம் என்று சொன்னேனே உனக்கு நினைவில்லையா என்று கேட்க.சுவாதி அப்போது தான் நிம்மதி அடைந்தவளாக சவகாசமாக மூச்சைவிட்டு அங்கிருந்த இரட்டை சோபாவில் அமர்ந்தவள்.

அது ஒன்னும் இல்ல குட்டிமா நீ எங்கு போனாலும் பாடிகாட் வேலை பார்க்க இந்த லக்ஸ் டார்லிங் என்னையும் சேர்த்து அனுப்புவார்களா,இன்று நீ கிளம்புகிறேன் என்றதும் என் பணிக்கு போட்டியாக யாரும் வந்துவிட்டார்களோ என்று பயந்து போய்விட்டேன் என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.