(Reading time: 37 - 74 minutes)

அமைதியாக அம்மாவை சுற்றி சுற்றி வரும் பெண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று.

சுவாதி டூர் சென்ற ஒன்பதாம் நாள் நடந்தது அந்த துயரம். கோவிலுக்கு சென்றாலாவது மனபாரம் குறையும்,என்று சென்ற தாயும் மகளும் நல்லபடியாக இனி இந்த வீட்டிற்க்கு திரும்ப போவதில்லை என்பதை அறியாமல் கிளம்பி சென்றனர்.அவர்கள் கோவிலுக்கு செல்வதை அங்கு காவலுக்கு போட்டிருக்கும் ஆட்களின் மூலம் அறிந்த ராம்.உன் மகள் கோவிலுக்குள் இருக்கும் தெய்வமா நான் நாயா பார்.இந்த நாய் என்ன செய்கிறேன் என்று மனதுக்குள் கருவி கொண்டவன்.

அவனது ஆட்கள் மூலம் லட்சுமியை லாரியில் அடிக்க சொன்னவன் மாலதியையும் தூக்கிவர சொன்னான்.அவன் சொன்னது போல செய்த அவனின் ஆட்கள்.மாலதியை தூக்கி சென்றனர்.அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய மாலதி இறுதியாக சற்று நேரம் சோர்ந்து போனவள் போல் அமைதியாக வந்தாள்.

அவளை பிடித்து இருந்தவனில் ஒருவன் அவ்வளவு தான் உனக்கு பலமா,இந்த காலத்து பெண்கள் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று எதையும் சாப்பிடாமல் உடம்பில் தெம்பு இல்லாமல் இருக்கிறார்கள்.பார் சற்று நேரத்திலேயே இந்த பெண் போராட முடியாமல் சோர்ந்துவிட்டாள் என்று கூற,அதற்கு மற்றவனோ இப்படி இருப்பதும் நல்லதுதான்.

ஐயாவிற்கு வசதியாக இருக்கும் என்று கூறி அசிங்கமாக சிரிக்க கேட்டு கொண்டிருந்த மாலதிக்கு உடல் அருவருப்பில் கூசியது.தன்னை எங்கு கடத்தி போகிறார்கள் யார் கடத்த சொன்னது என்று அனைத்தும் புரிய ஒரு முடிவுக்கு வந்தவளாக ஓய்ந்து படுத்து இருப்பது போல் படுத்திருந்தாள்.

அனைவரும் அசந்திருந்த நேரம் பார்த்து கார் கதவை திறந்து கீழே குதித்தால்.அவளின் கெட்ட நேரம் அப்போதும் விடாமல்,எதிரே வந்த லாரியில் மோதினாள்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த லட்சுமியையும், மாலதியையும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.தன் வாழ்வில் இது போல் இனி வாழ்வை ரசிக்க முடியாது என்னும் அளவிற்க்கு பத்து நாள் டூரை முடித்துவிட்டு ஊரில் வந்து இறங்கினாள் சுவாதி.

அம்மாவிற்கும் அக்காவிற்கும் வாங்கிய கிப்டை எடுத்து கொண்டு அவள் வீட்டிற்குள் செல்லும் போது மணி அதிகாலை மூன்று.

வீட்டில் உள்ள மூவரிடமும் எப்போதும் ஒரு சாவி இருக்கும் லட்சுமி கோவிலுக்கு சென்ற நேரம் பார்த்து மாலதியோ அல்லது சுவாதியோ வீட்டிற்கு வந்தால் உபயோகபடுத்த என்று.தன்னிடம் உள்ள சாவி கொண்டு வீட்டை திறந்து உள்ளே வந்த சுவாதிக்கு அப்போதே அம்மாவை பார்க்க வேண்டும் என்று தோன்ற லட்சுமியின் அறைவரை சென்றவள் வேண்டாம் இந்த நேரத்தில் சென்று அவர்களின் தூக்கத்தை கெடுக்க வேண்டாம்.காலையில் சீக்கிரம் எழுந்து பார்த்து கொள்ளலாம் என்ற முடிவுடன் தனது படுக்கை அறை நோக்கி சென்றாள்.

தனது அறைக்கு சென்றவள் இருவருக்கும் வாங்கி வந்த டிரஸ் பேக்குகளை அப்படியே வைத்துவிட்டு ஒரு குளியல் போட்டுவந்து படுத்தவள் காலை பத்து மணி போல்தான் எழுந்தாள்.

எழுந்து மணியை பார்த்த சுதி நான் வந்தது தெரியவில்லை போல இல்லை என்றால் காலை 6 மணியில் இருந்து லட்சு சுப்ரபாரதம் பாட ஆரம்பிச்சுடும் என்று கிண்டலாக நினைத்தவள் சென்று காலை கடன்களை முடித்து வெளியே வர யாரையும் காணவில்லை.

குட்டிமாதான் காலேஜ் போயிருப்பா இந்த லட்சு எங்க போச்சு என்று யோசித்து கொண்டே வெளியில் வந்தவள்.அனைவரும் அவளை ஆச்சரியமாக பார்பதை பார்த்து.என்னடா இது பத்து நாள் ஊரில் ஆள் இல்லை என்றால் எல்லோரும் புதிதாக பார்பதை போல் பார்க்கிறார்கள் என்று நினைத்து கொண்டு சரி நம்ம குண்டூஸ் அம்மாகிட்ட கேட்போம் இந்த லட்சு எங்க போயிட்டாங்கனு என்று பக்கத்து வீட்டை நோக்கி சென்றாள்.

இந்த லட்சுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா.ஒரு பொண்ணு டூர் போனாலே அவளுக்கு என்னாச்சு ஏதாச்சுனு ஒரு போனாவது பண்ணி கேட்டாங்களா,என்ன வாழ்க்க டா இது என்று சலித்து கொண்டவள்.கவலைபடாதே சுதி உனக்குனு வர்ரவன் உன்னை உனக்காகவே விரும்பி கைல வச்சி தாங்குவான் என்று நினத்தவள்..அய்யயோ.......என் வெயிட்ட அவன் தாங்களனா, எனக்குதானே பிராப்ளம் அதனால நல்லா பாத்துபான் இது ஓ.கே என்று தனக்குள் கூறி கொண்டவள் அறிந்திருக்கவில்லை தாயும் சகோதரியும் மாற்றி மாற்றி கால் செய்து போன் எடுக்காமல் போனதை விதி என்று சொல்வதா இல்லை மாலதியின் போராத காலம் என்று சொல்வதா மொத்தத்தில் இவர்கள் வாழ்வில் விதி சற்று அதிகமாக விளையாண்டதை என்னவென்று சொல்வது.

ஆண்ட்டி என்று கத்தி கொண்டே வீட்டிற்குள் வந்தவள் ரம்யாவின் அம்மா அலமேலு மாத்து துணிகளையும்,பிளாஸ்க் போன்றவற்றை ஹாஸ்பிட்டல் எடுத்து செல்ல அடுக்கி கொண்டு இருந்தவள்.சுவாதியின் சத்தம் கேட்டு கண் கலங்க அவளை பார்க்க உள்ளே வந்த சுவாதிக்கு பக்கென்று இருந்தது.

என்ன ஆண்ட்டி உங்களுக்கு உடம்பு சரியில்லையா ஏன் டல்லாக இருக்கிறீர்கள்.மாமா எங்க வழக்கம் போல வேலைக்கு போய்விட்டாரா கவலை படாதீங்க நான் உங்களை ஹாஸ்பிட்டல் கூட்டி போகிறேன்.

ஏன்...... ஏன்...... என்னாச்சு ஆண்ட்டி ஏன் இப்படி அழுகிறீர்கள் என்று கேட்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.