(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 38 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ப்போதும் கிரிக்கெட் விளையாடும் போது மகிழ்வேந்தன் தலைமையில் ஒரு குழு, அறிவழகன் தலைமையில் ஒரு குழு என்று பிரிந்து விளையாடுவார்கள். அதில் யார் யார் யாருடைய குழுவில் இருக்க விருப்பபடுவார்களோ அப்படி பிரிந்து விளையாடுவார்கள். இது போழுதுபோக்குக்காக விளையடுவதால், இதில் கடினமான போட்டியெல்லாம் இருக்காது.

இன்று அறிவழகன் இல்லையென்பதால் அமுதன் அங்கு இருக்கவே, “என்ன அமுதன் நீங்க கேப்டனா இருக்கீங்கிங்களா?” என்று மகி கேட்க,

“மகி.. அமுதனுக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமான்னு தெரியலையே, அவர் எப்படி கேப்டனா இருக்க முடியும்?” என்று அருள் கேட்டாள்.

அதற்கு ஒரு புன்னகையை உதிர்த்த அமுதன், “கொஞ்சம் கொஞ்சம் விளையாடத் தெரியும் மகி.. இருந்தாலும் கேப்டன் எல்லாம் வேண்டாம்.. மொழி பேசறத பார்த்தா அவளுக்கு நல்லா விளையாட வரும் போலயே, அதனால் அவளே கேப்டனா இருக்கட்டும்..” என்று கூறினான்.

“என்ன அருள் நீ கேப்டனா இருக்கியா? என்று மகி கேட்டதும், அவளும் சரி என்று தலையை ஆட்டினாள்.

இப்போது யார் குழுவில் யார் யார் இருப்பது என்று முடிவு செய்ய வேண்டும், சுடர் விளையாடிய  ஓரீரு முறையும் இதுவரை மகியின் குழுவில் தான்  விளையாடியிருக்கிறாள். அதாவது அவளுக்கு விளையாட தெரியாது என்பதால் அவன் விளையாட கற்றுக் கொடுப்பான். அதனால் அவனது குழுவில் அவள் இருக்கட்டும் என்று சொல்லி விடுவான்.  இப்போது எப்படியோ அமுதன் இருக்கும் குழுவில் அவளும் இருக்கப் போவதாக சொல்வாள். அதனால் இருவரையும் தன் குழுவில் இணைத்துக் கொள்ளலாமா? என்று மகி யோசித்தான்.

ஆனால் அருள் குழுவில் நன்கு விளையாடுபவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அமுதன் சுமாராக தான் விளையாடுவேன் என்று சொன்னாலும் நன்றாக விளையாடுவான் என்று தான் மகிக்கு தோன்றியது. அதனால் இருவரையும் அருள் இருக்கும் குழுவில் சேர்ப்போமா? என்றும் யோசித்தான். ஆனால் அருள்.. சுடர் இருந்தால் அந்த குழுவில் இருக்க மாட்டேன் என்று சொல்லிவிடுவாள். அதனால் என்ன செய்வது என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அன்று மகியை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அமுதனோடு நேரத்தை செலவிட்டதாலும், மகியோடு சரியாக பேசாததாலும் அதை ஈடு செய்ய, “நான் மகிழோட டீம்ல தான் இருக்கப் போறேன்..” என்று சுடர் கூறினாள். அதைக்கேட்டு மகிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதேபோல்  புவியும் “நானும் மகி மாமா டீம் தான்..” என்றான்.

“அப்போ அமுதன் நீங்க?” என்று மகி கேட்கவும்,

அமுதன் பதில் சொல்வதற்கு முன்பே.. “சார்லஸும் நானும் மச்சியோட டீம்ல இருக்கப் போறோம்..” என்று இலக்கியா கூறினாள்.

அதற்கு அருள் இலக்கியாவை முறைக்கவும், “ஆமாம் அருள்,  அறிவு இல்லாததால அமுதன் உன்னோட டீம்லயே இருக்கட்டும்..” என்று மகி கூறினான். அதற்கு அவளும் சரி என்று ஒத்துக் கொண்டாள்.

பூவா தலையா போட்டு பார்த்ததும் முதலில் அருள்மொழி குழு தான்  பேட் செய்ய வேண்டும் என்று வந்தது. மகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர் ஹைஃபை கொடுத்துக் கொள்ள, அமுதனும் மகிழ்ச்சியோடு அவளுக்கு ஹைஃபை கொடுக்க போக, அவளும் முதலில் அறியாமல் கையை அவனது கை அருகே கொண்டு போனவள், பின் கொடுக்காமல் கையை எடுத்துக் கொண்டாள்.

“இது சாதாரண நிகழ்வு தானே, ஹைஃபை கொடுத்தாள் என்ன?” என்று அமுதன் மனதில் நினைத்துக் கொண்டவன், பின் உதடுகளை பிதுக்கி அது அவனை பாதிக்கவில்லை என்பதாக காட்டிக் கொண்டான்.

பின் விளையாட்டு ஆரம்பிக்க, பொட்டு பொடிசுகளையெல்லாம் பேட் செய்ய வைத்தவள், அமுதனுக்கு மட்டும் அந்த வாய்ப்பு கொடுக்கவில்லை.

“ஹே என்ன மச்சி.. சார்லஸை பேட் பண்ண வைக்கலாமில்ல..” என்று இலக்கியா கேட்டதற்கு,

“இந்த டீம்க்கு நான் தான் கேப்டன்.. எனக்கு யாரை பேட் பண்ண வைக்கணும்னு தெரியும்.. நீ சும்மா இரு..” என்றாள்.

“எல்லாம் காலம்.. வேற என்ன சொல்ல..” என்று இலக்கியா  சொல்லிவிட்டு சென்றாள்.

பேட் அடிக்கக் கூட ஓரளவுக்கு கற்றுக் கொண்ட சுடர், பந்து போட மட்டும் கொஞ்சம் திண்டாடித்தான் போவாள். அவள் பந்து போட்டால் சிக்ஸர்  அடிக்காதவர்கள் கூட சிக்ஸர் அடிப்பர். ஆனாலும் மகி அவளுக்கு அவ்வப்போது பந்து அடிக்க வாய்ப்பு கொடுப்பான்.

“வேண்டாம் மகிழ்.. நான் பால் போட்டா எல்லாம் சிக்ஸ் ஃபோர்னு அடிக்கிறாங்க.. வேண்டாம்..” என்று மறுத்து  பார்ப்பாள்.

“இப்படியே இருந்தா அப்புறம் எப்படி பால் போட கத்துப்ப.. இது சும்மா விளையாட்றது தானே.. பரவாயில்ல விளையாடு..” என்று மகி சொல்லவும், சரி என்று விளையாடுவாள்.

இன்று விளையாட்டு ஆரம்பிக்கும் போது எப்படி பால் போட வேண்டுமென்று சொல்லி தந்தான்.

அதற்கு அருள்மொழி கூட “விளையாட்டு ஆரம்பிக்கும் போது என்ன சொல்லிக் கொடுத்துட்டு இருக்க.. இதெல்லாம் ஒத்துக்க முடியாது..”  என்றுக் கூறினாள்.

 இதுவரை மகி சொல்லிக் கொடுத்ததை மனதில் நிறுத்தி இந்த முறை சுடர் கவனமாக விளையாட ஆரம்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.