(Reading time: 22 - 43 minutes)

தொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 15 - ஸ்ரீ

Vizhi vazhi uyir kalanthavale

உனக்குள் தொடங்கி உனக்குள் தானே

எந்தன் உலகம் முடிகிறதே

உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே

எந்தன் நாட்கள் விடிகிறதே

இரவின் மடியில் குழந்தைகள் ஆவோம்

இருட்டில் நதியில் இறங்கி போவோம்

நேற்றென்னும் சோகம்

நெருப்பாய் வந்து தீ மூட்டும்

இன்றென்னும் மழையில்

அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே

 

கதைகளை பேசும் விழி அருகே

எதை நான் பேச என்னுயிரே

காதல் சுடுதே காய்ச்சல் வருதே

ன் கண்ணம்மாவின் கலக்கமே அவனுக்கு உயிர் வலி கொடுக்கும் எனும்போது அவள் அப்படி அழும்போது திவா நிச்சயமாய் மனதளவில் இறந்து துடித்துக் கொண்டிருந்தான்.

சற்றும் தாமதியாது அவளை தன்னுள் புதைத்துக் கொள்ள திமிறியபடியே அழுது கொண்டிருந்தவளை தேற்ற வார்த்தையின்றி தவித்தான்.

சில நிமிடங்களுக்கு மேல் பொறுக்க மாட்டாதவனாய் தன்னிலிருந்து அவளை பிரித்தெடுத்தவன் நிதானமாய் அவளிடம்,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“உன் திவா இன்னும் உயிரோட தான் இருக்கான் கண்ணம்மா..இப்படி அழுது அவனை…”

சட்டென வாயை மூடியவள் அவன் சட்டையை கொத்தாய் கையில் பிடித்தாள்.

“ஏன் திவா ஏன் நீ இப்படியிருக்க..நா உன்கூட வாழறதுக்கு எந்த தகுதியும் இல்ல.உனக்கு இருக்குற பக்குவமும் பொறுமையும் எனக்கு இல்லவே இல்ல..நீ என் மேல வச்சுருக்குற அளவு காதலும் பாசமும் எனக்கு இல்லையே திவா..நா உனக்கு பொறுத்தமானவளே இல்ல..”

“கண்ணம்மா இல்ல இல்லனு இவ்ளோ சொல்றியே நீ பேசின ஒவ்வொரு வார்த்தையும் என் மேல இருக்குற காதலாலயும் எங்க உன்னை விட்டு நா தூரமா போய்ட்டனோங்கிற பயத்துலயும் வந்தது தான..அதை உன்னால மறுக்க முடியுமா டா..

சொல்ல போனா ஒருவிதத்துல எனக்கு சந்தோஷம் தான் இந்த மாதிரி உரிமையா எனக்கே எனக்கா நீ வேணும்னு என்னை யாருமே நினைச்தில்ல டா..இத்தனை உரிமையா சண்டையும் போட்டதில்ல அதெல்லாம் உன்னால உன்னால மட்டும் தான் எனக்கு கிடைக்குது..

அதனால இன்னொரு தடவை தேவையில்லாம பேசி என்னை கொல்லாத டா..”,பேசியவனின் கண்களிலும் கண்ணீர் நனைத்திருந்தது.

“தெரில திவா என்ன பேசணும்னு தெரில உன்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரில.அவ்ளோ ஏன் இதுக்கு மேல உன்னை எப்படி பேஸ் பண்ண போறேன்னு கூட தெரில..ஆனா நல்லா இருந்த நம்ம வாழ்க்கையை நானே விரிசல் விழ வச்சுட்டேனோனு தோணுது.

எல்லாத்துக்கும் மேல சிந்தாம்மா அவங்க என்னை இத்தனை நாள் பாத்துகிட்டதுக்கு நல்ல மரியாதை பண்ணிருக்கேன்.அந்த ஒரு விஷயத்துக்காகவே நீ என்னை மன்னிச்சாலும் நா மன்னிக்க முடியாது திவா..

பெத்த அம்மாவா இல்லாத போதும் அவங்க உன்னை வளர்த்த விதத்துக்கும் என் அம்மா நடந்துகிட்ட விதத்துக்கும் எத்தனை தூரம் இல்ல..காசு பணம் எல்லாத்தையும் தாண்டின ஒரு வாழ்க்கை, அவங்களுக்கு புரியல திவா..

அவங்க பொண்ணு அவங்க ரத்தம் தான நான் அதான் அவசரப்பட்டு உறவுகளை மதிக்காம போய்ட்டேன்.ஐ பீல் ஷேம் ஆன் மீ திவா..”

“கண்ணம்மா திஸ் இஸ் தி லிமிட்..சில விஷயங்களில் வார்த்தைகளின் வீரியத்தை மூளையை கொண்டு ஆராயாம மனசால உணரனும் டா..நா அப்படி தான் யோசிக்குறேன்

அதனால தான் இப்போ கூட என்னால உன்னை குறைவா நினைக்க முடில.போதும் டா நமக்கான கெட்ட நேரம் இதோட முடியுதுனு நினைச்சுப்போம்..நீ முதல்ல தூங்கு நாளைய நமக்கான பொழுது புதுசா தொடங்கட்டும்.”

அவளை வலுகட்டாயமாய் தன் மடியில் படுக்க வைத்தவன் தலைகோத ஆரம்பிக்க அவனையே பார்த்திருந்தவள் வெகு நேரத்திற்குப்பின் கண்ணயர்ந்தாள்.

மறுநாள் கண்விழித்தபோது வெண்பா அப்படியே அவன் மடியிலேயே தான் இருந்தாள்.திவ்யாந்தோ அமர்ந்தவாறே கட்டிலில் பின் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

சற்றே தெளிந்தவளுக்கு இரவு நடந்த அனைத்தும் நினைவிற்கு வர மீண்டும் கண்களை நிரப்பிக் கொண்டு வந்தது கண்ணீர்.

மனதை தேற்றிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு சிந்தாம்மாவை பார்த்த பின்பு தன்னை கட்டுப்படுத்த முடியாமல் போனது.அவரை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்திருந்தாள்.

“சிந்தாம்மா என்னவெல்லாமோ பேசிட்டேன்..ப்ளீஸ் என்னை தப்பா நினைச்சுட மாட்டீங்க தான..வேணும்னு எதுவும் பண்ணல மா நிச்சயமா..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.