(Reading time: 22 - 43 minutes)

“வில் யூ ப்ளீஸ் ஷட் அப்..திஸ் இஸ் தி லிமிட்..என்ன நினைச்சுட்ட என்னை பத்தியும் என் காதலை பத்தியும்..நீ தான் டா நான்.உன்னை தவிர வாழ்க்கைனு ஒண்ணு இல்லவே இல்ல எனக்கு அது குழந்தையாவே இருந்தாலும் சரி.ஐ பெக் யூ இன்னொரு தடவை இப்படி பேசி கஷ்டப்படுத்தாத கண்ணம்மா..ப்ளீஸ்..

என்னால இத்தனை சத்தமா கூட பேச முடியும்னு இன்னைக்கு உன்னால தான் தெரிஞ்சுகிட்டேன்.எல்லாரும் மாதிரி தான் டா நானும் சராசரி மனுஷன் என் பொறுமைக்கும் இவ்ளோ தான் எல்லை இருக்கு..வேணாம் இதுக்கு மேல இதைப்பத்தி எதுவும் பேசாத டா..”

திவ்யாந்த் அடுத்தடுத்த அதிர்வுகளால் நொந்து போயிருந்தான்.எல்லாமே தன்னை மீறி நடக்கும் செயல் என்பது புரிந்தாலும் அதை அத்தனை எளிதாய் எடுத்துக் கொள்ளத்தான் முடியவில்லை.அதுவும் வெண்பாவின் வாயால் இப்படியான வார்த்தைகளை அவனால் கேட்கவும் முடியவில்லை.

வெண்பாவோ இத்தனை ஆர்பார்ட்டத்திலும் சிலையென இருந்தாளேயன்றி அழவுமில்லை வருத்தமுமில்லை.ஆனால் இன்னதென சொல்ல முடியாத ஒரு உணர்ச்சி அவள் முகத்தில்.15 நிமிடங்களுக்கும் மேல் அமைதி மட்டுமே பிரதானமாய் இருந்தது அவ்வறையில்.

சற்றே தெளிந்தவள் நிறுத்தி நிதானமாய் திவ்யாந்திடம்,”நா கொஞ்ச நாள் தனியா இருக்கேன் திவா.”

“தனியானா புரியல??!”

“தனியா உன்னையோ சிந்தாம்மாவையோ பார்க்காம ஹாஸ்ட்டல்லயோ இல்ல எங்கேயோ..ஆனா இங்க வேணாம் உங்க முகத்தை பார்த்து பார்த்து என் மேல எனக்கே குற்றவுணர்ச்சி அதிகமாகி அதுவே என்னை பைத்தியமாக்கிடும்.

அதுமட்டுமில்லாம நா உன் பக்கத்துல இருக்குற வர நீயும் உன் வாழ்க்கையை பத்தி யோசிக்க மாட்ட திவா..என்னால உன் வாழ்க்கைல வந்த குழப்பம் எல்லாம் போதும்..அதனால தான்..”

“போ கண்ணம்மா உனக்கு எங்க போகணும்னு தோணுதோ போ..ஆனா உன் திவாவை உயிரோட கொன்னுட்டு தான் போகப் போற அதைமட்டும் மனசுல பதிய வச்சுக்கோ..”

“திவா ப்ளீஸ்..”,என்றவளுக்கு கண்கள் தானாய் கலங்க அமைதியாய் கண்ணீர் வடித்தாள்.அவளருகில் வந்தவன் மறு சிந்தனையின்றி அவளை தன்னோடு சேர்த்துக் கொள்ள அத்தனை இறுக்கமாய் அவனோடு ஒன்றிக் கொண்டாள்.முதல் நாள் பள்ளி செல்லும் பிள்ளை தாயை பிரியும் பாவம் அந்த இறுக்கத்தில்.

“ப்ளீஸ் திவா புரிஞ்சுக்கோ இங்க இப்படியே இருந்தேன்னா கண்டிப்பா நா பைத்தியம் ஆய்டுவேன்.நா பேசின வார்த்தைகளும் உன்னை நோகடிச்ச நிமிஷங்களும் மட்டுமே தான் என் மனசை சுத்தி சுத்தி வருது.என்னை என்ன பண்ண சொல்ற..நெஞ்செல்லாம் அடைக்குது..

இந்த இரண்டு நாள்லயே சாப்பாடு இறங்க மாட்டேங்குது திவா..எல்லாத்துக்கும் மேல நீங்க ரெண்டு பேரும் எனக்காக பார்த்து பார்த்து காட்டுற அன்பு அது என்னை கூனிக் குறுக வைக்குது..நா என்ன தான் பண்ணட்டும்?”

தன்னிடமிருந்து அவளை பிரித்தவன்,”கண்ணம்மா அழறத நிறுத்து முதல்ல..போதும் வருத்தம் அழுகை எல்லாம் போதும்.எப்பவுமே உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்.இப்பவும் அந்த ஒரு காரணத்துக்காகவே நீ கேக்குற விஷயத்துக்கு நா சம்மதிக்குறேன்.

ஆனா தனியா எங்கேயோ எல்லாம் விட முடியாது..நீ எங்க போனாலும் சிந்தாம்மாவும் உன்கூட தான் வருவாங்க.உனக்கா என்னைக்கு என்கிட்ட வரணும்னு தோணுதோ அப்போ வா..அதுவரை நா உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்..அதே நேரம் உன்னை என் கண் பார்வைல தான் வச்சுருப்பேன்.சம்மதம்னா சொல்லு அடூத்து என்ன பண்ணலாம்னு யோசிப்போம்.

இதுக்கு மேல பேசுறதுக்கு ஒண்ணுமில்ல..நீ சொல்றத பொறுத்து நா சிந்தாம்மாகிட்ட பேசுறேன்.”

அதன் பிறகு ஒருவழியாய் அவளை சம்மதிக்க வைத்து சிந்தாம்மாவிடமும் பேசி அவரை சம்மதிக்க வைத்து வீடு தேடும் நேரம் பழைய வீட்டின் ஓனரே அந்த வீட்டை விற்கப் போவதாய் கூற திவ்யாந்தே அந்த வீட்டை வாங்கிக் கொண்டான்.

அடுத்த ஒரு வாரத்தில் அனைத்து வேலைகளும் முடிந்து இருவருமாய் அந்த வீட்டிற்குக் கிளம்பினர்.திவாவின் உயிரற்ற அந்த பார்வை அவளை குத்திக் கிளித்தது இருந்தும் இந்த முடிவை மாற்றிக் கொள்ள மனமின்றி கிளம்பிச் சென்றாள்.

திவ்யாந்த் அவளை அனுப்பியதற்கு முக்கிய காரணம் தனிமை அவளது மனதிற்கு தெளிவை கொடுக்கும் என்பது ஒன்று.அதிக நாட்கள் அவளால் தன்னை விட்டு இருக்க முடியாது சீக்கிரமே தன்னிடம் திரும்பி விடுவாள் என்பது இரண்டு.

ஆனால் அதையும் மீறியதாய் இருந்தது வெண்பாவின் குற்றவுணர்ச்சி..முதல் ஒரு மாத காலம் முடிவதற்குள் ஒரு வழி ஆகிப் போனாள்.திவ்யாந்தும் சொன்னபடி அவளை தன் கண்ணெதிரில் வைத்திருந்தானே ஒழிய ஒரு நாளும் அவள் கண்முன் வரவில்லை

சிந்தாம்மா வாரத்திற்கு ஒருமுறையோ இருமுறையோ திவ்யாந்தை காண சென்று வருவார்.இருவருக்கும் ஆதரவாய் இருப்பதை தவிர அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே உண்மை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.