(Reading time: 22 - 43 minutes)

அப்படி இப்படியாய் ஆறு மாதங்களை கடந்தும் கூட வெண்பாவின் மனம் மாறாமல் போக திவ்யாந்திற்கோ இதற்கு மேல் முடியாது என தோன்றிவிட்டது.நாட்டியாலயாவில் எட்டு மாதங்களுக்குப் பின் அவளை சந்தித்த தருணம் நிச்சயமாய் மறக்க முடியாத ஒன்று..அப்பொழுதே அப்படியே தன்னோடு வந்துவிட மாட்டாளா என வெகுவாய் துடித்த மனத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

அன்றிலிருந்து அவளை பார்க்கும் சந்தர்ப்பங்களை தவிர்க்காமல் பேச ஆரம்பித்தான்.அப்படி இப்படியாய் இதோ நாளை முதல் தன்னோடு தன்னருகிலேயே இருக்கப் போகிறாள்.பழைய நினைவுகளில் கரைந்தவனுக்கு மறுபடியும் ஒருமுறை அத்தனை நிகழ்வுகளோடும் வாழ்ந்து வந்தது போன்ற பிரமை.

நேரம் நடுநிசியை தாண்டியிருக்க கடினப்பட்டு தூக்கத்தை வரவழைத்து உறங்கியவன் அதிகாலையிலேயே எழுந்து குளித்து தயாராகி வெண்பாவை அழைத்து வர மருத்துவமனைக்குச் சென்றான்.

அப்போது தான் சிந்தாம்மாவும் வெண்பாவும் எழுந்தே அமர்ந்திருந்தனர்.சிந்தாம்மா அவனை பார்த்து புன்னகைத்தவாறே தங்கள் உடைமைகளை எடுத்து வைக்க ஆரம்பிக்க மெதுவாய் அவளருகில் வந்தவன் கன்னம் தொட்டு தன்புறம் இழுத்து நெற்றியில் இதழ்பதித்து”குட் மார்னிங் கண்ணம்மா..இப்போ எப்படி இருக்கு?”

“குட்மார்னிங் திவா..இப்போ பெட்டர்..ஏன் இவ்ளோ சீக்கிரமே எழுந்துட்ட..ரெஸ்ட் எடுத்துருக்கலாமே..”

“நீ நம்ம வீட்டுக்கு வர்றதே ஆயிரம் யானை பலம் தானே எனக்கு..சரி நா போய் டிபன் வாங்கிட்டு பில் செட்டில் பண்ணிட்டு வரேன்.பொறுமையா ரெடி ஆகு டா..சிந்தம்மா இப்போ வந்துட்றேன்..”

முகம் சலனமில்லாமல் இருந்தாலும் அவனின் நடை சிறுபிள்ளையாய் துள்ளித் திரிந்து கொண்டுதான் இருந்தது.இருவருக்கும் உணவு வாங்கிக் கொடுத்து ஹாஸ்பிட்டல் பில் செட்டில் செய்து டிஸ்சார்ஜ் வேலைகளையெல்லாம் முடித்து மூவருமாய் கிளம்பும் போது மணி பத்தை கடந்திருந்தது.

வீட்டை அடைந்தவுடன் சிந்தாம்மா வேகமாய் சென்று ஆரத்தி கரைத்து கொண்டு வர அதற்குள் காரை நிறுத்திவிட்டு வெண்பாவை கைபிடித்து அழைத்து வந்தான்.

உள்ளே நுழைந்தவளை தனதறைக்கு அழைத்துச் செல்ல வாசல் வரை வந்தவள் அங்கிருந்தே அறையை சுற்றி பார்வையை சுழற்றினாள்.அத்தனை அத்தனை அழகான தருணங்களும் கண்முன் காட்சியாய் விரிந்தது.இறுதியாய் கடந்த கசப்புகளுக்கும் மனதை நிறைக்க விழிமுடி அத்தனையையும் கிரகித்துக் கொள்ள முயன்றவளை தோள்பற்றி உள்ளே அழைத்துச் சென்றான்.

கட்டிலில் சாய்வாய் அமர வைத்தவன் காலை நீட்டுமாறு தூக்கி வைக்க வெண்பா அவன் கைப்பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டாள்.

“மிஸ்ட் யூ சோ மச் திவா..லவ் யூ..ரொம்ப கஷ்டபடுத்திட்டேன்..சாரினு ஒரு வார்த்தை சொல்றத தவிர வேற என்ன பண்ண முடியும்..பட் நிஜமா நீ மட்டும் தான் என் வாழ்க்கைனு நானும் புரிஞ்சுகிட்டேன் திவா..என்னை விட்டு எங்கேயும் போக மாட்ட தான..நிஜமாவே ஃபாரின் ட்ரிப் போறியா திவா..”

“இப்போ வர கன்பார்ம் பண்ணல கண்ணம்மா..எனக்கு எங்க இருந்தாலும் பிரச்சனை இல்லை..உன்கூட இருக்கணும்..உன் பக்கத்துலயே வேலை முடிஞ்சு வந்தா சிரிச்சுட்டே இருக்குற இந்த முகம் இருக்கணும்..நைட் சேர்ந்து சாப்ட்டு கதைபேசி கை கோர்த்து பொழுது போக்கணும்..தூக்கத்துல கூட என் கை எட்ற தூரத்துல நீ இருக்கணும்..வாழ்க்கை மொத்தத்துக்கும் அது மட்டும் தான் வேணும் டா..”

“அப்போ குழந்தை??”

“கண்ணம்மா..கொஞ்ச நாள் போகட்டும் அதைபத்தி யோசிப்போம்..”

“இல்ல திவா அது மட்டும் தான் உன் வாழ்க்கையை முழுமையாக்கும்னு எனக்குத் தெரியும் திவா..உனக்கு தெரியாதது இல்ல..எத்தனையோ வழி இருக்கு நாம டாக்டரை கன்சல்ட் பண்ணலாம்..”

“என்ன சொல்ற டா?”

“வாடகைத் தாய் அப்படி எதாவது….”

“கண்ணம்மா அப்படி ஒரு விஷயத்தை யோசிக்கல..நமக்கு வசதி இருக்குதான் நீ சொல்றத செய்யலாம் தான்..ஆனா அதுகூட ஒருவிதத்துல சுயநலம் தான் டா..யோசிச்சு பாரு நீ சொல்ற மாதிரி வாடகை தாயா இருக்குறவங்க எல்லாருமே தன் சூழ்நிலையால பணத் தேவைக்காக தான் அதுக்கு ஒத்துக்குறாங்க..

ஆனா அப்படி அவங்க கடமைக்கு பெத்துகிட்டாலும் பத்து மாசம் வயித்துல சுமந்தது பொய்னு ஆய்டுமா சொல்லு..வலிக்க வலிக்க பெத்தெடுத்த கொஞ்ச நாள்லயே உங்களுக்கும் குழந்தைக்கும் எந்த சம்மந்தமும் இல்லனு சொல்றதெல்லாம் கொடுமை டா..அந்த பாவம் நமக்கு வேண்டாம்.

என் விருப்பம்னு கேட்டனா கண்டிப்பா குழந்தையை தத்தெடுத்துக்கலாம்..அதுவும் உனக்கு விருப்பம் இருந்தா இல்லைனா இப்படியே விட்டுருவோம்..ஆசிரமங்கள்ல ஆதரவு இல்லாம என்னை மாதிரி எத்தனை எத்தனை பச்சை குழந்தைங்க இருக்காங்க..அவங்கள்ல ஒருத்தரோட வாழ்க்கையை நாம பொறுப்பு எடுத்துப்போம் டா..அந்த குழந்தையின் சந்தோஷம் நமக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் கண்டிப்பா கிடைக்காது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.