(Reading time: 22 - 43 minutes)

ஆனா இதெல்லாம் எந்வித கட்டாயமும் இல்ல.நீ மொதல்ல நல்லா ரெஸ்ட் எடு..அப்பறம் பொறுமையா யோசிச்சு சொல்லு..”

“எவ்ளோ அழகா யோசிக்குற திவா நீ..இதுக்கு மேல எனக்கு தனியா யோசிக்க இந்த விஷயத்துல ஒண்ணுமேயில்ல..கண்டிப்பா நீ சொல்றபடியே செய்யலாம்.ஆனா பெண் குழந்தை தான் வேணும் திவா..உன் பொண்ணை நீ ராஜகுமாரி மாதிரி வளர்க்குறத ஆசை தீர பார்க்கணும்..”

காதல் பொங்க தன்னவளை இறுக அணைத்துக் கொண்டான்.அத்தனை மாதப் பிரிவும் ஒன்றுமில்லையென மாறிப் போனது இருவருக்கும்.காதல் காமம் அன்பு பாசம் அனைத்தையும் தாண்டிய ஒரு வித உணர்வு இருவருக்குள்ளும் நிறைந்திருந்தது.

ஒரு மாதத்திற்குப் பின்,

“வெண்பா கண்ணு பாப்பா அழறா பாரு..நா இதோ கஞ்சி எடுத்துட்டு வந்துட்டே இருக்கேன்.சீக்கிரம் வாம்மா..”

குளியலறையிலிருந்து வேகமாய் தலைக்கு துண்டை கட்டியவாறு வந்தவள் கட்டிலில் இருந்த ஒரு வயது மகளை கையில் ஏந்திக் கொண்டாள்.

“அம்மு குட்டி அம்மா வந்துட்டேன் டா..அழாதீங்க..பாட்டி உனக்கு புவா எடூத்துட்டு ஓடி வராங்க..சமத்துல..”

சிந்தாம்மா அதற்குள் கஞ்சியோடு ஓடி வந்தார்.வெண்பா தன் செல்ல ரோநிகாவை மடியில் எடூத்து வைத்து அதை ஊட்ட ஆரம்பிக்க பாதி சாப்பிட்ட போதே தூக்கத்தில் கண்ணயர்ந்து விட்டாள் அந்த செல்ல தேவதை..

சிந்தாம்மா அவளை தன் கையில் ஏந்தி கொண்டார்.”நா அங்க போட்டுக்குறேன் கண்ணு..நீ பொறுமையா ரெடி ஆகு திவா வந்தவுடனே மூணு பேருமா கோவிலுக்கு போய்ட்டு வந்துருங்க”,என்றவாறு வெளியே சென்றார்.

அதன்பின் அலமாரியில் இருந்து திவாவின் விருப்பமான புடவையை எடுத்துக் கட்ட ஆரம்பித்தாள்.சில நிமிடத்திலேயே உள்ளே வந்தவன் பின்னிருந்து தன்னவளை இறுக்கிக் கொள்ள வெண்பாவோ வேகமாய் விலகி நின்றாள்.

“ஐயோ என்ன திவா நீங்க..சிந்தாம்மா வந்துர போறாங்க..”

“அட என் பிரின்ஸஸ் வந்தப்பறம் கண்ணம்மா ரொம்ப தான் வெட்கப்படுறாளே..என்ன கண்டுக்குறதே இல்ல..”

“ம்ம் ஆமா ஆமா கண்டுக்காம தான் இருக்கா..”,என்றவளுக்கு குரல் உள்ளேயே போயிருந்தது.

அவன்புறம் திரும்பி அவன் மார் சாய்ந்து கொண்டவள்,”நவ் லைஃப் இஸ் சோ ப்யூட்டிபுல் திவா..குட்டிம்மாவ பார்க்க பார்க்க மனசு நிறைஞ்சு போகுது..இத்தனை அழகான குழந்தையை அநாதையா விடுறதுக்கு எப்படி தான்…”

“கண்ணம்மா…இப்போ இவ நம்ம பொண்ணு..வாழ்க்கை மொத்தத்துக்கும் நமக்கே நமக்கான சொந்தம்..வேற எந்த சிந்தனையும் உனக்கு வரக் கூடாது..புரியுதா..”

அந்த பேச்சை மாற்ற விரும்பியவளாய்,”புரியுது புருஷா..வர வர நீங்க தான் பிரின்சஸ் பிரின்சஸ்னு என்னை டீல்ல விடுறீங்க..”

“அப்படியா அப்போ நேத்து நைட் பிரின்சஸ் தொட்டில்ல தூங்கினப்பறம் இவ்ளோ பெரிய பெட் இருந்தும் என் மேல இறுக்கிப் பிடிச்சு தூங்கினது யாரு கண்ணம்மா..உனக்கு தெரியுமா..”

“ஐயோ திவா மானத்தை வாங்காதீங்க..நா போறேன்”,என்றவளைப் பிடித்து சுவரோடு நிறுத்தியவன் ஒரு வார்த்தையும் உதிர்க்காமல் அவள் விழி நோக்கி நிற்க அதன் அர்த்தம் உணர்ந்து தன் கரம் கொண்டு அவன் விழி மூடியவள் தன்னிதழை அவனோடு சேர்த்திருந்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவனிடமிருந்து தன்னை விடுவித்த நொடி அவள் விழி கூறும் பாஷை அவன் உணர்ந்தவனாய் சற்றே சிரித்தவாறு,

நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்;

நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்;

திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்;

சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்;

பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,

பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை;

சிரித்த ஒலியினிலுன் கைவிலக்கியே,

திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன் என் கண்ணம்மா!!!”,

நிதானமாய் கூறி முடிக்க அவன் சட்டையை பற்றி இன்னும் தன்மேல் சாய்த்தவள் இந்த கண்ணம்மா வா இருக்குறதுக்காகவே இன்னும் நூறு ஜென்மம் எடுக்கணும் திவா.ஆனா இந்த ஜென்மம் போல எந்த ஜென்மத்துலையும் உன்னை கஷ்டப்படுத்தாம உன் காதலை உருகி உருகி உயிர்க்குள் கலந்து வைக்கணும்..”.

நேசத்தால் எனை நெகிழ வைத்தவன் நீ

காதலால் எனை கைதியாக்கியவன் நீ

அன்பால் எனை அரவணைத்தவன் நீ

பாசத்தால் எனை பித்தாக்கியவனும் நீ

விழியின் வழி உயிர் கலப்பதால் தான் காதலும் கடவுளாகிறதோ!!”

அளவுகடந்த காதலையும் அன்பையும் தாண்டிய நம்பிக்கையே எந்த உறவையும் நம்மோடு பிணைத்து வைக்கும்.அதிலும் கணவன் மனைவி உறவென்பது நம்பிக்கையின் இலக்கணமே.அதே போன்று பிரிவு என்பது ஒருபோதும் எத்தகைய பிரச்சனைக்கும் நிச்சயம்  தீர்வாகாது.எத்தனை சோதனைகள் வந்தாலும் இருவருள் ஒருவராய் துணையிருந்து தோள் கொடுத்து அத்தனை சோதனைகளையும் சாதனையாக்குவதே திருமண பந்தத்திற்கு நாம் செய்யும் மரியாதை.

 

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

வழக்கம் போல் இந்த கதையையும் வெற்றிகரமாக முடிக்க உதவிய சில்சிக்கும் வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.😊😊அடுத்த வாரம் முதல் புது கதைகளத்தில் சந்திக்க வருகிறேன்.

முற்றும்!

Episode # 14

{kunena_discuss:1221}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.