(Reading time: 10 - 19 minutes)

முதலில் களம் இறங்கியவர்கள் சிறியவர்கள் என்பதாலும், சுடர் கொஞ்சம் கவனமாக பந்து போட்டு விளையாடியதாலும் அவளே மூன்று பேரை அவுட் செய்தாள்.  இதில் இரண்டு கேட்ச் வேறு பிடித்தாள். இப்படி ஒவ்வொரு முறையும் அவள் அவுட் செய்த காரணத்தால் மகிழை கட்டி அணைத்து தன் உற்சாகத்தை வெளிப்படுத்தினாள்.

“ஹாஹா இன்னைக்கு யார் முகத்துல முழிச்சேன்னு தெரியல.. இப்படி அதிர்ஷ்டம் கிடைக்குதே..” என்று மகி மனதிற்குள் நினைத்து மகிழ்ந்தான். அதற்கு ஒருவிதத்தில் அருள்மொழிக்கு அவன் நன்றி சொல்லிக் கொண்டான். இருந்தும் எதற்காக அமுதனுக்கு அவள் இன்னும் பேட் செய்ய வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் சிந்தித்தான்.

தனக்கு வாய்ப்பு கொடுக்காததால் விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அமுதனின் பார்வையும் மகி,சுடர் மீது தான் இருந்தது. அவளுக்கு விளையாடத் தெரியாது என்று ஒதுக்காமல், அவளுக்கு சொல்லிக் கொடுத்து அவளை ஊக்கப்படுத்தி அதில்  இன்பம் கண்ட மகிழ்வேந்தனை அமுதனுக்கு மிகவுமே பிடித்திருந்தது.

நல்லவேளை இன்று பெரியவர்கள் யாரும் விளையாட்டை பார்க்க வரவில்லை. பாட்டிக்கு மூட்டுவலி என்று ஓய்வு எடுத்துக் கொள்ள, கலையும் பூங்கொடியும் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். புகழும் ஒரு வேலையாக வெளியில் சென்றிருந்தார்.  அப்படி அவர்கள் இருந்திருந்தால் பாட்டி சுடர் செய்த காரியத்தை பார்த்து கண்டிப்பாக கோபப்பட்டிருப்பார். மற்றவர்கள் இதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லையென்றாலும் இப்படி கட்டி அணைப்பது எல்லாம் பெண் பிள்ளைகள் செய்யக் கூடாது என்று அறிவுரை வழங்கியிருப்பர்.

பொதுவாக மகியே இதை சுடரொளிக்கு சொல்லியிருப்பான் தான், ஆனால் அமுதன் இருந்தும் அவள் தன்னுடனே இருப்பதை மகி தவறவிட விரும்பவில்லை. ஏதோ ஒருவிதத்தில் சுடரின் நெருக்கத்தை அவன் விரும்பினான். அமுதனை தவிர மற்றவர்களுக்கு விளையாட்டில் கவனம் இருந்ததால் இது பெரிதாக தெரியவில்லை.

மகியின் குழு அருள்மொழியின் குழுவில் உள்ளவர்களை ஓரளவுக்கு அவுட் செய்திருக்க, இப்போது இலக்கியா, அருள்மொழி, அமுதன் மூன்றுப்பேர் மட்டுமே மிஞ்சியிருந்தனர்.

இப்போதும் இலக்கியாவுடன் ஆடிய நபர் அவுட் ஆனதால் அருள்மொழி விளையாட வந்தாள்.

“ஹே சார்லஸ்க்கு இப்பயாச்சும் சான்ஸ் கொடுக்கலாமில்ல மச்சி.. இப்போ பார் நம்ம தொடர்ந்து அவுட் ஆயிட்டே இருக்கோம்..” என்று இலக்கியா சொல்ல,

“எப்படியோ அவனும் அவுட் தான் ஆகப்போறான்.. அவனுக்கெல்லாம் என்னடி கிரிக்கெட் தெரியும்?” என்று அருள் கேட்டாள்.

“ஆமா நாம இந்தியன் வுமன்ஸ் டீம்ல இருக்கோம்.. அப்படியே சூப்பரா விளையாடுவோம் பாரு.. நாமளே இப்போ தானடி விளையாட கத்துக்கிட்டோம்.. இதோ 2,3 முறை தான் ஆடியிருக்கா.. ஆனா சுடர் இன்னைக்கு எப்படி பௌளிங் செஞ்சா பாரு.. என்னத்தான் சார்லஸை உனக்கு பிடிக்கலன்னாலும், இப்போ அவர் நம்ம வீட்டுக்கு வந்த கெஸ்ட்.. அதனால சார்லஸ்க்கு சான்ஸ் கொடு.. இல்லன்னா இன்சல்ட் செஞ்ச மாதிரி ஆயிடும்..” என்று இலக்கியா கூறியதற்கு,

“இருடி நாம விளையாட வந்துட்டோம் இல்ல.. யாராச்சும் அவுட் ஆனா அப்போ அவன் வந்து தானே ஆடணும்..” என்றுக் கூறினாள்.

அவள் சொன்னது போலவே இலக்கியா அவுட் ஆகவும் அடுத்து அமுதன் ஆட வந்தான். “எனக்கு இப்போ தான் இந்த ஆட்டம் செம இன்ரஸ்டிங்கா இருக்கப் போவதா தோனுது.. அதுவும் உன்னோட ஆடப் போறத நினைச்சா.. செம த்ரில்லா இருக்கப் போகிறது..” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டுச் சென்றான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அடுத்த வந்த சிறிது நேரத்திற்கு அமுதனின் பேட் மட்டுமே பேசிக் கொண்டிருந்தது. அருள்மொழிக்கு விளையாட வாய்ப்பே கொடுக்காதபடி அவன் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தான். போட்ட பந்துக்களையெல்லாம் 4 ரன்கள், 6 ரன்களாக குவித்துக் கொண்டிருக்க, அருள்மொழியே அவனை வாய் பிளந்து பார்க்கும்படி ஆகிற்று,

மகிழ்வேந்தனே மனம் உவந்து அமுதனை பாடராட்டினான். சுடரின் பந்துகளை லாவகமாக விளையாடி அவன் ரன் குவித்ததால் அவள் அவ்வப்போது அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

அடுத்து அருள்மொழி குழு பந்து போடும் முறை வர, இந்த முறை அமைதியாகவே அருள் அமுதனுக்கு அடிக்கடி வாய்ப்பு கொடுத்தாள். பேட் செய்வதில் மட்டுமல்ல, பந்து போடுவதிலும் அமுதன் சிறப்பாகச் செய்ய அருள்மொழி குழு தான் வெற்றியை தட்டிச் சென்றது.

அமுதன் கல்லூரியில் படிக்கும் போதே கிரிக்கெட் குழுவில் இருந்திருக்கிறான் என்ற தகவலை சுடர் பிறகு தான் கூறினாள். கிரிக்கெட்டை ஆரவமாக விளையாடும் சிறுவர்கள் இப்போது அமுதனிடம் விளையாட்டில் உள்ள சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருந்தனர்.

“முன்னவே சான்ஸ் கொடுத்திருந்துருக்கலாமில்ல.. இப்போ பாரு..” என்று இலக்கியா சொல்லவும்,

“அப்புறம் இன்னைக்கு மேட்ச் ஃபுல்லா அமுதன் விளையடியே முடிஞ்சிருக்கும்.. இப்போ பார் எல்லோருக்கும் சான்ஸ் கிடைச்சதில்ல..” என்று அருள் சமாளித்தாள்.

“உன்னைப்போல ஒரு கேப்டன் நம்ம இந்தியன் டீம்க்கு இருந்தா நாம மட்டும் தான் கப்பா வாங்கி குவிச்சிருப்போம் மச்சி..” என்று இலக்கியா சொல்லி கேலி செய்ய, அருள் செல்லமாய் அவளை அடித்தாள்.

“என்னை மாதிரி ஆடத் தெரியாத ஆளை கூட வச்சிக்கிட்டு விளையாடினதால  நம்ம டீம் தோத்து போச்சுல்ல மகிழ்..” என்று சுடர் மகியிடம் கூற,

“அதனால என்ன? இதெல்லாம் விளையாட்டுல சகஜம் தானே, உனக்கு அமுதன் சூப்பரா கிரிக்கெட் விளையாடுவான்னு தெரிஞ்சும் நீ என்னோட டீம்ல விளையாடப் போறேன்னு வந்தல்ல.. அதுவே எனக்கு சந்தோஷமா இருக்கு..” என்று கூறினான்.

மொத்தத்தில் அந்த நாள் அவர்களுக்கு மகிச்சியுடனே கழிந்தது. அமுதன் அருள்மொழியை சாதாரணமாக சீண்டி பார்க்க மட்டுமே குறுஞ்செய்தி அனுப்பி விளையாடினான். அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க சொல்லாமல் வீட்டுக்கும் வந்தான்.

மற்றப்படி மகிக்கு சுடரை திருமணம் செய்வதை பற்றி யாரிடம் பேசுவது? என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டிருந்தான். திரும்ப லண்டன் செல்வதற்குள் சுடர் பிரச்சனையை தீர்த்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

அவனாக யோசித்து செய்திருந்தாலே சுமூகமாகவே ஏதாவது செய்திருப்பான். ஆனால் அதற்குள் பிரச்சனை மீண்டும் கலையரசியின் உறவுகளிலிருந்து வர, அதை எப்படி கையாள என்று தெரியாமல், சுடரொளியும் அமுதனும் ஏதோ செய்ய போய், அது என்னவாகவோ முடிந்தது. அதில் முற்றிலும் உடைந்துப் போனது அருள்மொழி மட்டும் தான்..

உறவு வளரும்...

Episode # 37

Episode # 39

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.