(Reading time: 40 - 79 minutes)

கீதாவிடம் சுவாதியை அறைக்கு அழைத்து சென்று முகம் கழுவி வாருங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டே ரெஸ்ட் எடுக்கட்டும் என்றார். இவ்வளவு நேரமும் இவர்களிடம் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தவள் மூவரும் தன்னை ஆராய்ச்சியாக பார்த்ததை கவனிக்கவில்லை. கீதாவிடம் வள்ளி சொல்லியவுடன் எழுந்து வந்த கீதா அவளை தொட்டு உளுக்கும் வரை யோசனையிலேயே இருந்தாள்.

என்னடி யோசனை எத்தனை முறை கூப்பிடுவது வா போய் ரெபிரஸ் ஆகி வரலாம் என்றவளுடன் அமைதியாக சென்றாள்.

ஒருவழியாக அனைவரும் சாப்பிட வந்து அமர்ந்தனர். ஆனால் அப்போதும் சுவாதி எதுவும் பேசாமல் தீவிர ஆலோசனையில் இருக்க பெரியவர்கள் இருவரும் இவளின் முகம் பார்த்தாள் பிரச்சனை பெரிது என்று தெரிகிறது. இவள் அக்கா அம்மா எங்கே எதற்கும் இதுவரை வாய் திறந்து பதில் சொல்லவில்லை என்ற எண்ணத்துடன் சாப்பட்டு முடித்தார்கள்.

சாப்பிட்டு முடித்தவுடன் வள்ளி அனைத்தையும் எடுத்து வைக்க சுவாதி அவருக்கு உதவினாள். வள்ளி அவளை பயணம் செய்த கலைப்பு நீங்க உறங்க சொல்ல அவளோ பிடிவாதமாக எல்லா வேளையும் செய்தாள், அனைவரும் ஓய்வாக ஹால் சோபாவில் அமர சொல்வதற்க்கான நேரம் வந்ததை உணர்ந்தவள். அனைவரிடமும் சொல்ல தயாரானாள். அம்மா அப்பா நீங்கள் வந்ததில் இருந்து ஒரு கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தீர்களே அதற்கான பதில் அம்மா அக்கா இருவருமே உயிருடன் இல்லை.

சுவாதியின் குரல் மரத்து எந்த உணர்ச்சியும் காட்டாததாக இருந்தது. தன் வாழ்வில் நடந்த அனைத்து கஷ்டங்களையும் சொன்னவள், கைகளில் முகம் பதித்து அழ ஆரம்பித்தாள். சுவாதி கூறியதை கேட்ட அனைவரும் திகைப்பில் இருந்தனர். அவர்களின் முகத்தை நிமிர்ந்து பார்கும் திறன் அற்றவளாக,தான் கர்ப்பமாக இருப்பதை கூறினாள்,குரலில் சிறு தடுமாற்றத்துடன்.

மூவரும் அதிர்ந்து தன்னை பார்பதை உணர்ந்தவள். தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் குழந்தையை பற்றிய விவரங்களை பேசவோ நினைக்கவோ எனக்கு பிடிக்கவில்லை என்று நிதானமாகவும் தெளிவாகவும் கூறினாள்.

கீதாவோ தன் தோழி எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறாள்.இருந்தாலும் அனைத்தையும் தைரியமாக எதிர் கொண்டு சமாளிக்கும் திறமையும் தைரியமும் அவளுக்கு இருக்கிறது என்ற மெச்சிதலுடன் பார்த்தாலும் பத்து வருட நட்பின் மூலம் இன்னும் ஏதோ நடந்திருக்கிறது இவள் நம்மிடம் மறைக்கிறாள் அனேகமாக அது குழந்தையின தந்தை பற்றிய விசயமாக இருக்கும் என்பது வரை ஊகித்தாள்.

பெரியவர்களுக்கு எப்படி இவள் வாழ்வை சரி செய்வது,இதில் குழந்தையை எப்படி தனியாக வளர்பாள் என்ற எண்ணம் இருந்தாலும் குழந்தையை பற்றிய பேச்சில் அவளின் குரல் மாறுபாட்டை அறிந்தவர்கள் என்பதால் அமைதியாக இருந்தனர்.

நான் பி.ஈ கம்பியூட்டர் முடித்திருக்கிறேன்.வேலைக்கு அப்ளை செய்து இண்டர்வியூவும் ஆன்லைனில் முடித்துவிட்டேன். சென்னையில் உள்ள பிரான்ஜின் திருச்சி கிளைக்கு கேட்டு இருந்தேன்,அதனால் கொஞ்சம் காத்திருக்க சொன்னார்கள். இப்போது நாளை மறுநாள் வேலையில் சேர சொல்லி ஈ மெயில் அனுப்பினார்கள்.இவள் சொல்வதை கேட்டு அனைவரும் யோசனையாக பார்த்தனர் அவர்களின் பார்வையே இது எல்லாம் எப்போது நடந்தது என்று கேட்பது போல் இருக்க அம்மா இறந்த உடனே அப்ளை செய்துவிட்டேன்.சென்னையில் உள்ள ஆபிஸ்க்கு வர சொன்னார்கள் நான் அங்கு வேண்டாம் என்று சொல்லி இருந்தேன் அதனால் இந்த ஒரு மாத தாமதம் என்றாள்.

கீதாவோ வேலை கிடைத்தவுடன் அங்கிருந்து வராமல் இவ்வளவு நாளும் ஏன் அந்த நரகத்தில் இருந்தாய் என்றாள் கோபமாக.சென்னையில் வேளை செய்ய எனக்கு பிடிக்கவில்லை என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டாள்.ராகவை பார்த்த சுவாதி அப்பா எனக்கு ஒரு உதவி மட்டும் செய்ய முடியுமாப்பா என்றாள்.

ராகவோ என்னமா நீ இவ்வளவு நாள் அப்பா என்றதெல்லாம் வாய் வார்த்தைக்குதான என்ன செய்ய வேண்டும் என்று சொல் என்றவரை கூர்மையாக பார்த்தவாரே எனக்கு தனி வீடு ஒன்று பார்த்து தர வேண்டும் என்று அவள் சொல்லி முடிக்கும் முன் எதற்கு என்ற கீதா வள்ளியின் குரலில் அவர்களை பார்த்து உங்களுக்கு என்னால் எந்த சிரமமும் வேண்டாம் அம்மா என்று பிடிவாதமாக கூறவும் தாய் மகள் இருவரும் அமைதி ஆகினர்.

ராகவன் சிறிது நேரம் யோசித்தவர்.சரிமா,உன் விருப்பத்திற்கு நான் சம்மதிக்கறேன்.ஆனால் நீ நான் சொல்வதற்கு சம்மதிக்க வேண்டும். என்றவரை பார்த்த சுவாதி சம்மதமாக தலையை அசைக்க கர்ப்பமாக இருக்கும் பெண்ணை தனியாக விடுவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை அதனால் மாடியில் இருக்கும் வீட்டில் நீ இருந்து கொள் முதலில் வாடகைக்கு இருந்தவர்கள் காலி செய்துவிட்டார்கள்,நீ அங்கு இருந்தாள் எங்களுக்கும் நீ கண் முன் இருக்கிறாய் என்று தைரியமாக இருக்கும்,நாளை குழந்தை பிறந்தாள் பார்த்து கொள்ள வசதியாக இருக்கும் என்று மறுக்க வழி இல்லாமல் கூறினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.