(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 37 - தேவி

Kaathalana nesamo

பரி சொன்னதைக் கேட்ட ஷ்யாமிற்கு மிகப் பெரிய அதிர்ச்சியே. மித்ராவின் இயல்பு தெரிந்தவன். இதுவரை அவள் துணையில்லாமல் எங்கும் சென்றது கிடையாது. கார் டிரைவிங் கற்றுக் கொண்ட போதும், அவளின் அம்மா வீட்டிற்கு கூட ஷ்யாம் வராத நாட்களில் மைதிலியோ, சுமித்ராவோ இல்லாமல் செல்ல மாட்டாள்.

அப்படிப் பட்டவள் இன்றைக்குத் தனியாக  காரை எடுத்துக் கொண்டு போயிருக்கிறாள் என்றால், அவளின் கோபம் அவனை பயமுறுத்தியது.

அத்தை வீட்டிற்கு அவள் செல்லவில்லை என்று தெரியவும், அவனின் இதயம் பட படவென்று அடித்துக் கொண்டது. அவள் அங்கே போகவில்லையா, இல்லை போகும் வழியில் எங்கும் விபத்தா, என்று கலங்கிப் போனான். மீண்டும் அவள் செல் முயற்சிக்க, சுவிட்ச் ஆப் என்றே வந்தது.

ஷ்யாமிற்கு சற்று நேரம் மூளை வேலையே செய்யவில்லை. அவளை எப்படித் தேடுவது என்று கூட புரியமால் திகைத்துப் போயிருந்தான்.

சாலையில் போகும் மற்ற வண்டிகளின் சத்தம் உரக்க கேட்ட பின்பே, தன்னை ஒருநிலைப் படுத்திக் கொண்டவன், சிந்திக்க ஆரம்பித்தான்.

அப்போது ஒரு போன் கால் வர , எடுக்க மனமில்லாமல் இருந்தவன், ஏதோ தோன்றவே எடுத்துப் பேசினான். அங்கே எதிர்முனையில் பேசியதைக் கேட்டவன், தேங்க் காட் என்று கூறிக் கொண்டு இதோ வருவதாகக் கூறினான்.

எதிர்முனையில் பேசியது மித்ராவிற்காக அவன் கவுன்செல்லிங் சென்று கொண்டு இருக்கும் மருத்துவமனை வரவேற்பு பெண்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அந்த பெண் பேசியது மீண்டும் அவனுக்குள் ஓடியது.

“ஹலோ” என இவன் கூறவும்,

“சார். மிஸ்டர் ஷ்யாம் தானே?”

“எஸ். நீங்க?”

“சார், “ மருத்துவமனை பெயர் சொல்லி “ அங்கிருந்து ரிசெப்ஷனிஸ்ட் பேசறேன். மிசர்ஸ் மித்ரா ஷ்யாம் வந்து இருந்தாங்க. டாக்டர் பார்த்துட்டு போகும் போது அவங்க ரிபோர்ட்ஸ் விட்டுட்டுப் போயிட்டாங்க. அவங்க போன் சுவிட்ச்ஆப் ஆயிருக்கு. அதான் உங்க நம்பர்க்கு கால் பண்ணினேன்” என்று கூறவும்,

அவன் கடவுளே என்று மகிழ்ந்தான். அவள் அங்கே சென்று திரும்பினாலும், இல்லை அங்கிருந்து அத்தை வீட்டிற்கு சென்று இருந்தாலும் அவளைப் பார்த்து விடலாம் என்று எண்ணி, போனில் பேசியவரிடம் அவன் நேரில் வருவதாகக் கூறினான்.

அவளைப் பிடிக்கும் எண்ணத்தில் வேகமாகவே கார் ஓட்டினான். அவனே ரேசர். பின் வேகத்திற்கு கேட்கவா வேண்டும். அவனுக்கு அடிபட்டப் பின், அதிலும் மித்ராவின் கலக்கத்தைப் பார்த்து விட்டு தன் வேகத்தை வெகுவாகக் குறைத்து இருந்தான் ஷ்யாம்.

இன்றைக்குப் பழைய வேகத்தில் ஒட்டியவன், அந்த மருத்துவமனை பார்கிங்கில் நிறுத்தும்போதே, மித்ராவின் காரை கண்டு விட்டான். ரிசெப்ஷனிஸ்ட் சொன்னபடிப் பார்த்தால் இந்நேரம் இவள் கிளம்பி இருக்க வேண்டுமே? ஏன் இங்கே நிற்கிறாள் என்று எண்ணிக் கொண்டு, காரின் அருகில் சென்றான்.

ஒரு தூணை ஒட்டி கார் இருக்கவே, ஷ்யாம் அந்தப் பக்கமாக வந்தவன், மித்ரா காரின் அருகில் யாரிடமோ பேசிக் கொண்டு இருக்கவும் சற்று நின்றான். யார் என்று எட்டிப் பார்த்து விட்டு, இவன் ஏன் மிதுவோடு பேசிக் கொண்டு இருக்கிறான் என்று எண்ணினான்.

இன்னும் சற்று அருகில் போக, அவர்கள் பேசுவது கேட்டு ஷ்யாமிற்கு கோபம் வந்தது. அவன் கேட்டது

“என்ன மித்ரா, அன்றைக்கு நானும் என் அம்மாவும் உன்னை நோயாளி , எங்களின் தலையில் கட்டப் பார்கிறீர்களா என்று கேட்டதற்கு குடும்பமே சேர்ந்து எங்களை விரட்டினீங்க. இன்றைக்கு நீயே இந்த மருத்தவமனைக்கு வந்துருக்க. அதிலும் யாரும் துணை இல்லாம? நீங்கதான் அனிச்சம் பூவாச்சே. உங்களை அப்படியே கண்ணுலே வச்சு பார்துக்கிறதா எங்கிட்ட சொல்லிட்டு இருந்த? இப்போ என்ன அடிச்சு துரத்தி விட்டுட்டாங்களா?”

அவனின் பேச்சைக் கேட்ட ஷ்யாம் அவனை அடிப்பதற்காக வேகமாக அடி எடுத்து வைத்தவன், மித்ரா பேச்சைக் கேட்டுச் சற்று நின்றான்.

“மிஸ்டர்.சரவணன் உங்களுக்கு இதுதான் மரியாதை. இன்னொரு முறை என் குடும்பத்தைப் பற்றிப் பேசினீங்க , போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் ஜாக்கிரதை”

என்ன மிரட்டலா?

 “நான் ஏன் உங்களை மிரட்டணும்? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

“ஹ. என்னோட கேள்விக்கு பதில் சொல்ல முடியலை. அதான் மிரட்டுற”

“என்ன கேள்வி?

“அன்னைக்கு உன் அத்தான் அந்த சேகர் கூட மித்ராவ செக்கப் பன்னன்னும்டா. அதுக்கு முன்னாலே அவளை என் மனைவியா மாத்திக்கிறது சரியா வராதுடான்னு சொன்னானே. அதுக்கு என்ன அர்த்தம்? நீ குடும்ப வாழ்க்கைக்கு சரியா வரமாட்டன்னு தானே அவனும் நினைக்கிறான்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.