(Reading time: 13 - 25 minutes)

அப்போது காரில் பாடல் போட,

“இது மௌனமான நேரம் .. இள மனதில் என்ன பாரம்”

என்று பாடியது. அந்தப் பாட்டு இருவரையும் ஏதோ செய்தது. ஓரக் கண்ணால் இருவரும் பார்த்துக் கொண்டார்கள். ஷ்யாமின் கைகள் ஸ்டீயரிங்கில் தாளம் போட, மித்ராவோ ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

வீட்டிற்குள் நுழையும் போதே அங்கே ஒரு பஞ்சாயத்து நடப்பதற்கு உண்டான அறிகுறி தோன்றியது.

வீட்டினுள் சபரி அத்தையும், மித்ராவின் பாட்டியும் இருக்க, ஷ்யாம் உள்ளே யோசனையோடு சென்றான்.

அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்ததும் அந்த இடம் அமைதி ஆகியது.

மைதிலி தான் வேகமாக முன்னே வந்து

“ஷ்யாம், மித்ரா சபரி வீட்டிற்குப் போகவில்லையாமே ? எங்கே அவளைப் பார்த்தாய்?” என்று கேட்க,

ராம் “மைதிலி , சும்மா இரு. அவர்கள் என்ன குழந்தைகளா? எல்லோரும் ஏன் பதறுகிறீர்கள்? “ என்று கேட்க, மைதிலி பின்னடைந்தாள்.

மித்ராவிற்குப் புரிந்தது. அத்தையிடம் நாம் அம்மா வீட்டிற்குப் போவதாகச் சொன்னதும், அம்மா இங்கே வந்து நிற்பதும் அவர்களைக் கவலவரப் படுத்தி இருக்கிறது என்று புரிந்து கொண்டாள். இப்போது தான் தான் சமாளிக்க வேண்டும் என்று உணர்ந்து,

“அம்மா, பாட்டி நீங்க எப்போ வந்தீங்க? “ என்று கேட்டாள்.

சபரி பதில் சொல்லும் முன் பாட்டி, “முதலில் நீ பதில் சொல். உன் மாமியாரிடம் அம்மா வீட்டிற்குப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறாய். உன் பிளான் மாறி விட்டது என்றால், அதை அவங்க கிட்டே சொல்ல வேண்டாமா? உன் போனும் வேலை செய்யலை. நாங்க எல்லாரும் என்னனு நினைக்கிறது?

என்று கேட்கவே, அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று திணறிக் கொண்டு இருக்கும் போது ஷ்யாம்

“பாட்டி, அவள் உங்கள் வீட்டிற்குப் போகும் வழியில், கோவிலுக்குப் போயிருக்கிறாள். அங்கிருந்து வரும்போது நான் அவளைப் பார்த்துவிட்டேன். வெளியில் வந்து ரொம்ப நாள் ஆகி விட்டதால், சும்மா ஒரு லாங் டிரைவ் போகலாமே என்று போனோம். கோவிலில் சுவிட்ச் ஆப் பண்ணியதை மறந்து விட்டாள்.”

என்று சமாளித்தான்.

மைதிலியும், ராமும் இருவரையும் பார்த்துவிட்டு, ஒன்றும் சொல்லாமல் நிற்க,

சபரி “என்ன ஷ்யாம்.? நீயாவது அண்ணியிடம் சொல்லியிருக்கலாமே. உன்னிடம் பேசியதும், அத்தையும், நானும் வேறு ஒரு வேலையாக இந்தப் பக்கம் வந்தோம். அப்படியே உங்கள் இருவரையும் பார்த்து விட்டுப் போக வந்தால், அண்ணி மித்ரா அங்கேதானே வந்தாள் என்கிறார்கள். வீட்டிற்கு போன் செய்தால் யாரும் வரவில்லை என்றார்கள். எங்களுக்கு ஒரே பயமாகப் போய் விட்டது. அதிலும் மித்ரா தனியாக காரில் சென்று இருக்கிறாள் என்றதும், வேறு எதுவுமோ என்று நடுங்கி விட்டோம். உனக்குத் தெரியுமா? சொன்னால் நீ பதட்டப் படுவாயே , என்ன செய்யலாம் என்று பேசிக் கொண்டு இருக்கும்போது நீங்கள் வந்து விட்டீர்கள்.” என, ஷ்யாமிற்குப் புரிந்தது.

அவனும் சற்று நேரம் இதே நடுக்கம் கொண்டவன் தானே. ஒன்றும் பதில் சொல்லாமல் மெளனமாக இருக்க, மித்ரா,

“சாரிமா, நான்தான் பேச்சு சுவாரசியத்தில் அத்தான் வீட்டிற்குப் பேச வந்ததைத் தடுத்து விட்டேன். “ என்று கூறினாள்.

“என்னிடம் கேட்காதே. மைதிலி அண்ணியிடம் சொல்லு. அவர்கள் தான் மிகவும் பயந்து போயிருந்தார்கள்.”

“சாரி அத்தை. “ என்று கண்களால் கெஞ்சி மன்னிப்புக் கேட்கவும், மைதிலி

“சரி விடு மிது, இனிமேல் தகவல் சொல்லிவிடு” என்று மட்டும் கூறினாள்.

அதுவரை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்த சுமி,

“ஹப்ப.. உங்க வானத்தைப் போலே படம் ஒட்டி முடிச்சிட்டீங்களா? அம்மா மித்ரா மகாராணியாரே. எல்லோருக்கும் உணவிற்கு உத்தரவிடுங்கள் தாயே. உன்னைப் பற்றின கவலையில் இந்தக் குடும்பம், பாவப்பட்ட ஜீவனான என்னைக் கண்டுக்கவே இல்லை” என்று கூற, எல்லோரும் சற்று இலகுவான மனநிலைக்கு மாறினார்கள்.

சபரியும், பாட்டியும் கூடவே அங்கே உணவருந்தி விட்டுக் கிளம்பினார்கள். அவர்கள் கிளம்பவும், சுமித்ரா தன் அறைக்குச் சென்று விட, மித்ராவும், ஷ்யாமும் தங்கள் அறைக்குச் செல்லத் திரும்பினார்கள்.

மைதிலி “மிதுமா, உனக்கு எதுனாலும் நாங்க சப்போர்ட் பண்ணுவோம். எந்தக் கோபத்திலும் இப்படி சொல்லாமல் , கொள்ளாமல் எங்கியும் செல்லாதே” என்று கூற,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.