(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - என்னவளே - 17 - கோமதி சிதம்பரம்

ennavale

ரிஷி, க்ரிஷ்யிடம் போன்யில் கத்தி கொண்டு இருந்தான். 

அப்பொழுது, அவனை யாரோ தொடுவது போல உணர்ந்தவன். திரும்பி பார்க்க அங்கேயே கீதா நின்று கொண்டு இருந்தாள்.

என்ன ஆச்சு???? ஏன் இப்படி கத்துறிங்க.... எதாவது பிரச்சனையா????

ரிஷி ஒரு நிமிடம் ஆடி போய்விட்டான்.... யாரும் இருக்க கூடாது என்று தான் அவன் தோட்டத்திற்கு வந்து பேசினான்.

ஆனால், இப்படி கீதா வந்து நிற்பாள் என்று அவன்  கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

நல்ல வேலை கீதாவிற்கும் ஏதும் புரியவில்லை.... என்று பெருமூச்சு விட்டான்.

கீதாவிற்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசித்து கொண்டு இருந்தான்.

ரிஷி, ஏதும் பேசாமல் இருப்பதை கண்டவள்... அவனை நெருங்கினாள்...

அம்மா சொன்னாங்க... உங்களுக்கு  இப்ப எல்லாம் ஆபீஸ்ல  வேலை அதிகமுன்னு.... அதுக்குன்னு இவ்ளோ டென்ஷன் அவிங்களா....

நீங்க கத்துறது ஊருகேயே கேட்கும் போல... யார் மேல உங்களுக்கு இவ்ளோ கோபம்...  என்று காதலுடனும் அக்கறையுடனும் கேள்வி கேட்டாள்.

நல்ல வேலை ஊறுகேயே கேட்டது உனக்கு கேட்கலை என்று நினைத்து கொண்டான்.

கோபம் எல்லாம் ஒன்னும் இல்லை... நான் ஒரு ஒர்க் கொடுத்து இருந்தேன் அதை ஒழுங்கா செய்யாம கொஞ்சம் சொதப்பிட்டாங்க அதன் டென்ஷன் ஆகிட்டேன். அவோளோதான்.... வேற ஒன்னும் இல்லை.

உங்களுக்கு வேணுன்னு மத்தவங்க மேல கோபம் இல்லாம இருக்கலாம்.

ஆன, நான் உங்க மேல ரொம்ப கோபமா இருக்கேன் என்று கண்களை உருட்டி ரிஷியை இன்னும் நெருங்கி கூறினாள்.

நேராக, ரிஷியின் கண்களை பார்த்தவள்.... ரெண்டு வாரம் ஆச்சு... நீங்க என்னை வந்து பார்த்து அதும் ஒரேயே வீட்டுக்குள்ள இருந்துட்டு...

என்னை பார்க்காம கூட உங்களால இருக்க முடியுதா....  என்று கோபத்துடன் கேட்பதாக நினைத்து ரிஷியிடம் கொஞ்சி கேட்டு கொண்டு  இருந்தாள். 

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ரிஷி , இப்பொழுதுதான் கீதா தன்னுடன் நெருங்கி நின்று கொண்டு இருப்பதை உணர்ந்தான்.

அதும், இவ்ளோவு நெருக்கத்தில் கீதாவாக இன்றுதான் நெருங்கி நிற்கிறாள்.

இதற்கு எல்லாம் காரணம்.... அவளுக்கும் தனக்கும் நடக்க போகும்

திருமணம்.... அந்த துணிவில் தான் அவள் இப்படி தன்னை நெருங்கி நிற்கிறாள் என்று அவனுக்கு நன்றாக புரிந்தது....

ரெண்டு வாரம் அவளை நான் பார்க்கவில்லை என்று நினைத்து கொண்டு தன்னிடம் கேள்வி கேட்கிறாள்....

 ஆனால்,  தினமும் அவள்  உட்கொள்ளும்  மருந்தின் வீரியத்தில் கீதா உறங்கிய பின் அவளை,  அவளது அறையில் பார்க்காமல் ரிஷி இருந்தது இல்லை.

குழந்தை போல உறங்கி கொண்டு இருப்பவளை தான் ஏமாற்றி கொண்டு இருக்கிறோம் என்பதை நினைத்து வேதனை அடைவான்.

கீதா, உரிமையுடன் ரிஷியின் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

என்ன.... நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை... என்று கேட்டு கொண்டு இருக்கும் போதேயே ரிஷியின் போன் அடித்தது.

திரையில் க்ரிஷ் என்று வரவும் போன் யை ஆன்  செய்து காதில் வைத்தான்.

அண்ணா ... நீ ஏதும்  பேச வேண்டாம்... நான் சொல்றதை மட்டும் கேளு...

இப்ப அண்ணி உன்கிட்ட பேசுனது எல்லாம் நான் கேட்டுட்டு தான் இருந்தேன்...

பாவம் அவங்க .... உன்னை ரெண்டு வாரமா பார்க்காம ரொம்ப தவிச்சு போய்ட்டாங்க போல.....

எல்லாம் முடிவு பண்ணியாச்சு... இனி, எல்லாம் அதுபடிதான்  நடக்க போது... இப்ப  நீ அண்ணியா விட்டு விலகி இருக்கறதுனால ஏதும் மாறாது....

உன் கல்யாணத்துக்கு அப்புறம் வர போற பிரச்னையும் நீ சமாளிச்சு தான் ஆகணும்...

அண்ணிக்கு  எல்லா விஷயமும்  தெரிய வரும் போது அவங்க ரியாக்ஷன் என்னவா இருக்குனு யோசிச்சு பார்க்வேயே பயமா இருக்கு.

சோ, இப்ப இந்த நிமிஷத்தை அண்ணியோட சந்தோசமா இருக்க பாருங்க... பாவம் அவங்க நீங்க விலகி போய் அவங்கள இன்னும் கஷ்டப்படுத்தாதீங்க ப்ளீஸ்.......

நான் சொன்னது எல்லாம் உங்களுக்கு புரிஞ்சு இருக்குனு நினைக்குறேன்... நான் இங்க பார்த்துக்குறேன்.... அண்ணிகூட சந்தோசமா இருங்க.... நாளைக்கு function லா மீட் பண்ணலாம் ... பை என்று போன் யை வைத்தான்.

ரிஷி, குனிந்து கீதாவை பார்த்தான் ... அவள் இன்னும் அவனது மார்பில் தான் சாய்ந்து இருந்தாள்.

அவளது முகத்தில் எதோ ஒரு நிம்மதி தெரிந்தது.... கூடவேயே சந்தோஷமும் இருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தான் ... தோட்டத்தில் யாரும் இல்லை என்பதை உணர்ந்தவன் கீதாவின் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டான்...

கீதாவின் முகத்தை கைகளை ஏந்தினான் ... சாரி டா..... ஆபீஸ் டென்ஷன்ல மறந்துட்டேன் ..... என்று காதலுடன் கூறினான்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.