(Reading time: 10 - 19 minutes)

பரவ இல்லை ரிஷி என்று வெட்கத்துடன் கூறினாள்..... 

உங்க கிட்ட ஒன்னு காட்டணும்... என்கூட என் ரூம்க்கு வாங்க ப்ளீஸ்... என்று குழந்தை போல கெஞ்சினாள்....

ரிஷி ,  சிரித்து  சரி என்று தலை ஆட்டினான்.....

கீதா,  அவளது அறைக்கு செல்ல ரிஷியின் கையை பிடித்து இழுக்க.... 

ரிஷியோ .... மீண்டும் ஒரு முறை கீதாவை அணைத்து விட்டு அவளது தோளில் கை போட்டவாறு.... வீட்டிற்குள் சென்றான்.

தனது பழைய ரிஷி கிடைத்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் கீதாவும் அவனுடன்  ஒன்றி நடந்தாள்.

இருவரது காதல் காட்சிகளையும் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கோபி பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை அவர்கள் அறியவில்லை.

ஹேய்,  என்ன பார்த்தியா..... இந்த காதல் ஜோடியாதான் நீ பிரிக்க போற ... புரியுதா .... என்று கேட்டவாறு ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான்

புரிந்தது என்பது போல  நித்யா தலை ஆட்டினாள்.... ம்ம்ம் அது ... உள்ள போ .... என்று  விரட்டினான்......

விடிந்தது ................ரிஷி கீதாவின்  நிச்சயதார்த்தம் எந்த ஒரு தடையும் இன்றி அமைதியான முறையில் அழகாக நடந்து கொண்டு இருந்தது.

பெண்  மற்றும் மாப்பிளையை அழைத்து  வருவதற்கு  முன்பு செய்ய வேண்டிய  சடங்கினை ஐயர் செய்து கொண்டு இருந்தார். அவர்க்கு, உதவியாக பருவதம் அம்மாள்  இருந்தார்.

வீட்டிற்கு வரும் சொந்தங்களை வரவேற்கும் விதமாக சதாசிவம் வாசலாளில் நின்று கொண்டு இருந்தார்.

ஹலோ  சார்  .... எப்படி இருக்கீங்க .... என்று கேட்ட க்ரிஷ் யை சதாசிவம் கட்டி தழுவி  வரவேற்றார்.

என்னப்பா.... இப்பதான் உனக்கு எங்க ஞாபகம் வந்துச்சா.... படிச்சு முடிச்சதும் இங்க  இருந்த போனாயா....  அதோட உங்க அண்ணா கல்யாணத்துக்கு தான் வந்து இருக்க..... எங்களை  எல்லாம் சுத்தமா மறந்துட்டான்னு நினைக்குறேன்  ... என்று சிரித்து கொண்டேயே கேட்டார்.

அய்யோ  சார்.... நீங்களும்  அண்ணாவும் இல்லன்னா  நான் இப்ப எப்படி இருந்து இருப்பேன்னு நினைச்சு பார்க்கவேயே பயமா இருக்கு.... 

என்னோட  வேலை காரணமா தான் என்னால உங்களை  வந்து பார்க்க வர முடில.... மத்தபடி உங்களையும் அண்ணாவையும் ஒரு நாள் கூட நான் மறந்தது இல்ல... சார் என்று அடக்கத்துடன் கூறினான்.

சதாசிவம், பருவதம் அம்மாளிடம் க்ரிஷ் யை கூட்டி சென்றார்.... 

டேய்.... க்ரிஷ்....வாடா  ரிஷிக்கு துணை மாப்பிளை இல்லையேன்னு நினைச்சேன் வந்துட்டா... உன்கிட்ட நிறைய பேசணும் இப்ப டைம் இல்ல....  நீ போய் ரிஷியை ரெடி பண்ணி கூட்டிட்டு வாடா .... என்று பாசத்துடன் கூறினார்.

நான் இங்கதான் கொஞ்ச நாள் தங்க போறேன்.... ஸோ....நாம பொறுமையா பேசலாம் ஆண்ட்டி.....   நீங்க கல்யாண  வேலையை பாருங்க... நான் first அண்ணியை பார்த்துட்டு அப்புறம் அண்ணாவை ரெடி பண்ணி கூட்டிட்டு வரேன் .... சரியா....

தனது அண்ணியை முதல் முதலில் பார்க்க போகும் சந்தோஷத்தில் க்ரிஷ் வேகமாக நடந்தான்.... 

அப்பொழுது, தீடிர் என்று எதிரில் ஒரு பெண் வேகமாக ஓடி வந்து க்ரிஷ் யின் மோதி கீழயே விழுந்து விட்டாள்.

க்ரிஷ்ற்கு  ஒன்றும் புரியவில்லை .... யார் இவள்..... இவ்வளவு ஒல்லியாகவா  இருப்பாள் ... பாவம் என்று நினைத்தவன் அவளுக்கு கை கொடுத்து தூக்கி விட்டான்...

அப்பொழுது தான் பார்த்தான்  அவளது முகம் அழுது  வீங்கி இருந்தது. ஒரு வேலை அழுது கொண்டு வந்து தான் என் மீது மோதி விட்டாளோ.... ஏனோ,  அவள் மீது க்ரிஷ்ற்கு  கோபம் வரவில்லை. அவளை பார்க்க பாவமாக இருந்தது.

அடி ஏதும் படலையே... Are You  Ok ... என்று கேட்டான்.

ஏதும் பேசாமல் க்ரிஷ்யை அவள் பார்த்தாள்.  இல்லை முரைத்தாள்.

அவள் முறைப்பதை க்ரிஷ் உணரவில்லை....  என்னோட பெயர் க்ரிஷ்.... ரிஷி என்னோட அண்ணா தான்... நீங்க யாரு... பொண்ணு சைடு சொந்தமா..... என்று சிரித்த முகத்துடன் கேட்டான்....

அவனையே ... உற்று பார்த்தவள்... எருமை மாடு  என்று அவனுக்கு கேட்கும் விதத்தில் திட்டினாள்...

என்னது.... எருமைமாடா.... என்று அதிர்ச்சியுடன் கேட்டான் ....  அதற்குள் அவன் பின்னால் இருந்து நித்யா  என்று குரல் கொடுத்தவாறு கீதா வந்து கொண்டு இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.