(Reading time: 10 - 19 minutes)

ஹேய்... இங்க என்ன பண்ற....  ஒழுங்கா நான் கொடுத்த நகை எல்லாம் போட்டுக்கோ... என்று கூறியவாறு அவளது கையை பிடித்து இழுத்து அவளது அறைக்கு கூட்டி சென்றாள்.

அண்ணி... ஒரு நிமிஷம் என்று கீதாவை க்ரிஷ் வழிமறித்தான்...

யார் இவன்??? என்னை அண்ணி என்கிறான் என்ற யோசனையுடன் அவனை  பார்த்தாள்.

என்னோட நேம் க்ரிஷ். ரிஷி அண்ணாக்கு தம்பி மாதிரி... உங்களை பார்க்க தான் உங்க ரூம்க்கு வந்துட்டு இருந்தேன்...

நிங்களேயே வந்துட்டீங்க... அண்ணி சும்மா சொல்லக்கூடாது... இந்த புடவையில செம அழகா இருக்கீங்க... அண்ணா உங்க அழகுல மயங்கி கிழ விழாம இருந்த சரி என்று பெருமூச்சுடன் கூறினான்.

க்ரிஷ், உரிமையுடன் அண்ணி என்று அழைத்தது கீதாவிற்கு  பிடித்து இருந்தது.  

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

நானாவது இந்த புடவை நகை  எல்லாம் போட்டுத்தான் அழகா இருப்பேன் தம்பி ... உங்க அண்ணா நார்மல்  டிரஸ் போட்டாலே ரொம்ப கம்பிரமா அழகா தான் இருப்பார் என்று கூறினாள் .

உங்க அண்ணாவோட அழகுல  நான்தான் மயங்கி ஸ்டேஜ் லா  விழாம  இருக்கணும்....

ஓ.... எங்க அண்ணாவை விட்டு கொடுக்காம பேசுறிங்களாகுக்கும் ... ஓகே அண்ணி... நாம அப்புறம் நிறைய பேசலாம்...  நீங்க சீக்கிரம் கிளம்பி வாங்க.... 

நான் போய் அண்ணாவை கூட்டிட்டு வரேன். என்று கூறிவிட்டு  கீதாவின் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த நித்தியாவை ஒரு முறை பார்த்து விட்டு ரிஷியின்  அறைக்கு சென்றான்.

ரிஷியோ, தலையில் கைவைத்து உட்கார்ந்து இருந்தான். ரிஷியின். அறைக்குள் நுழைந்த க்ரிஷ்...

அண்ணா என்று அழைத்தவாறு அவனது கைகளை பிடித்து கொண்டான்.

பாட்டிக்கு இப்ப நல்ல இருக்காங்க... கொஞ்சம் மயக்கத்துல இருக்காங்க... டாக்டர் எதுக்கும் பயப்பட வேணான்னுனு சொல்லிட்டாரு....

நீ, இதை பத்தி நினைச்சுட்டு இருக்கமா... சந்தோசமா சிரிச்சுட்டு இரு ப்ளீஸ்... என்றான்.

நானும் அப்படி தாண்ட  இருக்க ஆசைப்படுறேன்... ஆனா, எனக்கு என்னமோ பயமா இருக்கு ... 

இந்த நிச்சயதார்த்தம் நல்லபடியா நடக்கணும். நான் கீதாவை ஏமாத்துறது தெரிஞ்ச அவ தாங்க மாட்ட  என்று வேதனையுடன் கூறினான்.

அண்ணா.. ப்ளீஸ் இப்பதான் அண்ணியா பார்த்துட்டு வரேன்... நீ போட்டோ லா காட்டுனதை விட நேர்ல ரொம்ப அழகா இருக்காங்க....

உனக்கும் அவங்களுக்கும் நடக்க போற நிச்சயதார்த்த நினைச்சு ரொம்ப சந்தோஷத்துல இருக்காங்க... ப்ளீஸ் ... நீ எல்லாத்தையும் மறந்துட்டு அவங்க கூட சந்தோசமா இரு அண்ணா.... 

நீ கஷ்டப்பட்டு அவங்களையும் கஷ்டப்படுத்தாத...  ரிஷியும் க்ரிஷ் கூறுவதை ஏற்று கொண்டான்.

க்ரிஷ் , ரிஷியை கை பிடித்து கூட்டி வந்து மனையில் உட்கார வைத்தான் . 

ரிஷி ஐயர் சொல்லும் அனைத்து மந்திரங்களையும் கூறி கொண்டு இருந்தான்.

அடுத்து, கீதாவை நித்யா கூட்டி வந்தாள். பார்ப்பதற்கு  தேவோலோக பெண் போல இருந்தாள். அவளது அழகில் மயங்கி ரிஷி  கீதாவை பார்த்து கொண்டு இருந்தான்.

பார்த்திங்களா... உங்க அழகுல அண்ணா மயங்கிட்டாரு என்ற பாவனையில் க்ரிஷ் கீதாவை பார்த்தான்.

வெட்கத்தில், கீதாவின் முகம் மேலும் சிவந்தது.

கீதாவை  பார்த்த பருவதம் அம்மாள் ஆனந்த அதிர்ச்சியடைந்தார்.... கீதா வந்து நிற்கும் கோலத்தை பார்த்த சிவகாமிக்கு பற்றி கொண்டு வந்தது.

இதுவரை, தான் பயந்து கொண்டு இருந்தது இன்று நடந்து விட்டதேயே என்ற எரிச்சலாளில் அங்கு இருந்து செல்ல நினைத்தார்.

சிவகாமி அம்மாவின் கையை பிடித்த கோபி.... அவருக்கு மட்டும் கேட்கும் விதமாய்  அக்கா கொஞ்சம்  பொறுத்துக்கோ... இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்க என்ன நடக்க போகுதுனு மட்டும் பாரு..... என்று கூறினான்.

தொடரும்

Episode # 16

Episode # 18

Go to Ennavale story main page

{kunena_discuss:1184}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.