(Reading time: 11 - 21 minutes)

“நீ சொல்லலனாலும் ஏதோ ஒரு வகையில கண்டிப்பா உங்க அம்மாக்கு விஷயம் போய் சேரும்.. யாரோ சொல்லி அவங்க தெரிஞ்சுக்கறத்தைவிட.. நீயே பக்குவமா சொல்லு அவங்ககிட்ட.. கண்டிப்பா தாங்கிக்க முடியாத விஷயம்தான்.. பட் சொல்லிடு.. அதான் நல்லது..”

“உங்க புருஷன் ஒரு கொலைகாரன்னு எப்படி நிஷா சொல்றது..??”

“நீதான் சொல்லனும் பிரஜி.. கண்டிப்பா கஷ்டம்தான்.. புரிஞ்சுக்க முடியுது.. உன்னை தயார் பண்ண டைம் எடுத்துக்கோ.. பட் சொல்லித்தான் ஆகனும்..”, அழுத்தமாக.. உனக்கு வேறு வழியே இல்லை என்பதுபோல்..

ஹ்ம் முணுமுணுப்பாய் சொன்னவன் அப்படியே கவினின் மடியில் சாய்ந்து கண்மூடிக்கொள்ள.. அவனது விரல்களை ஆதரவாகப் பற்றிக்கொண்டாள் நிஷா..!!

செம்பட்டி வழியாக மதுரைக்கு சீறிப்பாய்ந்துகொண்டிருந்தது கருப்பு நிற வெர்னா..!!

“நேத்து ராத்திரி கூடப் பேசினேன் செல்வி அவங்கக்கிட்ட.. நல்லா தெளிவாத்தான் பேசுனாங்க.. இப்ப என்னாச்சுன்னு ஒன்னும் புரியலையே..”, காரை செலுத்திக்கொண்டிருந்த செல்வியிடம் புலம்பிக்கொண்டே வந்தார் சமுத்திரா..

“சமூம்மா.. ஒன்னும் ஆகியிருக்காது அவங்களுக்கு.. வருத்தப்படாதீங்க..”, அவரை எப்படி சமாதப்படுத்துவதென்றே தெரியவில்லை செல்விக்கு..

அன்று மாலை விரைவாக வீடு திரும்பிய செல்வியை வரவேற்றத்து சமுத்திராவின் அழுத முகமே..!! எப்பொழுது அவரது அழுத முகத்தைப் பார்த்திருந்தவள் மீண்டும் இன்று அந்த முகத்தைக் காணவும் பதறிவிட்டது..!!

அவர் தனது அன்னைக்கு உடம்பு சரியில்லை என்றதும் எதைப்பற்றியும் யோசிக்காமல் கிளம்பிவிட்டாள் அவருடன்..!!

“எத்தனை வாட்டி அம்மாட்ட சொன்னேன் தெரியுமா.. இங்கயே திரும்பி வந்திருங்கன்னு.. கேக்கவே இல்லை.. இப்ப யாரு கஷ்டப்படறாங்களாம்..??”

மனதில் இருப்பதெல்லாம் வெளிவரட்டும் என்ற முடிவில் அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள் செல்வி..

“அவங்கதான் சொன்னாங்கனா எனக்கு புத்தி எங்க போச்சாம்..?? கைகாலைக் கட்டியாவது இங்க கூட்டிட்டு வந்திருக்கனும்தானே..?? அப்படியே எக்கேடோ கேட்டுப்போகட்டும்னு விட்டுட்டேன் போல..”

பரிதாமாகத்தான் தோன்றியது சமுவின் நிலை..!! கண்ணீருடன் வார்த்தைகளும் அருவியாய் பொழிந்துகொண்டிருந்தார்..!!

“உனக்கு ஒன்னு தெரியுமா.. எங்க அம்மாக்கு என் மேல ரொம்ப பாசம் அதிகம்.. வெளிப்படுத்தவே மாட்டாங்க அவங்க.. நான் கொஞ்சம் இருகிப்போனதால அவ்ளோ பயம் என்க்கிட்ட.. எந்த தகவலா இருந்தாலும் மொழி மூலமாத்தான் எனக்கு வந்து சேரும்.. இரண்டு மூணு வருஷமாத்தான் எனக்கூட அவங்க இப்படி சகஜமா பேசிட்டு இருக்காங்க..”, என்றவரை இடையிடுவதுபோல் ஒலித்தது செல்வியின் தொலைப்பேசி..!!

சக்திவேல் தான் அழைத்திருந்தார்..!!

“ஹெலோ சார் சொல்லுங்க..”

“....................”

“எஸ் சார்.. கொஞ்சம் பெர்சனல் விஷயம்.. மதுரைக்குப் போயிட்டு இருக்கேன்..”

“....................”

“நோ ப்ராப்ளெம் சார்.. என்ன விஷயம்ன்னு சொல்லுங்க..”

“....................”

“தட்ஸ் குட் டு நோ சார்.. அடுத்த ஸ்டெப் எடுத்திருங்க..”

“....................”

“உங்க எக்ஸ்ப்பீரியன்ஸ்ல பார்க்காத பொலிட்டிக்கல் ப்ரஷரா.. அரெஸ்ட் பண்ணிடுங்க சார்.. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்..”, ஸ்திரமாக வெளிவந்தது செல்வியின் குரல்..

“....................”

“தென் ஓகே சார்.. வேலையை முடிச்சுட்டு எனக்கு ஒரு மெசேஜ் மட்டும் பண்ணிடுங்க..”, என்றவள் போனைக் கட் செய்ய.. அவளது அந்த நிமிர்வு ஆளுமை என அனைத்தும் அந்த நேரத்திலும் பிரமிக்க வைத்தது சமுத்திராவை..!!

முத்திராவுடன் செல்வியும் மதுரைக்குச் சென்ற விஷயம் ஏமாற்றத்தை அளித்திருந்தது பிரஜித்திற்கு..!!

தனது வீட்டிற்கு அவனுக்குச் செல்லப் பிடிக்கவில்லைதான்.. இருந்தும் என்ன செய்ய.. தாய்க்காக அங்கு செல்ல வேண்டுமல்லவா..??

சோர்ந்துபோய் வீடு சேர்ந்திருந்தான் அவன்..!!

வழக்கம்போல் அவனது தந்தை ஹாலில் அமர்ந்து நாட்டாமை செய்துகொண்டிருக்க.. தாய் தனது உலகமான அடுக்களையில் குடியேறி இருந்தார்..!!

எரிச்சலாகவும் கோபமாகவும் வந்தது அவனுக்கு..!! அதைக்காட்டிடத்தான் அவனக்கு வழி எதுவும் அமையவில்லை..!!

தந்தையின் முகத்தை பார்க்கவே பிடிக்காதவன்போல் மாடிப்படிகளை அவன் ஏறத்துவங்க.. கிட்சனிலிருந்து, “தம்பி.. என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட..??”, என்று கேட்டபடி வெளிப்பட்டார் பிரஜித்தின் அம்மா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.